இலங்கை

விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி! பொலிசார் விசாரணை

வவுனியா, மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டைப் பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து மன்னார் வீதி வழியாக இளைஞன் ஒருவர் மோட்டர் சைக்கிளில் சென்ற போது, குறித்த மோட்டர் சைக்கிள் 4ம் கட்டைப் பகுதியில் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவத்தில […]

இலங்கை

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் சிறைதண்டனை 5 வருடத்திற்கு ஒத்திவைப்பு

  • July 21, 2023
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 15 இந்திய கடற்றொழிலாளருக்கு, 18 மாத சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று, அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட போது, கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி இந்திய கடற்றொழிலாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அன்றைய தினமே நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமையை அடுத்து, அவர்களை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை […]

இலங்கை

வவுனியாவில் துப்பாக்கிச்சூடு -ஒருவர் பலி!

  • July 21, 2023
  • 0 Comments

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (21.07) இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த அழகையா மகேஸ்வரன் என்ற 58 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை

வவுனியாவில் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

வவுனியா, ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இன்று (21) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீ பரம்பல் ஏற்பட்டதை அவதானித்த அங்கு கடமையில் இருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கும், வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கினர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் […]

உலகம்

பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் டெங்கு வைரஸ் – WHO எச்சரிக்கை!

  • July 21, 2023
  • 0 Comments

டெங்கு காய்ச்சல் அபாயம் அதிகரிப்பதற்கு காலநிலை மாற்றம் ஒரு காரணியாக உள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம்  எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக 2023-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் ஏறக்குறைய சாதனை அளவை எட்டக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கொசுக்களால் பரவும் நோய்த்தொற்றின் விகிதங்கள் உலகளவில் அதிகரித்து வருவதாகவும், 2000 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு எட்டு மடங்கு அதிகமாக வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்திய நிபுணர் டாக்டர் ராமன் வேலாயுதன் கருத்துப்படி, உலக […]

இலங்கை

தமிழினத்தை சீண்ட வேண்டாம் – செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை!

  • July 21, 2023
  • 0 Comments

சரத் வீரசேகர  இனவாதம் கக்குவதை  தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்ற (21) இடம்பெற்ற வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்ட மூல விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்த பேசிய அவர், சரத் வீரசேகர  அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இடமளிக்க போவதில்லை என்கிறார். அதே போல் சமஸ்டியை வழங்க முடியாது என்கின்றார். குருந்தூர் மலையில் தமிழர் வழிபாடுகளை நடத்த முடியாது என்கின்றார். […]

இந்தியா

மணிப்பூரை அடுத்து மேற்கு வங்காளத்திலும் அரங்கேறிய கொடூரம்; பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்திய 40 பேர்!

  • July 21, 2023
  • 0 Comments

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள், நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்து வரும் நிலையில், மேற்கு வங்காளத்திலும் இதேபோன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேங்கு வங்காள மாநிலத்தில் கடந்த 8ம் திகதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது, திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் ஒரு பெண் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். ஹவுரா மாவட்டத்தில் உள்ள பஞ்சலா பகுதியில் திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த 40 பேர் தன்னை […]

அறிந்திருக்க வேண்டியவை உலகம் பொழுதுபோக்கு

பூகம்பம், தீ, வெள்ளம்!! எல்லோரும் அழிய போறாங்க.. தீர்க்கதரிசியின் அதிர்ச்சி செய்தி….

  • July 21, 2023
  • 0 Comments

பாபா வாங்கே – இவர் பல்கேரியாவை சேர்ந்தவர்.. கண்பார்வையற்றவரும் கூட.. 85ம் வயதில் 1996-ம் வருடம் இறந்துவிட்டார்.. பல்கேரிய நாஸ்டர்டாமாக இவர் இப்போதுவரை உலக மக்களால் மதிக்கப்படுகிறார். 12 வயதில் பார்வையை இழந்தவுடனேயே உலகில் நடக்க கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல துவங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து சொன்னவர்.. இவர் சொன்னதில் 85 சதவீதத்துக்கும் பலித்தும் உள்ளது.. அவைகளில் பல ஒவ்வொரு கால கட்டத்திலும் நடந்தும் […]

இலங்கை

கடுமையான வானிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் சீனா!

  • July 21, 2023
  • 0 Comments

சீனா தீவிர வானிலை மாற்றங்களை எதிர்கொள்கிறது.  சீனாவின் பல்வேறு பகுதிகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பெருமளவான மக்கள் வெளியேற்றப்பட்டனர். பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் உச்ச மழைக்காலம் பொதுவாக ஜூலை பிற்பகுதியில் நிகழ்கிறது, ஆனால் இம்முறை ஜுலை மாதத்திற்கு முன்னதாக கடுமைய மழை, மற்றும் வெப்பத்தையும் எதிர்கொண்டது. வடமேற்கு ஜின்ஜியாங் மற்றும் அண்டை மாநிலமான கன்சு மாகாணம் போன்ற உள்நாட்டுப் பகுதிகள் 35 டிகிரி செல்சியஸ் (95 டிகிரி பாரன்ஹீட்) மற்றும் அதற்கு […]

ஐரோப்பா

ஆட்சியை இழக்கும் அபாயம்! இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு ரிஷி சுனக் கருத்து

இரண்டு இடைத்தேர்தல் தோல்விகளை சந்தித்தாலும், அடுத்த பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றிபெற முடியும் என்று ரிஷி சுனக் வலியுறுத்தியுள்ளார். இந்த இடைத் தேர்தல் முடிவுகள் ரிஷி சுனக்கிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி அடைவது நிச்சயம் என்றே கூறுகிறார்கள். பிரித்தானியாவில் நடைபெற்ற மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்துள்ளது. மேற்கு லண்டனில் உள்ள உக்ஸ்பிரிட்ஜ் தொகுதியில் மட்டும் கன்சர்வேடிவ் […]