ஐரோப்பா

பிரித்தானியாவின் செவெனோக்ஸ் மாவட்ட சபைக்கு தெரிவான முதல் இலங்கை பெண்

  • May 7, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் செவெனோக்ஸ் மாவட்ட சபைக்கு இலங்கைப் பெண் தினுஷா மனம்பேரி தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் பிரித்தானிய பசுமைக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அவர், செவெனோக்ஸ் மாவட்ட சபைக்குத் தெரிவான முதல் இலங்கைப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன்போது அவருடன் போட்டியிட்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான லாரா மாக்ஸ்டன், மார்க் லிண்டோக் ஆகியோரும் இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், இலங்கைப் பெண்ணான தினுஷா மணம்பேரி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஷானி என்ற பெயரை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

இங்கிலாந்து உள்ளுராட்சி மன்ற தேர்தல் : தோல்வியை தழுவிய ஆளும் கட்சி!

  • May 7, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி அதிக ஆசனங்களை  பெற்று வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டனின் ஆளும் பழைமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சி பாரிய தோல்விளைத் தழுவியுள்ளது. இங்கிலாந்தின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனாக் கடந்த வருடம் பதவியேற்ற பின்னர் அவரின் கட்சி எதிர்கொண்ட முக்கிய தேர்தல் இதுவாகும். வெள்ளிக்கிழமை முதல் வெளியான பெறுபேறுகளின்படி பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான ஆளும் பழைமைவாதக் கட்சி 40 இற்கும் அதிகமான […]

இலங்கை

12 மில்லின் ரூபாய் பெறுமதியான போதை பொருளை கடத்திய இருவர் கைது!

  • May 7, 2023
  • 0 Comments

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் உள்ள குஞ்சுக்குளம் பகுதியில் வைத்து 12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மன்னார்,  தள்ளாடி இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர் பயணித்த காரை இராணுவ புலனாய்வு பிரிவினர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதன்போது வாகனத்தினுள் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த போதைப்பொருள் 12 மில்லியன் […]

இலங்கை

விரைவில் எல்லை நிர்ணயம் குறித்த இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய

  • May 7, 2023
  • 0 Comments

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கிட்டத்தட்ட 400 முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். குறித்த பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்து வருவதாகவும்,  விரைவில் அவை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த மாதம் தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து,  தமது முன்மொழிவுகளைச் சமர்பிப்பதற்கு காலவகாசமும் வழங்கப்பட்டது. குறித்த முன்மொழிவுகளை தேசிய எல்லை நிர்ணயக் குழு பரிசீலித்து […]

இலங்கை

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் இருவர் பலி!

  • May 7, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற, இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வகுப்புக்கு செல்வதாக சனிக்கிழமை மாலை கூறிச்சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் இருந்து இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் 16 வயதுடைய மாணவர்கள் என கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (16), இருதயபுரத்தினை சேர்ந்த […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றமுடியாது – சவேந்திர சில்வா

  • May 7, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அடிக்கல் நட்டிருந்தார். தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சவேந்திர சில்வா  […]

ஆசியா

வயதாகிறது இன்னும் ஒரு காதலி இல்லை.. 71m புத்தரிடம் ஸ்பீக்கரில் வேண்டிய இளைஞர்!

  • May 7, 2023
  • 0 Comments

71 மீட்டர் உயரம் கொண்ட புத்தரிடம் தனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேண்டும், 11 கோடி ரூபாய் பணம் வேண்டும் என கேட்டு சீனர் ஒருவர் ஸ்பீக்கர் மூலம் கத்தி வேண்டி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிசுவான் மாகாணத்தில் உள்ளது 71 மீட்டர் உயரம் கொண்ட புத்தர் சிலை. இது டாங் அரசர்களால் கட்டப்பட்டது. உலகின் மிகவும் பெரிய புத்தர் சிலை என அறியப்படுகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் […]

இந்தியா

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • May 7, 2023
  • 0 Comments

மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் படிப்படியாக அமைதி திரும்பி வருகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் எஸ்.டி. அந்தஸ்து கோரும் மேதே சமுதாய மக்களுக்கு எதிராக குகிஇ நாகா உள்ளிட்ட பழங்குடி மக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதன் காரணமாக கடந்த 3-ம் தேதி மணிப்பூரில் மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. அந்த மாநிலத்தில் 10 மலைப் பகுதி மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் மேதே […]

இலங்கை

மன்னர் சார்லஸிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்வி!

  • May 7, 2023
  • 0 Comments

இலங்கைக்கு மீண்டும் விஜயம் மேற்கொள்வதற்கு விருப்பம் உள்ளதா என பிரித்தானிய மன்னர் சார்ல்ஸிடம் ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்வியை லண்டனில் அவரை சந்தித்தபோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எழுப்பியுள்ளார். மீண்டும் ஒருமுறை இலங்கை வருகின்றீர்களா நான் உங்களிற்கு அழைப்பு விடுக்கலாமா என ஜனாதிபதி ரணில், மன்னர் சார்ல்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதேவேளை, அதற்கு மன்னர் சார்ல்ஸ் சாதகமாக பதிலை அளித்துள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் 3 கொரோனா மரணங்கள் பதிவு!

  • May 7, 2023
  • 0 Comments

இலங்கையில் மேலும் 3 கொவிட் 19 மரணங்கள் நேற்று (6) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை> தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் முககவசங்களை பயன்படுத்துவது நன்மை பயக்கும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You cannot copy content of this page

Skip to content