இலங்கை

வேலை நிறுத்தத்தை கைவிட்ட ரயில்வே சாரதிகள்!

  • July 24, 2023
  • 0 Comments

ரயில்வே சாரதிகள் தனது வேலை நிறுத்த போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளனர. ரயில்வே அதிகாரிகளுடனான மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயந்திர சாரதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்று (23.07) மாலை முதல் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன. பல புதிய ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கான புகையிரத திணைக்களத்தின் முயற்சிகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

திருமலையில் கடற்கரை மற்றும் பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு

  • July 24, 2023
  • 0 Comments

திருகோணமலை நகரை அன்மித்த கடற்கரை மற்றும் பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் இன்று (24) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஏ.பீ. மதன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் நகர சுத்திகரிப்பு மாத்திரமல்லாது கடற்கரை மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்கள் அனைத்து இடங்களிலும் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் திருகோணமலை டைக் வீதியில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

டுவிட்டரின் புதிய லோகோ! எலான் மஸ்க் அதிகாரபூர்வ அறிவிப்பு

உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் ட்விட்டரின் சின்னமான பறவை சின்னத்தை X என மாற்றி இருப்பதை அதிகாரபூர்வ அறிவித்துள்ளார். எலான் மஸ்க் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது திட்டங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இன்று காலை அமெரிக்க நேரப்படிTwitter.comஐ X.com என சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ளார். டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை  காணலாம்.  

இலங்கை

ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : வலுவான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக பந்துல உறுதி!

  • July 24, 2023
  • 0 Comments

ரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக அமைச்சரவை வலுவான தீர்மானங்களை எடுக்கும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தொடரூந்து பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பில் இன்று (24.07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்,  “பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் பொது முகாமையாளரிடம் பேசி தீர்வு காணுங்கள் என புகையிரத திணைக்களத்திற்கு கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன்  கடந்த […]

இலங்கை

பொதுச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் – இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

  • July 24, 2023
  • 0 Comments

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழுள்ள வணிக செயலகத்தின் பொதுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த அலுவலகம் தற்போது கொள்ளுப்பிட்டி அனகாரிக தர்மபால மாவத்தையில்  தற்காலிகமாக இயங்கி வருகின்றது. இதனை கொழும்பு 10 மருதானை வீதி, 79 டெக்னில் சந்தியில் அமைந்துள்ள வளாகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூலை 28 முதல் ஜூலை 31 வரை பொதுமக்களுக்கான சாதாரண சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அவசரகால சேவைகள் ஆன்லைனில் பராமரிக்கப்படுகின்றன, அதற்காக […]

இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (ஜூலை 24) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334.55 ரூபாவாகவும், கொள்வனவு விலை 334.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. வளைகுடா நாணயங்கள் உட்பட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

ஜவானில் ஸ்டைலிஷ் வில்லனாக விஜய் சேதுபதி…

  • July 24, 2023
  • 0 Comments

தமிழில் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இப்படம் தேசிய விருதும் வென்றது. இப்படத்திற்கு பின்னர் பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தர்மதுரை, சேதுபதி, 96 என தொடர்ந்து ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த விஜய் சேதுபதியை வில்லனாக அறிமுகப்படுத்தியது கார்த்திக் சுப்புராஜ் தான், அவர் இயக்கிய பேட்ட படம் மூலம் வில்லனாக எண்ட்ரி கொடுத்தார் மக்கள் செல்வன். பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த பின்னர் […]

மத்திய கிழக்கு

காங்கோவில் மகனின் இறுதி சடங்கில் 9குழந்தைள் உள்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை!

  • July 24, 2023
  • 0 Comments

காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார்.இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 9 குழந்தைகள் […]

இலங்கை

மதுபானசாலை அருகே பொலித்தீன் உறையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு..!

  • July 24, 2023
  • 0 Comments

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபான சாலை அருகே ஓடும் அருவியில் திங்கட்கிழமை (24) சிசுவின் சடலம் கிடப்பதை கண்ட மக்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். அப் பகுதிக்கு சென்ற பொலிஸார் அங்கு பாதுகாப்பு வேலி அமைத்து சிசுவின் சடலம் பற்றி புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ஹட்டன் நீதிமன்ற நீதிவான் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவம் இடத்திற்கு வருகை தந்து கைரேகைகள் பதிவு செய்ய உள்ளதாக நோர்வூட் […]

செய்தி

ரோட்ஸ் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ – 10 ஆயிரம் பிரித்தானியர்கள் சிக்கி தவிப்பு!

  • July 24, 2023
  • 0 Comments

கிரேக்கத் தீவின் சில பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்ற நிலையில், அங்கு 10 ஆயிரம் பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அலுவலக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். பயண நிறுவனமான Tui ரோட்ஸிலிருந்து “மூன்று பிரத்யேக விமானங்களில்” பிரித்தானிய சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தற்போது ரோட்ஸில் ஏழாயிரம் தொடக்கம் 10 ஆயிரம் வரையிலான சுற்றுலா பணிகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.