சர்வகட்சி மாநாட்டிற்கான திகதி அறிவிப்பு!
எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயேச்சைக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வகட்சி மாநாட்டில் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.