இலங்கை

நீரிழ் மூழ்குபவர்களை கையால் பிடித்து இழுக்காதீர்கள்!

  • July 25, 2023
  • 0 Comments

உலக நீரில் மூழ்கி தடுப்பு தினம் இன்று (25) அனுஷ்டிக்கப்படுகிறது. நீரில் மூழ்குதல் உள்ளிட்ட சிக்கல்களால் இலங்கையில் ஒவ்வொரு 8 மணித்தியாலத்திற்கும் மூன்று மரணங்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்தியர்கள் நிபுணர்கள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,  வயது முதிர்ந்த ஒருவர் இறப்பதற்கு ஒரு அடி நீர்மட்டம் கூட போதுமானது. இலங்கையில் வருடாந்தம் 10,000 முதல் 12,000 பேர் வரை […]

இலங்கை

யாழில் புதிய அதிபர் நியமனத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

  • July 25, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரி புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக பாடசாலை மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வேலணை மத்திய கல்லூரி பிரதான நுழைவாயில் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(25) காலை ஒன்று கூடிய மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் சில ஆசிரியர்களுக்கும் இடையே முரண்பாடான நிலைமை ஏற்பட்டதாக தெரியவருகிறது. யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரிக்கு சைவப் பாரம்பரியமிக்க அதிபரொருவரை நியமிக்குமாறு கோரி பழைய மாணவர்கள் அப்பகுதி மக்கள் கடந்த திங்கட்கிழமை […]

இலங்கை

மெனிங் சந்தையில் போராட்டம் நடத்துவற்கு தடை உத்தரவு பிறப்பிப்பு!

  • July 25, 2023
  • 0 Comments

பேலியகொட மெனிங் சந்தையில் நாளை (26) நடத்தப்படவிருந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் நீதிமன்றம் தடை  உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு அளுத்கடை  நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (27.05) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேலியகொட மெனிங் சந்தையில் விற்பனை நிலையங்கள் வெளியாட்களுக்கு வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தி, நாளைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு பொது தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல் துறையினர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். அதன்படி, மானிங் மார்க்கெட் பொது வர்த்தக சங்கத்தின் […]

இலங்கை

கொழும்பு மட்டக்குளி வழியாக பயணிப்போருக்கு ஓர் அறிவுறுத்தல்!

  • July 25, 2023
  • 0 Comments

கொழும்பு, மட்டக்குளி – சீம மலகய  பகுதியூடான போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில், பயணிக்கும் 145 பேருந்தின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். மட்டக்குளிய பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் இரண்டு பேரூந்து சேவைகளை ஒன்றிணைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்குளிக்கும் சீம மாலகவுக்கும் இடையில் சேவையாற்றும் பேருந்தின் ஊழியர் ஒருவர் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டார். 145 வழித்தடத்தில் எந்தப் பேருந்தும் ஓடவில்லை எனவும் 260, 155 ஓடாததற்குக் காரணம், ஒன்றாக […]

இலங்கை

ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக இலங்கையர் தெரிவு!

  • July 25, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக இலங்கையின் புகழ்பெற்ற வானியற்பியல் விஞ்ஞானி ரே.ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யேல் பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் இயற்பியலைப் படித்தார், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி வேட்பாளராக உள்ளார். மேலும் சூரிய குடும்பங்களின் பன்முகத்தன்மை, தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்து விரிவான ஆராய்ச்சியை நடத்தி விருது பெற்ற அறிவியல் எழுத்தாளரும் ஆவார். நாசா அனுப்பிய ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பில் கிரகங்களின் ஒளி மற்றும் குணாதிசயங்களைப் படம்பிடிக்கும் அகச்சிவப்பு நிறமாலை […]

இலங்கை

டயனா கமகேவின் மனு குறித்த வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டது!

  • July 25, 2023
  • 0 Comments

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து  உத்தரவிடுமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த ரிட் மனுவை மீள் பரிசீலனை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால், அவருடைய உறுப்புரிமை இரத்து செய்யப்பட வேண்டும் எனக் கோரி ஓஷல ஹேரத் என்ற சமூக ஆர்வலர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதன்படி  தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் எனவும், தனது நாடாளுமன்ற உறுப்பினர் […]

பொழுதுபோக்கு

உலகிலேயே 5ஆவது பெரிய வைரம் தமன்னாவிடம் உள்ளதாம்… கொடுத்தது இந்த பிரபலம் தான்…

  • July 25, 2023
  • 0 Comments

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை தமன்னாவிடம் உலகிலேயே 5-வது பெரிய வைரம் உள்ளதாம். 16 வயதில் கேடி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான தமன்னா 18 வயதை தாண்டியதும் கிளாமர் பக்கம் தாவினார். இதனால் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் தமன்னா. தமிழைப் போல் தெலுங்கு மொழியில் தமன்னாவுக்கு அதிக மவுசு இருந்தது. சமீப […]

இலங்கை

இலங்கையில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்!

  • July 25, 2023
  • 0 Comments

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000 கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய (25.07) நிலவரப்படி நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,049 என டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரையில் 52 டெங்கு அபாயப் பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மே மாதத்தில் 9,696 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த போதிலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அது படிப்படியாகக் குறைந்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. ஜூன் […]

ஆசியா

ஹிஜாப் அணியாத பெண் ஊழியர்கள் ;ஈரானில் மூடப்பட்ட பிரபல நிறுவனம்!

  • July 25, 2023
  • 0 Comments

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண் ஊழியர்களின் புகைப்படங்களை பதிவிட்ட டிஜிகாலா ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை மூட ஈரான் அரசாங்கம் உத்தரவிட்டது. இஸ்லாமிய நாடான ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இதனை கண்காணிக்க தனி பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அமேசான் போன்ற நிறுவனங்களுடன் ஈரான் மக்களுக்கு பெரியளவில் தொடர்பில்லை.இதன் காரணமாக , ஈரானின் அமேசான் என்று அறியப்பட்ட டிஜிகாலா ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அங்கு […]

இலங்கை

கொழும்பை முற்றுகையிட்ட தொழிற்சங்கங்கள் : களமிறக்கப்பட்ட பொலிஸார்!

  • July 25, 2023
  • 0 Comments

பொலிஸாரின் உத்தரவையும் மீறி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (25.07) முன்னெடுத்துள்ளனர். தொழிலாளர்களை அடிமையாக்கும் சட்டமூலத்தை மீளப்பெறுஇ ஊழியர் சேமலாப நிதியம் ஊழியர் நம்பிக்கை நிதியம் விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வுதியம் கொள்ளையை நிறுத்து எஎன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே குறித்த ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு புறக்கோட்டையின் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி சந்தியில் இருந்து காலி முகத்திடல் நுழைவு வீதி தடைப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள […]