ஐரோப்பா

பிரதமர் நெதன்யாகு எடுத்த முடிவால் கலவர பூமியான இஸ்ரேல்…

  • July 25, 2023
  • 0 Comments

நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறைக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டமானது ஆயிரக்கணக்கான மக்களை வீதியில் இறங்கி போராட வைத்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிய நீதித்துறை மறுசீரமைப்புக்கான முதல் மசோதாவுக்கு இஸ்ரேல் பாராளுமன்றம் திங்களன்று ஒப்புதல் அளித்தது.சில அரசாங்க முடிவுகளை நியாயமற்றதாகக் கருதினால் அவற்றை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களை இந்த மசோதா கட்டுப்படுத்தும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் […]

மத்திய கிழக்கு

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • July 25, 2023
  • 0 Comments

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்  நிலத்தடியில் 12 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் 5.5 ரிக்டர் அளிவில் பதிவாகியதாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அறிவியல் & தொழில்நுட்பம்

விரைவில் நிலவை நெருங்கும் சந்திரயான்-3! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சந்திரயான்-3-ன் உயரத்தை மேலும் அதிகரிக்க இன்று பிற்பகல் 2.30 மணியளவில் 5-வது கட்டமாக சந்திரயான் விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. சந்திரயான் சுற்று வட்டப்பாதை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்து இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்கலம் 1,27,609 கிமீ X 236 கிமீ சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுகளுக்குப் பிறகு அடையப்பட்ட சுற்றுப்பாதை உறுதிப்படுத்தப்படும், ”என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்கலம் ஆகஸ்ட் 1 ஆம் திகதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து வெளியேறி நிலவை நோக்கி […]

பொழுதுபோக்கு

ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் டிக்கெட்டுகள் 15 வினாடியில் மாயம்… அதிரடியாக களமிறங்கினார் ரஜினி

  • July 25, 2023
  • 0 Comments

ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் வழங்கும் ஜெயிலர் பட ஆடியோ லான்சை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இலவசமாக 1,000 டிக்கெட் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்சன் தயாரிப்பில் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜெயிலர் படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே பெரிதளவு பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இதன் ஆடியோ லான்ச் இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளிவந்தது. அதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ், இந்நிகழ்ச்சியை ஆயிரம் […]

செய்தி

சேவையில் இருந்து அகற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டன!

  • July 25, 2023
  • 0 Comments

சேவையில் இருந்து நீக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 175 பேருந்துகள் திருத்தப்பட்டு மீண்டம் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (24.07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக உதிரி பாகங்கள் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக அகற்றப்பட்ட பேருந்துகளே இவ்வாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளன. கடந்த 03 வருடங்களுக்கு மேலாக சேவையில் ஈடுபடாத 852 பேரூந்துகளில் 400 பேரூந்துகளை சீர்செய்யும் திட்டமொன்று […]

இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளருடன் ஜுலி சங் கலந்துரையாடல்!

  • July 25, 2023
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் தகாஃபுமி கடோனோவை இன்று (25.07) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த விடயத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜுலி சங், இதன்போது இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான ஆதரவை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். I met with Takafumi Kadono, the new Country Director for Sri Lanka […]

அறிந்திருக்க வேண்டியவை இலங்கை

மண்டைதீவு வைத்தியசாலையில் இலவச மருத்துவ முகாம்

  • July 25, 2023
  • 0 Comments

யாழ். மண்டைதீவு வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் அனுசரனையில் இலவச மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட உள்ளது. இந்த இலவச மருத்துவ முகாம், ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்டைதீவு வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த மருத்துவமுகாமில் இலவச நீரிழிவு பரிசோதனை செய்ய விரும்பியவர்கள் 12 மணித்தியாலங்கள் நீர் மற்றும் உணவு என்பவற்றை எடுத்துக்கொள்ளாமல் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த முகாமில் இலவச நீரிழிவு பரிசோதனை […]

இலங்கை

கடும் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபாய்!

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (ஜூலை 25) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.16 ரூபாவாகவும், கொள்வனவு விலை 323.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 256.99 ரூபாவாகவும், கொள்வனவு விலை 243.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.  

ஐரோப்பா

இஸ்ரேல் சோதனைச்சாவடி மீது தாக்குதல்; ஆயுதக்குழுவினர் மூவர் சுட்டுக்கொலை

  • July 25, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய […]

வட அமெரிக்கா

கனடாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் சடலம் மீட்பு

  • July 25, 2023
  • 0 Comments

நோவாஸ் ஸ்கோட்டியா மழை வெள்ளத்தில் காணாமல் போன நான்கு பேரில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ள நிலைமைகளினால் நான்கு பேர் காணாமல் போயிருந்தனர்.இவ்வாறு காணாமல் போனவர்கள் இரண்டு பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாகனங்கள் நீரில் மூழ்கிய போது அதிலிருந்து தப்பிக்க முடியாத சிலர் இவ்வாறு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மீட்பு பணியாளர்கள் […]