உலகம் முக்கிய செய்திகள்

உலகை உலுக்கும் வெப்பம் – எச்சரிக்கை வெளியிட்ட விஞ்ஞானிகள்

  • July 27, 2023
  • 0 Comments

உலகின் பல பகுதிகளில் இம்மாதம் உலுக்கிய வெப்பத்திற்கு மனிதர்களே காரணம் என நீண்ட ஆய்வின் பின்னர் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனிதர்கள் உண்டாக்கிய பருவநிலை மாற்றம் இல்லாவிட்டால் பூமியில் இத்தகைய கடும்வெப்பம் ஏற்படும் சாத்தியம் மிகமிகக் குறைவு என்று அவர்கள் கூறினர். ஐரோப்பாவில் வெப்பம் 2.5 பாகை செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் வெப்பம் 2 பாகை செல்சியஸ் உயர்ந்தது. சீனாவில் வரலாறு காணாத வெப்ப உயர்வுக்கு உலகவெப்பமே முக்கியக் காரணமாகும். கடும்வெப்பத்தால் உலகின் பல பகுதிகளில் உடல்நலப் பாதிப்புகள் […]

இலங்கை

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் நீக்கம்

  • July 27, 2023
  • 0 Comments

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அலுவலகம் தீர்மானம் எடுத்துள்ளது. உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் மொபைல் போன் கட்டணங்களுக்கான சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்திற்கான செலவு விபரங்களை முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் செயலாளர், ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பித்த நிலையில் சலுகைகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. சட்டமா அதிபரின் அறிவுறுத்தலைப் பின்பற்றி, ஜனாதிபதி அலுவலகம் இனிமேல் முன்னாள் ஜனாதிபதிகளின் எந்தவொரு செலவையும் தீர்க்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்ட AI தொழில்நுட்பம்

  • July 27, 2023
  • 0 Comments

AI தொழில்நுட்பத்தை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தினால் மனிதர்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா பொதுச் செயலாளர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். என்னதான் உலகெங்கிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் பல நன்மைகள் ஏற்படும் என விவாதித்து வந்தாலும், அதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் தீமைகள் பற்றிய பேச்சுகளையும் நம்மால் காண முடிகிறது. ஏனென்றால் எந்த அளவுக்கு மனித குலத்திற்கு நன்மை புரியும் ஆற்றல் இந்தத் தொழில்நுட்பத்திற்கு இருக்கிறதோ, அதைவிட அதிகமாக […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள அபாயம் – உடனடி நடவடிக்கையில் தீயணைப்பு படையினர்

  • July 27, 2023
  • 0 Comments

பிரான்ஸின் தெற்கு பகுதியில் காட்டுத் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் தெற்கு பகுதி நோக்கி நோக்கி தீயணைப்பு படையினர் விரைந்துள்ளர். முன்னெச்சரிக்கையாக அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இல் து பிரான்சின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 28 வாகனங்களும் 79 தீயணைப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். Bouches-du-Rhône மாவட்டத்தில் உள்ள காடுகளில் காட்டுத் தீ பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Seine மற்றும் Marne மாவட்டங்களுடன் Yvelines, Essonne மற்றும் Val d’Oise ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த […]

ஆசியா

சிங்கப்பூரில் முடிவுக்கு வரும் 3G சேவை – 2024 முதல் இயங்காது

  • July 27, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் 3G சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளன. M1, Singtel மற்றும் Starhub ஆகிய சேவை நிறுவனங்கள் இதனை தெரிவித்துள்ளன. குரல், செய்தி மற்றும் தரவு உட்பட 3G சேவைகளை அந்நிறுவனங்கள் வழங்காது என தெரிவித்துள்ளன. புதிய தலைமுறைகளுக்கு ஏற்ப 5G அதிவேக இணைய சேவைகள் சிங்கப்பூரில் அறிமுகமாகியுள்ளது. இதனால் அதிகம் பயன்படுத்தப்படாத பழமையான 3G சேவை இனி இயங்காது என்று மூன்று தொலைத்தொடர்பு […]

ஐரோப்பா

ஜெர்மனியில் நாடற்ற வெளிநாட்டவர்கள் – வெளிவரும் முக்கிய தகவல்

  • July 27, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் நாடு அற்றவர்களாக 30 ஆயிரம் பேர் வரை இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனிய நாட்டிற்கு பலர் அகதிகளாக வருவது வழக்கமாகியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் நாடற்ற மக்களாக 30 ஆயிரம் பேர் வரை இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. குறிப்பாக பலஸ்தீனம் மற்றும் பர்மாவின் ஒகிஸ்ஷா பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் இவ்வாறு நாடற்ற பிரஜைகளாக கணிக்கப்படுவதாக தெரியவந்திருக்கின்றது. இந்நிலையில் மேலும் 97 ஆயிரம் பேர் ஜெர்மனியில் வாழுகின்ற வெளிநாட்டவர்களுடைய பிரஜா உரிமை பற்றி தெளிவாக தெரியவில்லை என்பது […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – கணவரை தீயிட்டு கொலை செய்த மனைவி

  • July 27, 2023
  • 0 Comments

மொரட்டுவ – மொரட்டுமுல்ல பகுதியில் கணவரை தீயிட்டு கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 18 ஆம் திகதி கணவன் மற்றும் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவி கணவரை எரியூட்டியுள்ளார். தீக்காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த கணவர் கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் அவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி வட அமெரிக்கா

பணிப்பெண்ணை waiter என்று அழைத்தமையால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

  • July 26, 2023
  • 0 Comments

கயானாவுக்குச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், பயணிக்கும் பணியாளர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக நியூயார்க் நகரத்தில் உள்ள JFK விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 2557 என்ற இலக்கம் கொண்ட அந்த விமானம் கயானாவின் ஜார்ஜ்டவுன் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கயானாவைச் சேர்ந்த பயணி ஜோயல் கன்ஷாம் சம்பந்தப்பட்ட சம்பவத்தால் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உள்ளூர் தகவல்களின்படி, சமீபத்தில் முதுகெலும்பு அறுவை சிகிச்சையின் காரணமாக மேல்நிலைப் பெட்டியில் தனது சாமான்களை சேமித்து […]

இலங்கை செய்தி

யாழில் உயிரிழந்த சிறுமிக்கு 5000 ரூபாவே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது

  • July 26, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு சம்பள காசு கொடுக்கப்படவில்லை என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த வட்டுக்கோட்டை, முதலி கோவிலடியை சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17) எனும் சிறுமி, வேலை பார்த்து வந்த வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் […]

ஆசியா செய்தி

துனிசியாவில் இந்த ஆண்டு கடலில் மூழ்கிய 901 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் மீட்பு

  • July 26, 2023
  • 0 Comments

துனிசிய கடலோர காவல்படை இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 20 வரை கடலில் மூழ்கிய புலம்பெயர்ந்தோரின் 901 உடல்களை மீட்டுள்ளது என்று நாட்டின் உள்துறை மந்திரி கமெல் ஃபெக்கி தெரிவித்தார். இது நாட்டின் கடற்கரையில் முன்னோடியில்லாத எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது. வட ஆபிரிக்கா நாடு இந்த ஆண்டு பதிவுசெய்யப்பட்ட குடியேற்ற அலைகளை எதிர்கொள்கிறது மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் இருந்து இத்தாலிய கடற்கரைக்கு செல்லும் புலம்பெயர்ந்தோரின் படகுகள் அடிக்கடி மூழ்கும் பேரழிவுகளை எதிர்கொள்கிறது. துனிசியா, ஆப்பிரிக்கா […]