FIFA கால்பந்தாட்ட போட்டியில் விளையாட இலங்கை அணிக்கு அனுமதி!
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர்பிலான ஆசிய பிராந்தியத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாட இலங்கை உதைபந்தாட்ட அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. FIFA உலகக் கோப்பை தகுதிச் சுற்றுகள் 2023 அக்டோபர் 12 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்னதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் […]