இலங்கை

அரசாங்கம் உள்ளக முரண்பாடுகளை தீர்க்க வேண்டும்!

  • July 28, 2023
  • 0 Comments

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் காணப்படும் உள்ளக முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு  ஸ்திரமான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சு.க. தலைமையத்தில் நேற்று (27.07)  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் முதலில் அதன் நிலைப்பாட்டை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அதேபோன்று எந்த தேர்தலானாலும் அதனை உரிய […]

இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம் பதிவு!

  • July 28, 2023
  • 0 Comments

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இன்று (28.07) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சியாங் மாவட்டத்தில் உள்ள பாங்கின் நகரில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூலை 22 அன்று தவாங்கில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக அருணாச்சலப்பிரதேசத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

நாசாவின் திடீர் தீர்மானம் – செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் நேரத்தைக் குறைக்க திட்டம்

  • July 28, 2023
  • 0 Comments

அணுசக்தியால் இயங்கும் விண்கலத்தைச் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் நேரத்தைக் குறைக்கும் நோக்கிலேயே இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு 30 கோடி மைல் பயணம் செய்ய ஏழு மாதங்கள் ஆகின்றன. ஆனால் அணுசக்தியால் விண்கலம் இயக்கப்பட்டால் இந்த நாட்களைக் குறைக்கலாம் என நாசா திட்டமிட்டுள்ளது. இதன் முன்னோடியாக 2025ன் பிற்பகுதியில் அல்லது 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் அணுசக்தியால் இயங்கும் விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அணு சக்தியால் விண்கலம் இயக்கப்பட்டால் காலவிரயம் […]

இலங்கை

இன்று இலங்கை வருகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி!

  • July 28, 2023
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று (28.07) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இன்று பிற்பகல் இலங்கை வருவார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது பப்புவா நியூ கினியா விஜயத்தின் போது இந்த நாட்டிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்த விஜயத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும் […]

மத்திய கிழக்கு

குவைத்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கான விசாவில் புதிய மாற்றம்?

  • July 28, 2023
  • 0 Comments

குவைத் நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களின் விசாவிற்கான சட்டங்களில் பல திருத்தங்களை குவைத் அரசு மேற்கொள்ள இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டவர்களுக்கான இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த புதிய முன்மொழிவின்படி, ஒரு வெளிநாட்டவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் குடியிருப்பு அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், முதலீட்டாளர்களுக்கு அவர்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளின் அடிப்படையில் 15 ஆண்டுகள் வரை குடியிருப்பு […]

இலங்கை

வெளிநாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெருந்தொகையான இலங்கையர்கள்!

  • July 28, 2023
  • 0 Comments

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 62 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். தற்காலிக விமான அனுமதியின் கீழ் நாடு கடத்தப்பட்டவர்களை இலங்கை தூதரகம் இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளது. அவர்களில் 59 பேர் இல்லத்தரசிகள், மீதமுள்ள மூன்று பேர் ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வீட்டு சேவைக்காக ஒப்பந்த வீடுகளை விட்டு வெளியேறி, தற்காலிக விடுதிகளில் தங்கி, விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக  குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் […]

வாழ்வியல்

தண்ணீரே உலகின் முதன்மையான மருந்து – பல நோய்களை தீர்க்கும்

  • July 28, 2023
  • 0 Comments

மனிதனுக்கு சுத்தமான தண்ணீரே உலகின் முதன்மையான மருந்து. பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு நோய்க்கும் மாத்திரைகள், ஊசி தேவை என்று எண்ணுகிறார்கள். ஆனால், மாத்திரை, மருந்து இல்லாத மருத்துவம் என்றால் அது நமக்கு இறைவன் அளித்துள்ள குடிநீரே ஆகும். இந்த உலகில் எல்லா பகுதிகளிலும் மனிதனுக்குக் குடிப்பதற்கு குடிநீர் கிடைக்கிறது. இந்தத் தண்ணீரின் மகத்துவம் பல அரிய நோய்களையும் குணப்படுத்த வல்லது. கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகும் சுத்தமான நீர் ஓர் அருமருந்து. காலையில் எழுந்தவுடனே வெறும் வயிற்றில் […]

இலங்கை

நீதிமன்ற ஆவணங்களை அழிக்க மென்று தின்ற சட்டதரணி கைது!

  • July 28, 2023
  • 0 Comments

கெக்கிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள காணி வழக்கு தொடர்பில் ஆவண காப்பகத்தில் இருந்த ஆவணங்களின் இரண்டு பிரதிகளை அழித்த சட்டதரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெக்கிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றப் பதிவேட்டில் காணி வழக்கு தொடர்பான கோப்பிலிருந்து இரண்டு ஆவணங்களைக் கிழித்து வாயில் மென்று அழித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காப்பகத்தில் கடமையாற்றிய நீதிமன்ற அதிகாரிகள் நீதிமன்ற பதிவாளருக்கு அறிவித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணி இன்று (28.07)  கெக்கிராவ […]

ஐரோப்பா

ரஷ்யாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஹெலிகப்டர் விபத்து – 6 பேர் பலி – பலர் காயம்

  • July 28, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் சைபீரியாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எம்ஐ-8 ஹெலிகப்டர் தெற்கு சைபீரியாவில் உள்ள அல்டாயில் விபத்துக்குள்ளாகியுள்ளதென ரஷ்யாவின் அவசரகால அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஹெலிகப்டர் தரையிறங்கும்போது மின்கம்பியில் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்ததாகும். இந்த ஹெலிகாப்டரில் சுற்றுலாவுக்காக குழு ஒன்று பயணம் செய்துள்ளது. ஹெலிகப்டரில் மொத்தமாக எத்தனை பேர் […]

அறிந்திருக்க வேண்டியவை முக்கிய செய்திகள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மிக அதிக வெப்பம் – அறிந்திருக்க வேண்டியவை

  • July 28, 2023
  • 0 Comments

2023ஆம் ஆண்டு ஜுலை மாதமானது வெப்பநிலையில் மிக அதிக வெப்பநிலை நிலவிய மாதமாக, பதிவாகியுள்ளது. சிலவேளைகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மிக அதிக வெப்பமான மாதமாக, பதிவாகக்கூடும் என நாசாவின் காலநிலையியல் நிபுணர் கெவின் ஷ்மித் தெரிவித்துள்ளார். தரையிலும் கடலிலும் வெப்பநிலை அதிகரிப்பில் சாதனை படைக்கப்படுவதற்கு மனிதர்களுடன் தொடர்படுத்தப்படுத்தக்கூடிய காலநிலை மாற்றமே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த வெப்ப அலைகளுக்கு காலநிலை மாற்றமே காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். பருவநிலையில் இயற்கையாகவே மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனினும் […]