ஆசியா செய்தி

இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • May 11, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவ்வாறாயினும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) தலைவர் கைது செய்யப்பட்டதிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள போலீஸ் லைன்ஸ் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்றும் நாட்டின் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உமர் அட்டா பந்தியல், NAB கைது வாரண்ட் விவகாரத்தில் கான் கைது செய்யப்பட்ட இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் […]

இந்தியா விளையாட்டு

கொல்கத்தா அணியை 149 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய ராஜஸ்தான்

  • May 11, 2023
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் ஜேசன் ராய் (10 ரன்), ரஹ்மானுல்லா (18 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வெங்கடேஷ் அய்யர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 40 பந்துகளில் அரை […]

இலங்கை

காலி முகத்திடல் போராட்டத்தை தற்போது விமர்சிப்பது பயனற்றது – சுமந்திரன்!

  • May 11, 2023
  • 0 Comments

காலி முகத்திடல் ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக மாற்றியமைத்த தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உள்ளார்கள். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷர்களின் ஆதரவாளர்கள் தான் அமைதி வழி போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஆகவே போராட்டத்தை தற்போது விமர்சிப்பது பயனற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் […]

ஆசியா

ஜப்பானில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

  • May 11, 2023
  • 0 Comments

ஜப்பான் நாட்டின் தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆகப் பதிவாகியுள்ளது. அதிகாலை 4.16 மணிக்கு பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் டோக்கியோவிலும் அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்  நிலநடுக்கம் எதிரொலியால் டோக்கியோவில் உள்ள உயரமான கட்டிடங்களில் சில லிஃப்ட்கள் ஐந்து மணி நேரம் வரை நிறுத்தப்பட்டன. சிபா மற்றும் கனகாவா […]

பொழுதுபோக்கு

இளம் ஆதித்த கரிகாலனுக்கு என்னவொரு சந்தோஷம்! சியான் விக்ரம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

  • May 11, 2023
  • 0 Comments

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இளம் ஆதித்த கரிகாலனாக நடித்த நெஜமாவே சந்தோஷுக்கு சியான் விக்ரம் அன்பு பரிசை வழங்கி உள்ளார். விஜய், அஜித், நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களே இன்னமும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்காத நிலையில், இளம் நடிகரான நெஜமாவே சந்தோஷுக்கு முதல் படத்திலேயே மோதிரக் கையால் குட்டுப் பட வேண்டும் என எழுதி வைத்திருக்கிறது என சினிமா வட்டாரத்திலேயே பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரம் மிரட்டலான நடிப்பை […]

ஐரோப்பா

நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கும் இங்கிலாந்து!

  • May 11, 2023
  • 0 Comments

நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்புவதாக இங்கிலாந்தின் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் உறுதி செய்துள்ளார். இதன்படி  Storm Shadows  என அழைக்கப்படும் நீண்ட தூர ஏவுகணைகள் வழங்கப்படும் என்று அவர் ஊறுதியளித்துள்ளார். உக்ரைன் நீண்ட காலமாக இத்தகைய ஆயுதங்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது, ஆனால் அமெரிக்காவும் பிற நாடுகளும் ரஷ்யாவிற்குள் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலும்,  அவற்றை வழங்க தயாராக இல்லை. இந்நிலையிலேயே இங்கிலாந்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறித்த ஏவுகணைகள்  கிட்டத்தட்ட 200 மைல்கள் (300 கிமீ) […]

செய்தி தமிழ்நாடு

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

  • May 11, 2023
  • 0 Comments

சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுநல மருத்துவம் மகப்பேறு மார்த்தாவும் குழந்தைகள் நல மருத்துவம் கண் மருத்துவம் முடநீக்கு இயல் மருத்துவம் தோல் மருத்துவம் பல் மருத்துவம் மனநல மருத்துவம் பிரிவிற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதியவர்களுக்கான இயன்முறை சிகிச்சை பிரிவினை( Elders physiotherapy unit-னை சமூக நலன் […]

இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

  • May 11, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்,  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. அதன்படி இன்றும்இநாளையும் இரண்டு நாட்களுக்கு இந்த சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன. அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) மாலை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் குறித்த சந்திப்பில்,  நல்லிணக்க பொறிமுறைகள்,  காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்,  பயங்கரவாத தடுப்புச் சட்டம்,  காணி விவகாரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது. இதேவேளை நாளைய சந்திப்பில்,  அதிகாரப் பகிர்வு தொடர்பாக,  ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை […]

ஐரோப்பா

ஜேர்மனியில் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம்

  • May 11, 2023
  • 0 Comments

ஜேர்மன் நகரமொன்றில் அமைந்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெற்கு ஜேர்மனியிலுள்ள Sindelfingen நகரில் அமைந்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில், நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், அங்கு பணியாற்றும் ஒருவர் பலியாகியுள்ளார், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Ludwigsburg நகர் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

இலங்கை

மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

  • May 11, 2023
  • 0 Comments

மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டம் இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால்இ பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என குறிப்பிடப்படுகின்றது. யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்இ ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தனிநபர் சட்டமூலமாக அண்மையில் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

You cannot copy content of this page

Skip to content