ஆசியா

இராணுவ அணுசக்தி திட்டத்தின் வரம்பற்ற விரிவாக்கத்திற்கு அழைப்பு விடுக்கும் கிம்!

  • November 18, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றியை தொடர்ந்து ட்ரம்ப் தலைமையிலான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தனது இராணுவ அணுசக்தி திட்டத்தை “வரம்பற்ற” விரிவாக்கத்திற்கான தனது அழைப்பை புதுப்பித்துள்ளார். இராணுவ அதிகாரிகளுடனான ஒரு மாநாட்டில் பேசிய கிம், தென் கொரியாவுடன் அதன் அணுசக்தி தடுப்பு உத்திகளை புதுப்பிப்பதற்கும், ஜப்பானை உள்ளடக்கிய மூன்று வழி இராணுவ ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார். நீண்டகால ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவளித்த அமெரிக்காவையும் கிம் விமர்சித்தார். […]

செய்தி

மலேசியாவில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் செயற்கை போதைப்பொருள் பழக்கம்

  • November 18, 2024
  • 0 Comments

மலேசிய இளையர்களிடையே நிஜ போதைப்பொருள்கள் தரும் உணர்வைத் தரக்கூடிய செயற்கை போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக அந்நாட்டு போதைப்பொருள் குற்ற விசாரணைப் பிரிவு இயக்குநரான ஆணையர் கோ கோக் சின் கூறியுள்ளார். இளையர்கள் போதைப்பொருளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுடன் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். குறிப்பாக செயற்கை போதைப்பொருள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு இது இன்றியமையாதது என்று சுட்டிய அவர், அரசாங்க சார்பற்ற அமைப்புகள் ஆற்றக்கூடிய பங்கும் அதில் அடங்கும் என்று […]

இலங்கை

இலங்கை : புலமை பரிசில் பரீட்சை முடிவுகளை வெளியிட தடை!

  • November 18, 2024
  • 0 Comments

அண்மையில் முடிவடைந்த ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று (18) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை சவாலுக்கு உட்படுத்தி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்ததன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திரு.பிரிதி பத்மன் சூரசேன, திரு. அச்சல வெங்கப்புலி மற்றும் திரு.மகிந்த சமயவர்தன ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பொழுதுபோக்கு

“ராக்கயி” புது அவதாரத்தில் மிரட்டும் நயன்தாரா… மிரட்டும் டைட்டில் டீசர்

  • November 18, 2024
  • 0 Comments

லேடி சூப்பர் ஸ்டார் என கெத்தாக வலம் வரும் நயன்தாரா இன்று தன்னுடைய நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து கதையின் நாயகியாக நடித்துவரும் நயன்தாரா தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதில் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் அவர் நடிக்கும் ராக்காயி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது. கோவிந்த் வசந்தா இசையில் டீசர் ரத்தக்களரியாக உள்ளது. சிவப்பு நிற புடவை கருப்பு நிற […]

பொழுதுபோக்கு

பல வருடங்களுக்குப்பின் முன்னாள் காதலி குறித்து சல்மான் கான் ஓபன் டாக்…

  • November 18, 2024
  • 0 Comments

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். அவருக்கு இந்தியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு பிரபல தாதாவிடம் இருந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவர் முன்னாள் உலக அழகியும் அவரது முன்னாள் காதலியுமான ஐஸ்வர்யா ராயை அடித்தாக பிரபல நடிகை ஒருவர் கூறி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து இத்தனை ஆண்டுகள் கழித்து தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராய் பற்றி […]

இலங்கை

இலங்கை மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் வெற்றியடையச் செய்யப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு

  • November 18, 2024
  • 0 Comments

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணத்தைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, அந்த அதிகாரத்தை பாதுகாக்க புதிய அமைச்சர்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மக்களின் கடின உழைப்பு மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் வெற்றியடையச் செய்யும் வகையில் நல்லாட்சி இருக்க வேண்டும். “வெற்றி பெரியது, அந்த வெற்றிக்காக நம் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகள் சமமானவை.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கையின் வரலாற்றின் […]

இந்தியா செய்தி

புதுடில்லியில் காற்றில் புற்றுநோய் ஏற்படுத்தும் துகள்கள் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

  • November 18, 2024
  • 0 Comments

புதுடில்லியில் புகைமூட்டம் காரணமாகப் பாடசாலைகளை நேரடியாக வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக இணையத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன. காற்றில் PM2.5 அளவிலான தூய்மைக்கேட்டுப் பொருட்கள், உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் அளவைவிட 57 மடங்கு அதிகமாக நேற்று பதிவாயின. அவை நுரையீரல் வாயிலாக ரத்தத்தைச் சென்றடைந்து புற்றுநோயை ஏற்படுத்தும் துகள்கள். பரிந்துரைக்கப்படும் அளவைவிட இன்று அது 39 மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது. நகர் முழுவதையும் சாம்பல் நிறப் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. பிள்ளைகள் வீட்டில் இருந்தால் […]

இலங்கை

மன்னாரில் பரவும் மர்ம காய்ச்சல் – 25 இராணுவ வீரர்கள் பாதிப்பு

  • November 18, 2024
  • 0 Comments

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு காய்ச்சல் பரவியதையடுத்து, அங்குள்ள இராணுவ வீரர்களை குறித்த முகாமிலேயே தனிமைப்படுத்தியுள்ளதாக இராணும் தெரிவித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் குழுவொன்றை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முகாமில் உள்ள மேலும் 500 இராணுவத்தினரை தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சுகாதார திணைக்களம் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் கார் தொழிற்சாலையைக் கண்ணுங்கருத்துமாக கண்காணிக்கும் AI நாய்

  • November 18, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் ஜாகுவார் கார் தயாரிப்புத் தொழிற்சாலையைக் கண்ணுங்கருத்துமாக கண்காணிக்கும் பணியில் நாய் ஒன்று ஈடுபட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவில் (AI) செயல்படும் இயந்திரம் என்பது பெரும் வியப்பான செய்தியாகியுள்ளத. தொழிற்சாலையில் கம்பீரமாய்ச் சுற்றி வருகிறது ‘ரோவர்’ எனும் மஞ்சள் இயந்திர நாய், கருவிகளைச் சோதிக்கும் வெப்ப அளவை மதிப்பிடும், வேலைகளைச் சுமுகமாக்கும்? யாரேனும் குறுக்கே வந்தால் ஒதுங்கிப் போகும் என குறிப்பிடப்படுகின்றது. ரோவரிடம் ஐந்து கேமராக்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று வெப்பச் சலனத்தின் மூலம் படம்பிடிக்கும். ரோவருக்குத் தேவைக்கு […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் அநுர தலைமையில் புதிய அமைச்சரவை சற்று முன்னர் நியமனம்

  • November 18, 2024
  • 0 Comments

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். 01. பிரதமர் ஹரினி அமரசூரிய – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 02. விஜித ஹேரத் – வெளிவிவகார அமைச்சர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் 03. பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் […]