ஐரோப்பா

ரஷ்யாவுக்கு தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் தொடர்பில் எகிப்து அழுத்தம்

  • July 31, 2023
  • 0 Comments

உக்ரைன் தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் எகிப்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். தொடர்புடைய ஒப்பந்தம் புத்துயிர் பெறுவது அத்தியாவசியமானது என்பதுடன் ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளுக்கு அளிக்கும் அவசர தீர்வு எனவும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி குறிப்பிட்டுள்ளார்.ஆனால் மேற்கத்திய நாடுகள் தங்களது வாக்குறுதியை பின்பற்றவில்லை என தெரிவித்துள்ள புடின், ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவசமாக தானியங்களை வழங்க ஊறுதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். கருங்கடல் பாதையூடாக தானியங்களை வாங்கும் […]

இலங்கை

வவுனியாவில் சிறைகைதிகளுக்கு சின்னம்மை நோய் பரவல்!

  • July 31, 2023
  • 0 Comments

வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து சிறைச்சாலை வளாகம் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன்,  கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கான செயற்ப்பாடும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நோய்பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பனிமனையினால் அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசீ ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன் விளக்கமறியலில் உள்ள கைதிகளின் நீதிமன்ற தவணைகளுக்கு புதிய திகதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன்,  சில வழக்குகள் நிகழ்நிலை […]

அறிந்திருக்க வேண்டியவை இலங்கை

மண்டைதீவு வைத்தியசாலையில் இலவச மருத்துவ முகாம்…

  • July 31, 2023
  • 0 Comments

யாழ். மண்டைதீவு வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் அனுசரனையில் இலவச மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட உள்ளது. இந்த இலவச மருத்துவ முகாம், ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்டைதீவு வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த மருத்துவமுகாமில் இலவச நீரிழிவு பரிசோதனை செய்ய விரும்பியவர்கள் 12 மணித்தியாலங்கள் நீர் மற்றும் உணவு என்பவற்றை எடுத்துக்கொள்ளாமல் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலவச நீரிழிவு பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலை […]

பொழுதுபோக்கு

“விஜயுடன் அந்த படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு” தமன்னா அந்தர் பல்டி….

  • July 31, 2023
  • 0 Comments

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழியில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2010-ஆம் ஆண்டு எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். விஜய்யின் 50வது படமாக உருவான சுறா படம் படுதோல்வியை சந்தித்தது. விஜயின் ‘சுறா’ படத்தில் நடித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு. அந்தப் படம் நிச்சயம் தோல்வியை தரும் என எனக்கு தோன்றியது. ஆனால் வேறு வழி இல்லாமல் […]

ஆசியா ஐரோப்பா

68வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சாகசப்பிரியர்..!

  • July 31, 2023
  • 0 Comments

68வது மாடியில் இருந்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் உயரமான கட்டடங்களில் சுவர் வழியாக ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதான ரெமி லுசிடி என்னும் அவர் சீனாவில் உள்ள ஹாங்காங்கில் ஒரு அடுக்குமாடியில் ஏறியபோது தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது நண்பரை காண வந்ததாகக் கூறி அவர் அந்த அடுக்குமாடிக்குள் நுழைந்திருக்கிறார். 68 ஆவது மாடியை அடைந்தபோது கதவைத் தட்டி அங்கிருந்த […]

வட அமெரிக்கா

காதலனுடன் இணைந்து பிள்ளைகளை கடத்திய கனடியதாய்..!

  • July 31, 2023
  • 0 Comments

கனடாவில் காதலனுடன் இணைந்து தனது இரண்டு பிள்ளைகளை கடத்தியதாக பெண் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த பிள்ளைகளை காணவில்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான ஆம்பர் எச்சரிக்கையும் நாடு தழுவிய ரீதியில் வெளியிடப்பட்டிருந்தது. எட்டு வயதான சிறுமி ஒருவரும் 10 வயதான சிறுவன் ஒருவனும் இந்த சம்பவத்தில் காணாமல் போயிருந்தனர்.நீண்ட தேடுதல்களின் பின்னர் இந்த இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். […]

இலங்கை

கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை!

  • July 31, 2023
  • 0 Comments

தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதியினால் நடத்தப்பட்ட வாழ்க்கைச் செலவு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பேசிய அமைச்சர், கோழி இறைச்சி சந்தையில் விலை உயர்வால் மக்கள் படும் இன்னல்களை குறைக்கும் வகையில் அரசாங்கம் இந்த முடிவை […]

இலங்கை

ஜுலை மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் குறைந்துள்ளது!

  • July 31, 2023
  • 0 Comments

ஜூலை மாதத்தில் இலங்கையில் பணவீக்கம் 6.3% ஆக குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 12 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் 4.1% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் ஜூலையில் -1.4% ஆகக் குறைந்துள்ளது.

இலங்கை

இலங்கையில் நிரந்தரமாக மூடப்படும் நோர்வே தூதரகம்

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. இதனையடுத்து, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதரகம் தொடர்பான செயற்பாடுகளை, புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் பொறுப்பேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே நோர்வே தமது தூதரகத்தை இலங்கையில் மூடுவதாக அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையை தவிர ஏனைய பல நாடுகளின் தூதரகங்களையும் நோர்வே மூடிவருகின்றது.

இலங்கை

பாராளுமன்றத்தை கலைக்க ஆதரவளிக்குமாறு ஐ.ம.ச கோரிக்கை!

  • July 31, 2023
  • 0 Comments

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி  சுட்டிக்காட்டியதுடன், இதற்கு ஆதரவளிக்குமாறு ஏனைய கட்சிகளையும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார்,  பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தில் கையொப்பமிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட சபையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன […]