திருகோணமலை நடந்த கலாச்சார நிகழ்வுகள்! மக்கள் பெருமளவில் பங்கேற்பு
திருகோணமலை மாவட்டத்தில் மஹதிவுல்வெவ பிரதேசத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கலாச்சார நிகழ்வுகள் மிகவும் குதூகலமாக இடம்பெற்றது. வீதியின் இரு பக்கங்களிலும் மக்கள் கூடி இந்நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். அனைத்து இன மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், யானைகளும் கொண்டு வரப்பட்டு மின்குமிழ் மூலம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.