செய்தி தமிழ்நாடு

கோடை காலத்திலும் நிரம்பி வழியும் பழைய சீவரம் பாலாறு தடுப்பணை

  • May 15, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருமுக்கூடல் அருகே பாலாறு செய்யாறு வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன.இங்குள்ள ஆற்றுப் படுகைகளை மையமாகக் கொண்டு சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தியாகின்றது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பழையசீவரம்-பழவேரி பாலாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 42கோடி செலவில் புதிய தடுப்பணையானது நீர்வளத் துறை. மூலம் கட்டப்பட்டது.இந்த தடுப்பணையால் அரும்புலியூர், பாலுார், உள்ளாவூர் என பத்துக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளிலுள்ள 12ஆயிரத்து 70ஏக்கர் விவசாய நிலங்கள் […]

செய்தி

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் கலக்கப்போகும் நம்ம “ஜோ”

  • May 15, 2023
  • 0 Comments

1997-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கிய ‘டோலி சாஜா கே ரக்னா’ என்ற ஹிந்திப் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஜோதிகா, 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தி படங்களில் நடிக்கிறார். இப்படத்தில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் ஜூன் 2023 இல் திரைக்கு வரும். மற்றும் மும்பை, முசோரி மற்றும் லண்டனில் விரிவாக படமாக்கப்படும். இப்படத்தை அஜய் தேவ்கன் ஃபிலிம் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் பேனரில் அஜய் தேவ்கன், குமார் மங்கத் பதக் […]

இலங்கை

100 நாட்களுக்கு மூடப்படும் நுரைச்சோலை அனல் மின் நிலையம்!

  • May 15, 2023
  • 0 Comments

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 ஆவது அலகு 100 நாட்களுக்கு மூடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படிஇ ஜூன் 13 ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு மின் உற்பத்தி நிலையத்தின் 3 ஆவது அலகு மூடப்படும் என அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். இதேவேளைஇ குறித்த காலப்பகுதியில் மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். பாரிய பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும் இந்த காலப்பகுதியில் […]

வட அமெரிக்கா

கனடாவில் இடைத்தேர்தல்: பிரதமர் ட்ரூடோ அறிவிப்பு

  • May 15, 2023
  • 0 Comments

கனடாவில் கியூபெக், ஒன்ராறியோ மற்றும் மனிடோபா பகுதிகளில் உள்ள 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் முன்னெடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், மனிடோபாவில் Portage–Lisgar மற்றும் Winnipeg South Centre, கியூபெக்கில் Notre-Dame-de-Grâce–Westmount, ஒன்ராறியோவில் Oxford ஆகிய நான்கு நாடாளுமன்ற தொகுதிகளில் எதிர்வரும் ஜூன் 19ம் திகதி இடைத்தேர்தல் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். ஒரு தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் மரணமடைந்ததால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 தொகுதிகளில் உறுப்பினர்கள் பதவி விலகியதால் தேர்தல் முன்னெடுக்கப்பட இருக்கிறது. […]

பொழுதுபோக்கு

மிகுந்த விரக்தியில் பிரபல நடிகர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்.. மக்களே மீண்டும் சிரிக்க ரெடியா??

  • May 15, 2023
  • 0 Comments

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் இனிமேல் கமர்சியல் படம் மட்டுமே எடுக்கப் போவதாக சொல்லி உள்ளாராம். அதுவும் அந்த கமர்சியல் படங்கள் கலக்கலான நையாண்டி கலந்த படமாக எடுக்கவிருக்கிறாராம். ஏற்கனவே வடிவேலு உடன் இவர் நிறைய படங்களில் செய்யும் லூட்டி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இப்போது மீண்டும் அதே ஜானரில் படங்களை எடுக்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் பார்த்திபன் இயக்கும் படத்தில் அவர் நடிப்பாரா என்ற கேள்வியையும் […]

செய்தி தமிழ்நாடு

இரும்பு மனிதனின் வெற்றிக்காக காத்திருக்கும் இந்தியா

  • May 15, 2023
  • 0 Comments

பல சாதனைக்களுக்கு சொந்தக்காரரான இரும்பு மனிதன் கண்ணன் கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாபில் அகில உலக அளவிலான இரும்புமனிதன் போட்டி நடந்தது. தமிழ்நாடு சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுட்டிவிளையை சேர்ந்த கண்ணன் கலந்து கொண்டு வெள்ளிபதக்கம் பெற்றார். 2023 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்புமனிதன் போட்டி வரும் அக்டோபர் மாதம் 13,14,15, தேதிகளில் ஸ்பெயினில் வைத்து நடைபெறுகிறது. இந்தியா சார்பில் போட்டியில் கலந்து கொள்ள கண்ணன் தேர்வாகி உள்ளார். இதற்காக இன்று நாகர்கோவில் […]

ஐரோப்பா

ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை கடுமையாக்க ஜி7 நாடுகள் திட்டம்!

  • May 15, 2023
  • 0 Comments

ஜி7 நாடுகளின் தலைவர்கள் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை கடுமையாக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதன்படி இந்த வாரம் ஜப்பானில் நடைபெறும் உச்சிமாநாட்டில், ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் கடுமையாக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் ரொய்டர்ஸ் செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளனர். 19-21 மே கூட்டங்களில் தலைவர்களால் அறிவிக்கப்படும் புதிய நடவடிக்கைகள் மூன்றாம் நாடுகள் சம்பந்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை ஏய்ப்பதை இலக்காகக் கொண்டு, ரஷ்யாவின் எதிர்கால எரிசக்தி உற்பத்தியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை  ரஷ்யாவின் இராணுவத்தை ஆதரிக்கும் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த […]

இலங்கை

இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலையை உடனடியாக குறைத்த சதொச நிறுவனம்!

  • May 15, 2023
  • 0 Comments

லங்கா சதொச நிறுவனம் இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, 6 ரூபாவால் குறைக்கப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியை இன்று (15) முதல் 243 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், 400 கிராம் பால் மா பக்கெற் ஒன்றின்  விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,080 ரூபாவாகும்.

ஐரோப்பா

நேட்டோவில் சேர்வதற்கான கோரிக்கையை பரிசீலிக்குமாறு செலன்ஸ்கி வலியுறுத்தல்!

  • May 15, 2023
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி, நேட்டோவில் சேர்வதற்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக கோபன்ஹேகன் ஜனநாயக உச்சி மாநாட்டில் வீடியோ உரையில் பேசிய அவர்,  இராணுவக் கூட்டணியில் சேரும் கியேவின் முயற்சியில் “நேர்மறையான அரசியல் முடிவை” எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். “ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய பாதுகாப்பு நிச்சயமற்ற தன்மையை நீக்குவதற்கான நேரம் இது  எனக் குறிப்பிட்ட அவர், நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கான அரசயில் முடிவை அங்கீகரிக்குமாறும் வலியுறுத்தினார். ஜூலை மாதம் வில்னியஸில் நேட்டோ உச்சி மாநாட்டை நடத்த […]

உலகம் ஐரோப்பா

மாத சம்பளம் 2 லட்சத்து 40 ஆயிரம் டாலர்கள் : பிரித்தானியர்கள் தான் வேண்டும் – வைரலாகும் விளம்பரம்!

  • May 15, 2023
  • 0 Comments

ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் விடுமுறை மீதமுள்ள நாட்களுக்கு கவர்ச்சிகர ஊதியம் வழங்குவதாக கூறும் விளம்பர பதிவு வைரல் ஆகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த புளூகிபன் மருத்துவ நிறுவனம் பிரிட்டன் மருத்துவர்களை பணியில் அமர்த்த மிகவும் கவர்ச்சிகர விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குறித்த விளம்பரத்தில்,  ‘டாக்டர் ஆடம் கே ஃபீலிங் வந்துவிட்டதா? ஆஸ்திரேலியாவுக்கு வாங்க! பிரிட்டனை சேர்ந்த மருத்துவராக இருக்க வேண்டும். மாதம் 10 ஷிஃப்டுகள் மட்டும் வேலை […]

You cannot copy content of this page

Skip to content