இந்தியா

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

மோடி பெயர் அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் திகதி நிராகரித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய […]

பொழுதுபோக்கு

‘புஷ்பா- தி ரூல்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

  • August 4, 2023
  • 0 Comments

சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாஸ் ஹிட்டான திரைப்படம் புஷ்பா- தி ரைஸ். பான் இந்தியா திரைப்படமாக வெளியான இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா தி ரூல்’ தயாராகி வந்தது. செம்மர கடத்தலை மைய்யமாக வைத்து தயாரான இந்த படத்தின் படப்பிடிப்பு காட்டு பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.  இதுவரை 40% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியானது. […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம்

  • August 4, 2023
  • 0 Comments

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தொடர் மின்சார விநியோகத்திற்கான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (02) அறிவித்தது. மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய கப்பல் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் விடயத்தை துரிதப்படுத்தினால், மின்சார நெருக்கடிக்கு தீர்வு […]

வட அமெரிக்கா

சூரியன் உதிப்பதைக் காண கனடா வந்ததாகக் கூறிய இளம்பெண்… ட்ரூ காலர் நிறுவனம் ஆதரவு

  • August 4, 2023
  • 0 Comments

கனடாவுக்குக் கல்வி கற்பதற்காக வந்துள்ள இந்திய இளம்பெண் ஒருவரிடம், நீங்கள் எதற்காக கனடா வந்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட, அந்தப் பெண் கூறிய பதிலால் அவரை கடுமையாக கேலி செய்தனர் நெட்டிசன்கள். இந்தியாவை விட்டு வெளியேறுவது தனது கனவு என்றும், கனடாவில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்ப்பதே தனக்குப் பிடித்த விடயம் என்றும் தெரிவித்திருந்தார் ஏக்தா என்னும் பெயர் கொண்ட அந்த பெண்.அந்த இளம்பெண் பேசும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், அவரைக் கிழித்து தொங்கவிடாத […]

இலங்கை

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (ஆகஸ்ட் 04) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.65 ரூபாவாகவும், கொள்வனவு விலை 312.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 245.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 233.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வட அமெரிக்கா

டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் – நீதிமன்றம் அதிரடி

  • August 4, 2023
  • 0 Comments

2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, டிரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்தது. அதன்பேரில் நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதை நிறுத்துவதற்கு டிரம்ப் சதி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டிரம்புக்கு வாஷிங்டன் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக டிரம்ப் […]

இலங்கை

அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

  • August 4, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜூலை 26 ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளையும் யோசனைகளையும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 4 போத்தல் குடிநீரால் பறிபோன தாயாரின் உயிர்!

  • August 4, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில்கடும் வெப்பம் காரணமாக 20 நிமிடங்களில் 4 போத்தல் தண்ணீர் குடித்த தாயார் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இண்டியானா மாகாணத்தை சேர்ந்த 35 வயது ஆஷ்லே சம்மர்ஸ் என்பவரே கடுமையான வெப்பம் காரணமாக 64 அவுன்ஸ் குடிநீரை சுமார் 20 நிமிடங்களில் குடித்து தீர்த்துள்ளார்.கடந்த மாதம் ஆஷ்லே சம்மர்ஸ் குடும்பம் Freeman ஏரி பகுதியில் 4ம் திகதி விடுமுறையை கொண்டாடும் பொருட்டு சென்றுள்ளது. இந்த நிலையில், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளார் […]

பொழுதுபோக்கு

இணையத்தில் வைரலாகும் இயக்குநர்களின் மீட் அப் புகைப்படம்

  • August 4, 2023
  • 0 Comments

கோலிவுட் இயக்குநர்களின் மீட் அப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இயக்குநர்கள், மணிரத்தினம், ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், லிங்குசாமி, கௌதம்மேனன்,லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சசி ஆகியோர் உள்ளனர். இந்த சந்திப்பு இயக்குநர் மணிரத்தினம் வீட்டில் நடந்துள்ளது. புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்த ஷங்கர் “இந்த ஸ்பெஷலான தருணத்திற்கு நன்றி மணி சார். நினைவுகளை பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி கார்த்திக் பாடிய இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரகுமான் பாடல்களுக்கு வைப் செய்ததில் மகிழ்ச்சி. இதுதான் […]

இலங்கை

யாழில் அதிகளவு ஹெரோயினை நுகர்ந்த குருநாகல் இளைஞன் மரணம்!

  • August 4, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கல்வியங்காட்டில் அவர் நேற்றையதினம் உபகரணங்களை விற்பனை செய்து கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்துள்ளார். பின்னர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இளைஞன் உயிரிழந்துள்ளான். ஹெரோயினை பாவித்துவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அதிக ஹெரோயினை பாவித்தமையால் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவ […]