பொழுதுபோக்கு

ராம் சரண் மகளுக்கு விலை உயர்ந்த பரிசை கொடுத்த அல்லு அர்ஜுன்….

  • August 5, 2023
  • 0 Comments

கோலிவுட்டில் அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் தான் ராம்சரண். பல ஆண்டுகள் கழித்து அண்மையில் ராம்சரண் தந்தையானது அவருடைய குடும்பத்தை எ மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தெலுங்கு திரை உலகில் மெகா ஸ்டாராக பல ஆண்டுகளாக வலம் வரும் ஒரு சிறந்த நடிகர் சிரஞ்சீவி. அவருடைய மகன் ராம்சரண் கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு இவருக்கும் உபாசனா என்ற பெண்ணுக்கும் திருமணம் […]

இலங்கை

தாடி காரணமாக பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடை விதித்த கிழக்குப் பல்கலைக்கழகம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தாடி காரணமாக விரிவுரைகள் மற்றும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடை விதிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அப்துல் ரஹீம் மொஹமட் என்ற மாணவர் சமர்ப்பித்த ரிட் மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஆசியா

தொடர் மழையால் சிரமங்களை எதிர்நோக்கும் சீனா : 140 மில்லியன் மக்கள் வெளியேற்றம்!

  • August 5, 2023
  • 0 Comments

டோக்சுரி சூறாவளி  சீனாவை நோக்கி நகர்வதால்  சீனாவின் பெரும்பாலான நகரங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக  10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கான மக்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெய்ஜிங்கில், குறைந்தபட்சம் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது, சூறாவளியின் எச்சங்கள் அதிக மழையைக் கொண்டு வருவதாக வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள முலிங் நதியின்  நீர் மட்டம் உயர்ந்து வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கடும் மழைகாரணமாக சீனாவில் […]

பொழுதுபோக்கு

ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் பார்க்க விடுமுறை அறிவித்த தனியார் நிறுவனம்

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தை பார்க்கும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் பெங்களூருவில் 8 கிளைகளைக் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று ‘ஜெயிலர்’ படத்தை தனது ஊழியர்கள் பார்க்கும் வகையில் 10ம் திகதி விடுமுறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் […]

ஐரோப்பா

ரஷ்ய டேங்கர் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றது!

  • August 5, 2023
  • 0 Comments

கெர்ச் பாலம் அருகே ரஷ்ய டேங்கர் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரேனிய பாதுகாப்பு சேவை, “வெற்றிகரமான சிறப்பு நடவடிக்கை” எனக் குறிப்பிட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் இருந்து 17 மைல் தொலைவில் உள்ள இரசாயன டேங்கர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே இரவில் தாக்கப்பட்ட டேங்கர் “ரஷ்ய கூட்டமைப்பின் மிகவும் சக்திவாய்ந்த எண்ணெய் டேங்கர்களில் ஒன்று” என்று கூறப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

ஜப்பானில் விடுமுறையை கழிக்கும் காயத்ரி… நீச்சல் உடையில் சூப்பர் படங்கள்….

  • August 5, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர். இப்படத்தினை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். அதன்பின் விஜய் சேதுபதியின் சூப்பர் கெமிஸ்ட்ரி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார். மேலும் விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பும் பேசும் படியாக இருந்தது. இவருக்கு […]

இலங்கை

குப்பைகளை எரிக்க சென்ற வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி!

பொல்பிதிகம நாகொல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். கலபிடமட, பொல்பதிகம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டு குப்பைகளை எரித்து கொண்டிருந்த போது அருகில் இருந்த மரம் ஒன்றில் தீ பரவியுள்ளதை தொடர்ந்து குறித்த தீயை அணைக்க முயன்றுள்ளார் அதன்போது அவரது ஆடையில் தீப்பிடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மின் துண்டிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை!

  • August 5, 2023
  • 0 Comments

பிரித்தானியாவை அன்டோனி புயல் தாக்கியுள்ள நிலையில், காலநிலை குறித்த முன்னறிவிப்புகளை MET OFFICE வழங்கியுள்ளது. இதன்படி பிரித்தானியாவில் கோடைக்காலத்தில் அரிதாக பெயக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பலத்த காற்று ஏற்படும் எனவும் 60 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. மேலுமு் தென்மேற்கு வேல்ஸிற்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இங்கிலாந்து, இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளுக்கும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த மார்க் மார்கோலிஸ் காலமானார்

  • August 5, 2023
  • 0 Comments

‘பிரேக்கிங் பேட்’, ‘பெட்டர் கால் சால்’ தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற கதாபாத்தித்தில் நடித்த மார்க் மார்கோலிஸ் (83) காலமானார். நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் காலமானார் என்று அவரது மகனும், நடிகரும், நிட்டிங் பேக்டரி என்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரியுமான மோர்கன் மார்கோலிஸ் தெரிவித்தார். 1970 களில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மார்கோலிஸ் அன்றிலிருந்து தற்போது வரை நடித்துவந்தார். திரைப்படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தாலும், “பிரேக்கிங் பேட்” மற்றும் “பெட்டர் கால் […]

இந்தியா

`இந்தி நாட்டின் தேசிய மொழி…!” – சர்ச்சையை ஏற்படுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி

வாகன விபத்து வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதியொருவர், இந்தியை தேசிய மொழி எனக் கூறியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் வாகன விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இதில் மோட்டார் வாகன சட்டத்தின்படி, உரிமை கோருபவர்கள் தாங்கள் வசிக்கும் அல்லது வணிகம் நடத்தும் இடத்துக்கு அருகிலுள்ள மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயத்தில் (MACT) வழக்கு தொடுக்கலாம். இதனடிப்படையில், இந்த வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், உத்தரப்பிரதேசத்தின் ஃபதேகரில் உள்ள […]