பொழுதுபோக்கு

Exclusive!! ‘தளபதி 68’ படத்தில் எதிர்பாராத திருப்பம்… அஜித்தின் இயக்குநரை ஓகே செய்த விஜய்?

  • May 16, 2023
  • 0 Comments

விஜயின் லியோ படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலை வந்ததையடுத்து, தற்போது ‘தளபதி 68’ பக்கம் செய்தி திரும்பியுள்ளது. மேலும் இந்த படத்தைச் சுற்றி நிறைய ஊகங்கள் உள்ளன. முதலில் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் அல்லது சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக அட்லீ இப்படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது, பின்னர் கோபிசந்த் மல்லினேனியை இயக்கி சூப்பர் குட் பிலிம்ஸ் தங்களின் நூறாவது படமாக இதை தயாரிக்கும் என்பது ஏறக்குறைய உறுதியானது. அந்த வகையில், வெங்கட் பிரபு கூறிய கதைக்கு விஜய் […]

ஐரோப்பா

பாரீஸில் வெளிநாட்டவர் மீது துப்பாக்கி பிரயோகம்- கூட்டத்தை பயன்படுத்தி தப்பியோடிய குற்றவாளி

  • May 16, 2023
  • 0 Comments

பாரீஸில் வெளிநாட்டவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், குற்றவாளியை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். பாரீஸிலுள்ள பிரபலமான Champs-Élysées என்ற இடத்தின் அருகே அமைந்துள்ள நடன அரங்கம் ஒன்றின் அருகே மாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.48 வயதான அந்த நபர் மார்பில் குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அந்த பகுதியில் இருந்த கூட்டத்தைப் பயன்படுத்தி குற்றவாளி தப்பியோடிவிட்டார். கொல்லப்பட்ட நபருடைய உடல் மீதே ஒரு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் […]

ஐரோப்பா

கார்கிவ் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழப்பு!

  • May 16, 2023
  • 0 Comments

வடகிழக்கு கார்கிவ் பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் குபியன்ஸ்க் மற்றும் சுகுயேவ் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு ஆணும், பெண்ணும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Vovchansk நகரில், குறைந்தது மூன்று குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பண்ணை கட்டிடங்கள், உள்ளுர் மருத்துவமனை கட்டிடம் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வட அமெரிக்கா

சண்டையின் போது மலைப்பாம்பை வைத்து கனேடியர் செய்த செயல் (வீடியோ )

  • May 16, 2023
  • 0 Comments

கனடாவில் இருவருக்கிடையிலான கைகலப்பின்போது, ஒருவர் மலைப்பாம்பு ஒன்றை ஆயுதமாகப் பயன்படுத்தி மற்றவரைத் தாக்குவதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. ரொரன்றோவில், ஒருவர் மலைப்பாம்பு ஒன்றை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவதாக தகவல் கிடைத்ததன் பேரில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.அவர்கள் அங்கே செல்லும்போது, ஒருவர் மலைப்பாம்பு ஒன்றை வைத்து மற்றொருவரைத் தாக்குவதைக் கண்ட பொலிசார், உடனடியாக அந்த நபரைக் கைது செய்துள்ளனர். ரொரன்றோவைச் சேர்ந்த அந்த நபருடைய பெயர் Laurenio Avila (45) என தெரியவந்துள்ளது.Laurenio மீது, ஆயுதம் […]

இலங்கை

கோப் குழுவின் விசாரணை மூலம் வரிச் சுமையை குறைக்க முடியும் – யூ.ஆர். டி சில்வா

  • May 16, 2023
  • 0 Comments

பாராளுமன்ற கோப் குழு அறிக்கைகளில் வெளிவரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்தினால் அரசாங்கம் மக்கள் மீது இவ்வளவு வரிசுமையை திணிக்கத் தேவையில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வா தெரிவித்தார். நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குற்றங்கள் தொடர்பில் அறிக்கையிடுவது சம்பந்தமாக ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  முறையாக விசாரணை […]

ஐரோப்பா செய்தி வணிகம்

பாரிய அளவிலானவர்களை பணிநீக்கம் செய்ய தயாராகும் வோடஃபோன் நிறுவனம் : பாதிக்கப்படபோகும் பிரித்தானியர்கள்!

  • May 16, 2023
  • 0 Comments

வோடஃபோன் நிறுவனமானது, நிதி செயல்திறனை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி, தொலைத்தொடர்பு நிறுவனம் போட்டியற்றதாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. வோடஃபோன் நிறுவனத்தில் உலகெங்கிலும், மொத்தமாக ஒரு இலட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றார்கள். அவர்களில் 9 ஆயிரம் பேர் பிரித்தானியாவை சேர்ந்தவர்களாவர். நிறுவனத்தின் குறித்த நடவடிக்கையால் எத்தனை பிரித்தானியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.  ஆனால் பெர்க்ஷயரில் உள்ள அதன் தலைமையகம் பாதிப்பைக் […]

இந்தியா உலகம் வணிகம்

500 இந்தியர்களை பணிநீக்கம் செய்த அமேசன் நிறுவனம்!

  • May 16, 2023
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான அமேசன், 500 இந்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்தியாவில் அமேசன் நிறுவனத்தின் வளர்ச்சி மந்தக்கதியில் செல்வதாக கூறப்பட்ட நிலையில், மேற்படி பணிநீக்க நடவடிகை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பணிநீக்க செயல்முறை மேலும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வலைதள சேவைகள், மனித வளம் உள்ளிட்ட துறைகளின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை அமேசன் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் ஊழியர்களையும், மார்ச் மாதம் 9 ஆயிரம் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் ஓய்வூதிய கடனைப் பெற காத்திருப்பவர்களுக்கான செய்தி!

  • May 16, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் குறைந்த வருமானத்தில் உள்ள முதியோர்கள் ஓய்வூதியக் கடனுக்குத் தகுதியானவர்களா என்பதைச் சரிபார்குமாறு  வலியுறுத்தபட்டுள்ளார்கள். ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் வெள்ளிக்கிழமை  £301 வாழ்க்கைச் செலவுக் கட்டணத்தைப் பெற முடியும். அவர்கள் சரியான நேரத்தில் உரிமை கோரினால், பணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலடப்படும். ஓய்வூதியக் கடன் ஒரு நபரின் வருமானத்தை ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் £201.05 ஆகவும், ஒற்றை ஓய்வூதியதாரர்களுக்கு £306.85 […]

பொழுதுபோக்கு

அரசியல் வாரிசு நடிகருக்காக ரஜினி மற்றும் கமல் செய்யப்போகும் காரியம்….

  • May 16, 2023
  • 0 Comments

‘மாமன்னன்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் நடைபெறவிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ‘மாமன்னன்’ படத்தை ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவை வரும் ஜூன்-1ம் தேதியன்று சென்னையில் நடத்த படத்தின் தயாரிப்பு குழு திட்டமிட்டு இருப்பதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கிறது. ‘மாமன்னன்’ படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், […]

பொழுதுபோக்கு

பெரிய பழுவேட்டரையரின் மகளுக்கு இப்படியும் ஒரு ஆசையா?

  • May 16, 2023
  • 0 Comments

எனக்கு தெரிந்து எல்லாரோடும் நடித்து விட்டதாக நினைக்கிறேன். சூப்பர் ஸ்டார் கூட நடிக்கணும்னு எல்லாருக்கும் தான் ஆசை. எனக்கும் தான். வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார். நடிப்பது என்பது என் வேலை. அதனால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் எனக்கு அது நன்றாக பொருத்தினால் நான் நடிப்பேன் என்று கூறினார். மேலும் உடல் எடை குறைத்தது பற்றிய கேள்விக்கு, நான் உடம்பை குறைத்து ஒன்றரை வருடமாகிறது. குண்டாக இருந்தாலும் பிரச்சினை. ஒல்லியாக இருந்தாலும் […]

You cannot copy content of this page

Skip to content