“எதிர்பார்க்கப்பட்டது,அமைதியாக இருங்கள்” – இம்ரான் கான்
தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஆதரவாளர்களுக்காக வீடியோ பதிவு ஒன்றை கைது செய்யப்பட்டதற்கு பிறகு சமூக வளைத்தளங்களில் வெளியிடப்பட்டது.
அந்த வீடியோவில், “எனது கைது எதிர்பார்க்கப்பட்டதுதான். நான் கைது செய்யப்படுவதற்கு முன்பு இந்த செய்தியை பதிவு செய்தேன். எனது கட்சியினர் அமைதியாகவும், உறுதியுடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
(Visited 8 times, 1 visits today)