தமிழ்நாடு

தமிழகத்தில் தாகத்திற்கு ஜூஸ் வாங்கி குடித்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • August 8, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் தமிழகத்தில் 10 ரூபாய் மாஸா பழ ஜூஸ் பாக்கெட்டில் செத்து போன எலி ஒன்று கிடந்துள்ள வீடியோ வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டம் பி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சீனிவாசன் மற்றும் நதியா. இவர்கள் உணவகம் ஒன்றினை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அப்போது, உணவகத்திற்கு அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் உள்ள 10 ரூபாய் […]

இந்தியா

12 துக்ளக் லேன் பங்களாவை திரும்ப பெற்ற ராகுல் காந்தி!

லோக்சபா எம்பி அந்தஸ்தை மீட்ட பிறகு ராகுல் காந்திக்கு 12, துக்ளக் லேன் பங்களா திரும்ப கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மக்களவை உறுப்பினர் பதவியை மீட்டெடுத்த ஒரு நாள் கழித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவரது பழைய அரசு பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காந்தி தனது 12, துக்ளக் லேன் பங்களாவை ஏப்ரல் மாதம் காலி செய்து, தேசிய தலைநகரில் உள்ள தனது தாய் சோனியா […]

இலங்கை

PT6 விமானம் விபத்துக்குள்ளானதில் அறுவர் உயிரிழப்பு!

  • August 8, 2023
  • 0 Comments

இலங்கை விமானப்படையின் PT6 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். விமான விபத்து குறித்து நாடாளுமன்றில் இன்று (08.08) கருத்து வெளியிட்ட அவர்,  இந்த விமானங்கள் 1958-ல் தயாரிக்கப்பட்டு, இன்னும் பைலட் பயிற்சிக்கு பயன்படுத்தப்படுவது ஏன் என்றும்  கேள்வி எழுப்பினார். இதுபோன்ற பழமையான விமானங்கள் பயிற்சிக்காக பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது என்றும், அவற்றை பயிற்சிக்காக அல்ல, அருங்காட்சியகங்களில் வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். காஃபிர் போர் விமானங்களை பழுதுபார்ப்பதற்கு […]

இலங்கை

நாயாறு கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

  • August 8, 2023
  • 0 Comments

நாயாறு கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய டோலர் மீன்பிடி படகில் இருந்த 10 பேரை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும், முல்லைத்தீவு கடல் பகுதியில் நேற்று (07) அதிகாலை 2மணியளவில் திருகோணமலை கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான முறையில் நாயாற்று கடல்பகுதியில் ரோலர் மீன்பிடி படகு ஒன்று நிற்பதனை அவதானித்துள்ளனர். பின்னர் குறித்த நபர்களிடம் விசாரணை செய்தபோது இந்தியாவில் இருந்து மீன்பிடிக்கு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது […]

இலங்கை

ஜனாதிபதியிடம் இரகசிய புலனாய்வு பிரிவினர் வழங்கிய அறிக்கை!

  • August 8, 2023
  • 0 Comments

வறட்சி மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக எழுந்துள்ள அமைதியின்மையின் ஊடாக புதிய போராட்ட அலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதிக்கு இரகசிய அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர். இந்த எதிர்ப்பு அலையை தொடர்ந்து முன்னெடுக்க குழுவொன்று இணைந்துள்ளதாகவும், மக்களை வீதிக்கு இறக்கி கடந்த வருடம் இருந்த நிலைமையை மீண்டும் நாட்டில் கொண்டுவர அவர்கள் செயற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு தண்ணீர் தருவதில்லை என்றும், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் காட்டி மக்களை தண்ணீருக்காகப் […]

பொழுதுபோக்கு

அதிரடியாக ரிலீஸ் தேதியை மாற்றிய ஜெயிலர்… அடங்கிப்போன பரிதாபம்

  • August 8, 2023
  • 0 Comments

வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகிறது. இதனால் இந்த படத்திற்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு பிறமொழி ரசிகர்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் மலையாளத்தில் இந்த படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஜெயிலர் என்ற பெயரில் மலையாளத்தில் ஒரு படம் தயாராகி உள்ளது. சக்கீர் மடத்தில் […]

ஆசியா

சீனா- தன்னை அவமானப்படுத்திய கடைக்காரை வித்தியாசமாக பழிதீர்த்த வாடிக்கையாளர்!(வீடியோ)

  • August 8, 2023
  • 0 Comments

சீனாவில் நூடில்ஸ் வாங்க சென்ற நபரை கடைக்காரர் அவமானப்படுத்தியதால், கடையில் உள்ள அனைத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளையும் வாங்கி தரையில் போட்டு அடித்து நொருக்கி அழித்த சாம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,சீனாவின் சாண்டாங்க் மாகாணத்தில் உள்ள ஒரு நூடுல்ஸ் கடைக்கு வாடிக்கையாளர் சென்றுள்ளார்.அங்கு கடைக்காரரிடம் நூடுல்ஸ் விலை கேட்டபோது அவர் ஒரு கிண்ணம் நூடுல்ஸ் இலங்கை மதிப்பில் ரூ.640 என கூறியுள்ளார். அதை கேட்ட வாடிக்கையாளர் விலை அதிகமாக உள்ளது என கூறியுள்ளார். […]

இலங்கை

பொது போக்குவரத்து சேவைகளில் இ-டிக்கெட் முறை அறிமுகம்! பந்துல குணவர்தன

பொது போக்குவரத்து சேவைகளில் இ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏழு தேசிய பேருந்து சங்கங்கள் இதுவரை இணக்கம் தெரிவித்துள்ளன. மாகாண மட்டத்திலும் இது தொடர்பில் விரைவில் கருத்துக்கள் பெறப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

போலி காசோலையை கொடுத்து மோசடி செய்த நபர் – கைது செய்த பொலிஸார்

  • August 8, 2023
  • 0 Comments

மோசடியான காசோலையைக் கொடுத்து வாகனமொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு தலைமறைவான சந்தேகநபரை பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர். இளவாலையைச் சேர்ந்தவரிடம் ஓராண்டுக்கு முன்னர் 62 லட்சம் ரூபாவுக்கு வாகனமொன்றை ஒருவர் வாங்கியுள்ளார். அதற்குரிய காசோலையை வழங்கியபோது, வங்கியில் பணம் இல்லாமையால் அது திரும்பியுள்ளது. வாகனத்துக்குரிய பணத்தை கேட்டபோது விரைவில் அதனைத் தருவதாக் கூறி ஏமாற்றிவிட்டு, வாகனத்துடன் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்னர் மாவிட்டபுரத்தில் மேற்படி வாகனம் மின்ஒழுக்கு காரணமாக எரிந்துள்ளது. இதனால் வாகனத்தோடு தலைமறைவானர் […]

இலங்கை

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் கோளாறு!

270 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நுரைச்சோலை நிலக்கரிமின் நிலையத்தின் ஒரு அலகு இன்று அதிகாலை பழுதடைந்துள்ளது. ஆலையில் உள்ள மூன்று மின் உற்பத்தி அலகுகளில், தற்போது ஒன்று மட்டுமே இயங்கி வருகிறது பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஜூன் மாதத்தில் மற்றுமொரு யூனிட் (270MW) நிறுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.