இலங்கை

ஜனாதிபதியிடம் சவால் விடுத்த ஸ்ரீதரன் எம்.பி

  • August 9, 2023
  • 0 Comments

தமிழர்கள் தனித்து செல்ல விரும்புகிறார்களா,சமஷ்டி அடிப்படையில் வாழ விரும்புகிறார்களா என்பதை அறிய வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள்,மலையகத் தமிழர்கள் மற்றும் கொழும்பில் வாழும் தமிழர்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த நீங்கள் தயாரா ?என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் ஜனாதிபதியிடம் நேரில் சவால் விடுத்தார். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஆற்றிய விசேட உரையை தொடர்ந்து எழுந்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு சவால் […]

இலங்கை

மருத்துவர்களைத் தக்கவைக்க அரசு என்ன செய்துள்ளது : நாடாளுமன்றில் கேள்வி!

  • August 9, 2023
  • 0 Comments

மருத்துவர்களைத் தக்கவைக்க அரசு  விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர்  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (08.09) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதாரத் துறையில் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே 810 மருத்துவர்களும் 302 நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இங்கிலாந்தில் இன்று வைத்தியர்களுக்கு பெரும் பற்றாக்குறை உள்ளது. இங்கிலாந்து […]

ஆசியா

78ம் ஆண்டு நினைவு தினம்… அமைதி மணி ஒலித்து அஞ்சலி

  • August 9, 2023
  • 0 Comments

நாகசாகி மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதன் 78ம் ஆண்டு நினைவு தினம் ஜப்பானில் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1945ம் ஆண்டு 2ம் உலகப்போரின் போது ஹிரோஷிமா மீது முதல் அணுகுண்டு தாக்குதலை நடத்திய அமெரிக்கா, 3நாட்கள் கழித்து அதாவது ஆகஸ்ட் 9ம் திகதி நாகசாகி நகரத்தின் மீதும் அணுகுண்டு வீசியது. இந்த இரு தாக்குதலிலும் 2லட்சத்து 15ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உலகை உலுக்கிய இச்சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி நாகசாகியில் அமைதி மணி ஒலிக்கப்பட்டு அஞ்சலி […]

இலங்கை

மக்களை வீதிக்க இறக்க திட்டம் : பின்னணில் செயற்படவுள்ள ஊடகங்கள்!

  • August 9, 2023
  • 0 Comments

மின்சாரம் மற்றும் நீர் பிரச்சினையை பிரதான பிரச்சினையாகக் கொண்டு மக்களை வீதிக்கு இறங்க வைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த போராட்டத்திற்கு இரண்டு ஊடக நிறுவனங்கள் உதவிசெய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அமைச்சர் பந்துல குணவர்த்தன இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், மக்களைத் தூண்டிவிட்டு வீதிக்குக் கொண்டுவரும் வகையில் ஊடக நிறுவனங்கள் செயற்படுமாயின் ஊடகத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தாம் […]

இலங்கை

தேசிய காணி கொள்கையை ஸ்தாபிக்க நடவடிக்கை!

  • August 9, 2023
  • 0 Comments

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு, கிழக்கில் கணிசமான காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (09.08) விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறித்த காணிகளில் 90 முதல் 92 வீதமானவை திட்டமிட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த காணியில் 22,919 ஏக்கர் காணி அடங்குவதாகவும் அதில் 817 ஏக்கர் அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும் 22,101 ஏக்கர் தனியார் […]

இலங்கை

சம்பந்தன் ஐயாவுடன் செந்தில் சந்திப்பு

  • August 9, 2023
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் அவர்களை நேற்று(9) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமிர்த்தம் சந்தித்து, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது

வட அமெரிக்கா

கண் சொட்டு மருந்து குறித்து கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • August 9, 2023
  • 0 Comments

கனடாவில் கண்களுக்கு பயன்படுத்தப்படும் சொட்டு மருந்து தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. க்ரோமிலின் கண் சொட்டு மருந்து வகைகள் இவ்வாறு மருந்தகங்களிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மருந்து வகையினால் ஒவ்வாமை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை கண் சொட்டு மருந்தினை பயன்படுத்தும் போது pseudomonas aeruginosa என்னும் பக்ரீரியாவினால் பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது. 10 மில்லிலீற்றர் அளவுடைய அனைத்து வகையான க்ரோமிலின் கண் சொட்டு மருந்துகளும் சந்தையிலிருந்து வாபஸ் […]

பொழுதுபோக்கு

தளபதி 68-இல் விஜய்யுடன் இணைகின்றார் அஜித்… கங்கை அமரன் கூறிய டுவிஸ்ட்

  • August 9, 2023
  • 0 Comments

விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார் என்ற அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்கள். அத்துடன் விஜய் படத்திற்கு நீண்ட வருடம் கழித்து யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க போகிறார். இப்படி தளபதி 68 படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதில் அடுத்து சுவாரஸ்யமான விஷயங்களை வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் பத்திரிக்கையாளர்களிடம் கூறி இருக்கிறார். அதாவது இப்படத்தில் விஜய் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்த உடனே என்னிடம் வெங்கட் […]

இலங்கை

மத்திய வங்கி வளாகத்திற்குள் நுழைய முற்பட்டவர்களுக்கு பிணை!

  • August 9, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (09.08) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,  10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டனர். குறித்த பிணை உத்தரவை வழங்கிய நீதிமன்றம், சந்தேகநபர்கள் அரச நிறுவனத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்துள்ளது.

இலங்கை

13 ஆவது திருத்தச் சட்டத்தை புறக்கணிக்க முடியாது : நாடாளுமன்றில் ரணில் கருத்து!

  • August 9, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டார். அரசியலமைப்பின் 13வது திருத்தம் நாட்டின் அதியுயர் சட்டம் என்பதால் அதனை புறக்கணிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நிறைவேற்று அதிகார சபையும் சட்டவாக்க சபையும் அதனை நடைமுறைப்படுத்தக் கடமைப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதை அடைவதற்கு, பரந்த மற்றும் திறந்த மனதுடன் விவாதங்கள் மூலம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து தேவை என்பதையும் அவர் […]