ஆசியா

ஈரானில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்ட ஐவர்!

  • August 9, 2023
  • 0 Comments

ஈரானில் பட்டப்பகலில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஐவர் தூக்கிலடப்பட்ட சம்பவம் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் புதன்கிழமை, ஐவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நாட்டின் வடமேற்கில் பெண் ஒருவரை கடத்தி கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. மராண்ட் நகரில் இருந்து 2022 மே மாதம் தொடர்புடைய பெண் கடத்தப்பட்டுள்ளார். அவரை இந்த ஐவரும் கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கியுள்ளனர். சம்பவம் நடந்த நாங்கு நாட்களுக்கு பின்னர், இந்த ஐவரும் கைதாகியுள்ளனர். இவர்கள் ஐவரும் […]

வட அமெரிக்கா

அதீத வெப்பம் காரணமாக 147 அமெரிக்கர்கள் பலி!

  • August 9, 2023
  • 0 Comments

அதிக வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 147 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எதிர்பார்த்ததை விட அதிக வெப்பத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பத்தினால் அமெரிக்காவின் 03 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி அரிசோனா, நெவாடா மற்றும் டெக்சாஸ் மாநிலங்கள். அரிசோனா மாநிலத்தில் அதிக வெப்பம் காரணமாக 103 பேர் உயிரிழந்துள்ளனர். நெவாடாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 என்றும், டெக்சாஸ் […]

இலங்கை

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்! அவுஸ்திரேலிய நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு மேலும் ஒரு நிவாரணத்தை வழங்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அவர் ஒரு மாதத்தில் 2 தடவைகள் அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர் அவுஸ்திரேலியாவுக்குள் பயணிக்க விரும்பினால், அவர் பயணிக்கும் காலம், இடம், பாதை என்பனவற்றை குறைந்தது 48 மணித்தியாலங்களுக்கு முன்னரே பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

நீரின் தரத்தில் குறைப்பாடு : பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • August 9, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்த கோடைக்காலம் மக்களுக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குடிநீர் பிரச்சினை தோன்றியுள்ளது. அதாவது, குடிநீரின் தரம் குறித்த பிரச்சினை எழுந்துள்ளது. சண்டர்லேண்டில் (Sunderland ) நடந்த டிரையத்லான் (triathlon ) போட்டியில் டஜன் கணக்கான விளையாட்டு வீரர்கள் நோய்வாய்ப்பட்டதை அடுத்து இந்த பிரச்சினை பூதாகரமாக மாறியுள்ளது. டைன் அன்ட் வேர் ( Tyne and Wear city) நகரின் கடற்கரையில் கடலில் நீந்திய குறைந்தது 57 பேர் நோய்வாய்ப்பட்டு வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு […]

இலங்கை

பிரான்ஸ் செல்லும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு ஓர் அறிவித்தல்!

  • August 9, 2023
  • 0 Comments

இந்த கோடையில் பிரான்சின் சில பகுதிகளில் விடுமுறைக்கு வரும் இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள் தங்கள் காரில் மாசு உமிழ்வு ஸ்டிக்கரை ஒட்டாவிட்டால், அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் Crit’Air ஸ்டிக்கரைக் ஒட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக RAC எச்சரித்துள்ளது. ஸ்டிக்கரைக் ஒட்டாத வாகன ஓட்டிகளுக்கு 68 யூரோக்கள் (£58) அபராதம் விதிக்கப்படும் எனவும்,  இது 45 நாட்களுக்குள் செலுத்தப்படாவிட்டால் 180 யூரோக்கள் (£154) ஆக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமரா அடிப்படையிலான அமலாக்கம் […]

இலங்கை

யாழில் தனியார் பேருந்து மீது கல் வீசி தாக்கிய பெண்! விசாரணையில் வெளியான காரணம்

யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கல் வீசி பேருந்துக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (08) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேருந்தின் சாரதி தன்னை கிண்டல் செய்ததால் தான் கற்களை வீசியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பெண்ணின் கல் தாக்குதலால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் பயணி ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக […]

பொழுதுபோக்கு

விஜய்யுடன் மிக நெருக்கமாக சமந்தா!! வெளிவந்தது “குஷி” ட்ரெய்லர்

  • August 9, 2023
  • 0 Comments

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடித்துள்ள ‘குஷி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஷி’. காதல் ரொமென்ஸ் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து சமந்தாவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ‘ஹ்ரிதயம்’ படத்திற்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். […]

ஆசியா

ரயில் விபத்து – பாகிஸ்தான் ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை

  • August 9, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் கடந்த 6ம் திகதி கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற ஹசரா ரயில் விபத்துக்குள்ளானது. இதில் 10 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 34 பேர் பலியானார்கள். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த ஹசரா ரயில், பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 15 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் […]

இலங்கை

மஸ்கெலியாவில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி!

  • August 9, 2023
  • 0 Comments

மஸ்கெலியாவில் 100 அடி பள்ளத்தில், பாய்ந்து முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (09.08) இடம்பெற்றுள்ளது. குறித்த முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த நிலையில், அவர்கள் அனைவரும் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் நீர்கொழும்பில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் இறுதி சடங்கிற்கு வந்திருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இறுதிச் சடங்கிற்குச் சென்று திரும்பிய போது முச்சக்கரவண்டியின் சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

சந்திரனில் தரையிறங்கும் சந்திரயான் 3! இஸ்ரோ தலைவர்

திட்டமிட்டபடி சந்திரயான் 3 ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரையிறங்கும். அனைத்து விதமான பிரச்சினைகளையும் சமாளிக்கும் வகையில் விக்ரம் லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்சார்கள் செயலிழந்தாலும், வெற்றிகரமாக இலக்கை எட்டும் திறன் உள்ளது என கூறியுள்ளார். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான் 3 என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் ஏவியது. […]