இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

நேற்றைய தினத்தை விட இன்று (ஆகஸ்ட் 10) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 313.6129 ஆகவும் விற்பனை விலை ரூபா 326.7861 ஆகவும் பதிவாகியுள்ளது..  

வட அமெரிக்கா

ராணுவ ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் 2 அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கைது

  • August 10, 2023
  • 0 Comments

சீனாவை சேர்ந்தவர் ஜிஞ்சாவோ வெய். 22 வயதான இவர் அமெரிக்க கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். லாஸ் ஏஞ்சல்சின் வென்சுரா கடற்படை தளத்தில் பணி புரிந்து வந்தவர் வென்ஹெங் ஜாவோ (26). இருவரும் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், போர் கால பயிற்சிகள், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் நவீன தளவாடங்கள் குறித்து சீனாவுக்கு உளவு சொன்னதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.இதைத்தொடர்ந்து இருவரையும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து சான்டியாகோவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தது. அதில் […]

இலங்கை

HIV தொற்றுக்குள்ளானவர்களுக்கு புதிய சிகிச்சை!

  • August 10, 2023
  • 0 Comments

இலங்கையில் HIV அபாயத்தைத் தடுப்பதற்காக ‘Prep” எனும் புதிய வகை சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய HIV  தடுப்பு குழு தெரிவித்துள்ளது. மேலும்  நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து HIV கட்டுப்பாடு சிகிச்சை மையங்களிலும் இந்த சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்தார். அந்த மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் அனைத்தும் HIV  தொற்றுடன் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் HIV தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டமை […]

இலங்கை

கடன் மற்றும் கடன் மறுசீரமைப்பு குறித்த நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • August 10, 2023
  • 0 Comments

இலங்கையின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் 4, 979 பில்லியன் ரூபாவிலிருந்து 13,979 பில்லியன் ரூபாய்  வரை கடன் பெறுவதற்கான வரம்பை அதிகரிக்க பாராளுமன்ற அரச நிதிக் குழு அனுமதி வழங்கியதாக அரச நிதிக் குழுவின் பதில் தலைவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இதன்படி 9,000 பில்லியன் ரூபா கடன் வரம்பானது கடன் மறுசீரமைப்புச் […]

இலங்கை

இலங்கையில் எரிபொருளை குறைந்த விலையில் விற்பனை செய்யுமாறு வலியுறுத்தல்!

  • August 10, 2023
  • 0 Comments

இலங்கையில் எரிபொருள் சந்தைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள சினோபெக் நிறுவனம், குறைந்த விலையில் எரிபொருளை வெளியிடுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அந்த கோரிக்கைக்கு எண்ணெய் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை. சினோபெக் அனைத்து வகையான எரிபொருட்களையும் எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் விலையை விட லிட்டருக்கு மூன்று ரூபாய் மலிவாக விற்பனை செய்ய கோரியுள்ளது. சினோபெக்கிற்கு ஏற்கனவே 130 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இருபது எரிபொருள் நிலையங்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் வழங்கப்பட உள்ளதாகவும் […]

தமிழ்நாடு பொழுதுபோக்கு

சினிமாவில் சாதித்தால் முதல்வர் ஆகிவிட முடியாது: விஜய் குறித்து கி.வீரமணி சுளீர்

  • August 10, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக மேலோட்டமாக பேச்சுகள் எழுந்துள்ளன. விஜய்யின் நடவடிக்கைகளும் அதை உறுதிப்படுத்துவது போல் இருந்து வருகின்றன. இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதுகுறித்துப் பேசியுள்ளார். எப்போதுமே பொதுத் தொண்டு செய்து வர வேண்டும். கட்சி ஆரம்பிப்பது ரொம்ப சுலபம். ஒருவர் இருந்தால் கூட போதும். தேர்தலில் நிற்கும் ஆசை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குறிப்பிட்ட வயது இருக்க வேண்டும். அரசியல் சட்டப்படி, தேர்தலில் நிற்க பைத்தியக்காரனாக […]

இலங்கை

சொக்லேட் பொதியில் இனங்காணப்பட்ட மனித விரல் : விளக்கமளிக்கும் நிறுவனம்!

  • August 10, 2023
  • 0 Comments

அண்மையில், மஹியங்கனை பகுதியில் உள்ள சொக்லேட் பாரில் மனித விரலின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், இது குறித்து குறித்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. குறித்த அறிக்கையில், “  தற்போதைய சூழ்நிலையில் தங்கள் பிராண்டிற்காக நிலைநிறுத்துவதற்கும் அதை உறுதியாகப் பாதுகாப்பதற்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறியும் விசாரணை நடவடிக்கையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது எனவும் அவர்கள் […]

இலங்கை

யாழில் இரு உணவகங்கள் சுற்றிவளைப்பு!

  • August 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு உணவகங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளன. யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரியின் கீழான பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இரு உணவகங்களும் முற்றுகையிடப்பட்டுள்ளன. இதனையடுத்து யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதவான் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை […]

ஐரோப்பா

குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு கிடைத்த பார்சல்: உரிமையாளரை தேடும் பிரிட்டன் பொலிஸார்!

  • August 10, 2023
  • 0 Comments

தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் கடற்கரைகளை தூமைப்படுத்துவதற்காக குப்பை சேகரிக்கும் பெண் ஒருவருக்கு ஒரு பார்சல் கிடைத்தது. Jodie Harper என்னும் அந்தப் பெண் கடற்கரையை சுத்தப்படுத்திக்கொண்டிருக்கும்போது, அவருக்கு ஒரு பார்ச்ல கிடைத்துள்ளது. பிளாஸ்டிக் கவர் ஒன்றினுள் ரப்பர் அடுக்கு ஒன்றுடன் வெள்ளை நிறப் பவுடர் இருப்பதைக் கண்ட Jodie, உடனடியாக அதை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். அந்த பார்சலில் இருந்தது கொக்கைன் என்னும் போதைபொருள் என்பது தெரியவரவே, அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார் Jodie. காரணம், […]

இலங்கை

கொழும்பில் மாணவர்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!

  • August 10, 2023
  • 0 Comments

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையினால் கொழும்பில் இன்று (10.08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, கோட்டை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், கலுமுவதொர பிட்டிய உள்ளிட்ட பல இடங்களுக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். எவ்வாறாயினும் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க முடியும் என தெரிவித்த நீதவான் நீதிமன்ற உத்தரவை போராட்டக்காரர்களிடம் கையளிக்குமாறு கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான […]