இலங்கை

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபமாக பலி!

மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஹோமாகம, தியகமவில் உள்ள தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல்கலையில் கல்வி கற்கும் 26 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விடுதி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசியா

விண்வெளியிலிருந்து பூமியில் உள்ள மகனுடன் பேசிய தந்தை(வீடியோ)

  • August 18, 2023
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணியில் உள்ளார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் முகமது பின் ரஷித் (எம்பிஆர்) விண்வெளி மையம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் சர்வதே விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுல்தான் அல் நெயாடி பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ காலில் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. செப்டம்பர் 1ம் திகதி பூமிக்கு திரும்பும் அல் […]

இலங்கை

தனியார் வங்கிக் கொள்ளை: உக்ரைனிய தம்பதியினர் கைது-நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தனியார் வங்கியொன்றின் மூன்று கணக்குகளை ஊடுருவி சுமார் 13.7 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட உக்ரைனிய பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று (ஆக. 17) பிணை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான உக்ரைன் பெண்ணின் கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் அனுமதியின்றி வங்கிக் கணக்குகளை பிரவேசித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) நீதிமன்றில் அறிவித்தது. சந்தேகநபர் பின்னர் இரண்டு […]

இலங்கை

யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமனம்

  • August 18, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்தியா

கச்சத்தீவு இலங்கை அரசிடம் இருந்து மீட்கப்படும்! மு.கா.ஸ்டாலின்

கச்சத்தீவு இலங்கை அரசில் இருந்து மீட்டு தமிழக மீனவர்களின் உரிமை நிலைநாட்டப்படும் என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் கேம் அருகே இன்று நடைபெற்ற மீனவர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு (18) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை, 5000-ல் இருந்து ₹8000-ஆக உயர்த்தப்படும் எனவும், 1076 கி.மீ. நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு. […]

தமிழ்நாடு வட அமெரிக்கா

23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பல்லவர் கால சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

  • August 18, 2023
  • 0 Comments

23 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போன, 7ம் நூற்றாண்டு பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி தச்சூர் சிவன் கோயில் முருகன் சிலை, அமெரிக்காவில் உள்ள ஹோம் லேண்ட் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திடம் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தடயம்’ என்ற பத்திரிகையில் முருகன் சிலை தொடர்பான புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பரஸ்பர […]

இலங்கை

பச்சிளம் சிசுவை அநாதரவாக விட்டுச்சென்ற தாய் – கைது செய்த பொலிஸார்

  • August 18, 2023
  • 0 Comments

பிறந்து மூன்று நாட்களேயான குழந்தையை பெற்றெடுத்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் சிசுவை அநாதரவாக விட்டுச்சென்ற சம்பவம் மஹியங்கனையில் இடம்பெற்றுள்ளது. சிசுவை மஹியங்கனை போதனா வைத்தியசாலைக்கு பின்னால் கைவிட்டுச் சென்ற சந்தேகத்தில் பெண் கைதுசெய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த தாயாரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கபட்ட குழந்தை, வைத்தியசாலையின் விசேட குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

குருந்தூர் மலையில் பதற்றத்திற்கு மத்தியில் ஆதிசிவன் ஐயனாருக்கு விசேட பொங்கல் – பௌத்தர்கள் அட்டகாசம்

  • August 18, 2023
  • 0 Comments

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரையில் பௌத்த மக்களும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார் இந்த வழிபாட்டுக்கு குமுழமுனை, தண்ணிமுறிப்பு வீதியால் சென்ற மக்கள் பொலிசாரின் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் பொங்கல் நிகழ்வுகளை முன்னிட்டு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது இந்த நிலையில் […]

உலகம்

மலேசியாவில் சாலையில் மோதிய விமானம்! 10 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் நெடுஞ்சாலையில் தனியார் ஜெட் விமானம் ஒன்று கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு வாகன ஓட்டிகளுடன் விமானத்தில் இருந்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர். தாக்கத்தின் போது ஜெட் ஒரு தீப்பந்தமாக வெடித்தது, தளத்தில் இருந்து அடர்ந்த கருப்பு புகை எழும்பியது, காட்சியில் இருந்து வீடியோ கிளிப்புகள் காட்டப்பட்டது. அது லங்காவியின் ரிசார்ட் தீவில் இருந்து தலைநகர் கோலாலம்பூருக்கு மேற்கே சிலாங்கூருக்குப் பயணித்த தனியார் ஜெட் […]

ஆசியா

ஆப்கானில் கடும் உணவு பஞ்சம்.. 1.5 கோடி மக்கள் உணவின்றி தவிப்பு

  • August 18, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் அமைப்பு கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அங்கு பொருளாதார சிக்கல் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஏழ்மை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 1.55 கோடி மக்கள் கடுமையான உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி மற்றும் 2 ஆண்டுகளாக […]