மணிப்பூர் வன்முறை: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் அறிக்கைகள் தாக்கல்
மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழு மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக வன்முறை வெடித்து வருகிறது. இந்நிலையில் குகி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட விசாரணைக் […]