ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் பரவி வரும் தட்டம்மை நோய் குறித்து எச்சரிக்கை

  • March 22, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா முழுவதும் பரவி வரும் தட்டம்மை நோய் குறித்து சுகாதார அதிகாரிகள் தற்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அதிக காய்ச்சல், தலைவலி அல்லது மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தடுப்பூசி போடாதவர்கள், நோய் தாக்கிய 72 மணி நேரத்திற்குள் MMR தடுப்பூசியைப் பெற்று, நோயைத் தடுக்க அல்லது அதன் தீவிரத்தைக் குறைக்கலாம். தட்டம்மைக்கு குறிப்பிட்ட ஆண்டிபயாடிக் சிகிச்சை எதுவும் […]

மத்திய கிழக்கு

நேதன்யாஹுவை பதவி விலக வலியுறுத்தி இஸ்ரேலில் மக்கள் போராட்டம்

  • March 22, 2025
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹுவை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹமாஸ் வசம் எஞ்சியுள்ள 59 பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்குள், மீண்டும் காசா மீது போர் தொடுத்துள்ளமையால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் வரலாற்றில் முதன்முறையாக அதன் உள்நாட்டு உளவு பிரிவின் தலைவரை நேதன்யாஹு அரசு பதவிநீக்கம் செய்ததை கண்டித்தும் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். நேதன்யாஹுவின் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  

வாழ்வியல்

கெட்ட கொழுப்பு அதிகமாக இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • March 22, 2025
  • 0 Comments

இன்றைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, அதிக கொழுப்பின் பிரச்சனை மக்களிடையே பொதுவானதாகிவிட்டது. நம் உடலில் இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன – நல்ல கொழுப்பு (HDL) மற்றும் கெட்ட கொழுப்பு (LDL). உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, ​​அது நரம்புகளில் குவியத் தொடங்கி, தமனிகளில் அடைப்புகளை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்துவது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

331 செயலிகளை அதிரடியாக நீக்கிய கூகுள்!

  • March 22, 2025
  • 0 Comments

மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே ஸ்டோர். இந்த கூகுள் பிளே ஸ்டோரில் பாதுகாப்பான ஆப்கள் தான் அதிகம் இருக்கும். இருந்தும் சில சமயம் பாதுகாப்பு குறைபாடு உள்ள, சில விஷமதனமான வேலைகளை செய்யும் ஆப்கள் இருக்கும். அதனை அவ்வப்போது கூகுள் கண்டறிந்து அதனை பிளே ஸ்டோரில் இருந்து வெளியேற்றிவிடும். அப்படியான செயல்முறை தற்போது நிகழ்ந்துள்ளது. அதாவது, பாதுகாப்பு குறைபாடுகள், பயனர்களுக்கு விரும்பத்தகாத வேலைகளை செய்வது […]

செய்தி

இன்று தொடங்குகிறது ஐபிஎல் -, முதல் போட்டியில் KKR-RCB மோதல்

  • March 22, 2025
  • 0 Comments

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் (Indian Premier League) 18-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தங்கள் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த முதல் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடந்த 34 போட்டிகளில் (IPL 2024 வரை), கொல்கத்தா அணி […]

இலங்கை

இலங்கையில் இன்றும் இடியுடன் கூடிய மழை! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

  • March 22, 2025
  • 0 Comments

இலங்கையில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பலத்த மழை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிகரிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் – ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • March 22, 2025
  • 0 Comments

ஜெர்மனியின் குறைந்தபட்ச ஊதியம் அடுத்த ஆண்டு ஒரு மணி நேரத்திற்கு 12.82 யூரோவில் இருந்து 15 யூரோவாக உயரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியால் முடிவு செய்யப்பட்ட இந்த மாற்றம் சுமார் 10 மில்லியன் தொழிலாளர்களுக்கு பயனளிக்க உள்ளது. இதன் மூலம், அவர்களின் மாத வருமானம் சுமார் 17% அதிகரிக்கும். இருப்பினும், இந்த ஊதிய உயர்வு பல தொழில்களில் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும் என கூறப்படுகின்றது. குறித்த தீர்மானத்தின் மூலம், குறைந்த […]

இலங்கை

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு – 2 இளைஞர்கள் பலி

  • March 22, 2025
  • 0 Comments

கந்தர, தெவிநுவர தேவாலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேனில் பின்தொடர்ந்த ஒரு குழு, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரைக் குறிவைத்தே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற 28 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள், தங்கள் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள தெவுந்தர கபுகம்புர பகுதியில் உள்ள ஒரு […]

இந்தியா

பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த தயாராகி வரும் இந்தியா – அமெரிக்கா

  • March 22, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை பகிர்வில் அமெரிக்காவும் இந்தியாவும் தங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் கூறினார். டெல்லியில் நடைபெற்ற ரைசினா பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நீண்டகால நட்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்றும் துளசி கப்பார்ட் கூறினார். ஜப்பான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

சீனாவின் இராணுவப் பயிற்சி – ஏவுகணை ஆயுதக் கிடங்குகளை வலுப்படுத்தும் ஆஸ்திரேலியா

  • March 22, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா தனது முக்கிய நகரங்களுக்கு அருகில் ஏவுகணை ஆயுதக் கிடங்குகளை வலுப்படுத்த திட்டங்களைத் தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. சீனாவின் சமீபத்திய கடற்படை நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனா சமீபத்தில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பல சந்தர்ப்பங்களில் கடற்படைப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது, அவற்றில் பல ஆஸ்திரேலியாவுக்கு அருகில் நடத்தப்பட்டன. சீனாவிற்கு எதிரான தனது இராணுவ தயாரிப்புகளை ஆஸ்திரேலியா முடுக்கிவிட்டதாகவும், அதன் படைகளை மேம்பட்ட நீண்ட தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளால் சித்தப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் சமீபத்தில் செய்தி […]