ஐரோப்பா

ஜெர்மனில் காலநிலை ஆர்வலர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்திய பொலிஸார்!

  • May 24, 2023
  • 0 Comments

ஜேர்மன் பொலிஸார் இன்று(24) கடந்த தலைமுறை காலநிலை ஆர்வலர்களின் வீடுகளில் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பவேரியா குற்றவியல் காவல் அலுவலகம், குற்றவியல் அமைப்பை உருவாக்குதல் அல்லது ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேற்படி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. இதன்படி முனிச்சில் 22 முதல் 38 வயதுடை ஏழு சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. “சந்தேக நபர்கள் ‘கடந்த தலைமுறை’ செய்த குற்றச் செயல்களுக்கு நிதியளிப்பதற்காக நிதி திரட்டும் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ததாக குற்றம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

வியாழன் கோளில் ஏற்படும் நிற மாற்றங்கள் : ஒரு அடடே தகவல்!

  • May 24, 2023
  • 0 Comments

சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக வியாழன் உள்ளது. பூமியை போல் 1300 மடங்கு பெரியதாகும்.   இதைச்சுற்றி தூசித் துகள்களால் ஆன வளையங்கள் உள்ளன. வியாழன் கிரகத்தில் நிறங்கள் அடிக்கடி மாறி வருகின்றன. இவ்வாறு அடிக்கடி நிறங்கள் மாறுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். லீட்ஸ்  பல்கலைக்கழகத்தைச் (University of Leeds) சேர்ந்த வானியலாளர்கள் கூறும்போது,  வியாழன் கிரகத்தின் காந்த புலத்தில் அதன் உட்புறத்தில் ஆழமாக உற்பத்தி செய்யப்படும் அலைகளால் நிறங்கள் […]

ஐரோப்பா

பிரான்சில் குறுந்தூர விமான சேவைகளுக்கான தடை அமுலுக்கு வந்தது!

  • May 24, 2023
  • 0 Comments

குறுந்தூர உள்ளூர் விமான சேவைகளுக்கு பிரான்ஸில் உத்தியோகபூர்வமாக தடை அமுலுக்கு வந்துள்ளது விமானங்களால் வெளியிடப்படும் சூழல் மாசு வாயுக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும். இரண்டரை மணித்தியாலங்களுக்குள் ரயில் மூலம் பயணம் செய்யக்கூடிய தூரங்களுக்கான உள்ளூர் விமானப் பயணங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம்,  பாரிஸுக்கும் லியோன்,  நொன்ட்,  போடோவ் முதலான முக்கிய பிராந்திய நகரங்கள் பலவற்றுக்கும் இடையிலான விமான சேவைகளில் பெரும்பாலானவற்றை இல்லாமலாக்கி விடும் எனக் கருதப்படுகிறது. இதற்கான சட்டம் 2 வருடங்களுக்கு முன்னர் பிரெஞ்சு பாராளுமன்றத்தில் […]

இலங்கை

ஜெரொம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை!

  • May 24, 2023
  • 0 Comments

ஜெரொம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (24) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ஜெரொம் பெர்னாண்டோவை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி எல்லே குணவம்ச தேரர் உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று அழைக்கப்பட்ட போதுஇ ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன இதனை தெரிவித்தார். சம்பந்தப்பட்ட போதகருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிவில் […]

இலங்கை

தொடர்ந்து வலுப்பெற்று வரும் இலங்கை நாணயம்!

  • May 24, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (மே 24) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய கொள்முதல் விலை 297.98, ரூபாவாகவும்,  விற்பனை விலை  311.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி

  • May 24, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் பல்கலைக்கழகங்களில் பயிலும் சர்வதேச மாணவர்கள், தங்களது குடும்பத்தினரை பிரித்தானியாவிற்கு அழைத்து வர பிரதமர் ரிஷி சுனக் தடை விதிக்க முடிவு செய்துள்ளார். பிரித்தானியாவிலுள்ள பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியாவிற்கு அழைத்து வர தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 2024 முதல் பிஎச்டி நிலைக்கு கீழே உள்ள பல்கலைக் கழகங்களில் படிப்பவர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்களையோ அல்லது உறவினர்களோ, பிரித்தானியாவிற்கு அழைத்து வர தடை விதிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் […]

செய்தி தமிழ்நாடு

சாலை விபத்தில் ராஜஷ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பலி

  • May 24, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஜெ.ஜெ நகரில் வசித்து கட்டட வேலை பார்த்து வரும் ராஜஷ்தான் மாநிலத்தை சேர்ந்த வட மாநில கட்டட தொழிலாளர்கள்மகேந்திரன், ஹரிபாபு இருவரும் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணி மனை முன்பு வரும்போது எதிரே வந்த டாடா ஏசி வாகனத்தில் இருசக்கர வாகனத்தில் வட மாநில கட்டட தொழிலாளர் இருவர் மோதியதில் தூக்கி வீசபட்ட வட மாநில தொழிலாளர் மகேந்திரன் என்பவர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார் […]

செய்தி தமிழ்நாடு

திருமண மேடைக்கு அழைத்து வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளை

  • May 24, 2023
  • 0 Comments

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அய்யங்கோட்டை பகுதியை சேர்ந்த சுகப்பிரியா என்பவருக்கும், நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்ற வாலிபருக்கும் நேற்று நாகமலைப்புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணப்பெண்ணான சுகப்பிரியா, தனது வீட்டில் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையையும் புகுந்த வீட்டிற்கு தன்னுடன் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மணமேடையிலேயே ஜல்லிக்கட்டு காளையை ஏற்றி, காளைக்கு முத்தமிட்டு மணமகன் ராஜபாண்டிக்கு அறிமுகம் செய்ததோடு, காளையுடன் புகைப்படம் […]

செய்தி தமிழ்நாடு

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

  • May 24, 2023
  • 0 Comments

ஆவுடையார்கோவிலில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் தாலுகா தலைவர் வீரையா தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தில் 200 நாள் வேலையும் ரூபாய் 600 கூலியும் வழங்க வேண்டும். நெட் வேலை செய்யவில்லை என்று மதியம் 11 மணி வரை தொழிலாளரை காக்க வைத்து வீட்டுக்கு அனுப்பும் செயலை கைவிட வேண்டியும், கிராமசபையில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு உடன் நடவடிக்கை எடுக்க கோரியும் , அரிமழம் ஊராட்சி […]

செய்தி தமிழ்நாடு

கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்த நடிகர் சாய் தீனா

  • May 24, 2023
  • 0 Comments

குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் ஊராட்சியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம்,பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 38க்கும் மேற்பட்ட அணி வீரர்கள் பங்கு பெற்றனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பகல், இரவு ஆட்டங்களாக நடைபெற்றது. இதில் இறுதியாக பாண்டிச்சேரி அணி வெற்றி பெற்று கோப்பையும், பரிசுத்தொகையும் பெற்றனர். இதில் திரைப்பட நடிகர் சாய் தீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களிடம் கைப்பந்தை வீசி போட்டியை தொடங்கி வைத்து […]

You cannot copy content of this page

Skip to content