uk bordr agency ஐரோப்பா

பிரித்தானியாவில் பணியாற்ற தீவிர ஆர்வம் காட்டும் வெளிநாட்டு தொழிலாளர்கள்!

  • August 23, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பிரெக்சிட்டிற்குப் பிந்தைய குடியேற்ற அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தை விட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நாட்டை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற உதவியது என indeed தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்மடு பிரெக்சிட்டிற்குப் பிந்தைய குடியேற்ற மறுசீரமைப்பிற்குப் பிறகு சர்வதேச விண்ணப்பதாரர்களிடமிருந்து பிரித்தானிய வேலை ஆர்வம் அதிகரித்துள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிரித்தானியாவுக்கு வெளியே உள்ளவர்களிடமிருந்து Indeed இணையதளத்தில் பிரித்தானிய வேலைப் பட்டியல்களின் பார்வைகள் 142% உயர்ந்துள்ளன. மேலும் குறைந்தபட்சம் 2017 இல் இருந்து எந்த […]

இலங்கை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு மன்னிப்பு கிடையாது – தேரரின் அதிரடி அறிவிப்பு

  • August 23, 2023
  • 0 Comments

பௌத்த மதத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் கோடி முறை மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க முடியாதென இரத்மலானை தர்ம ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் ஹெகொட விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். அதற்கு சட்டத்தின் மூலமே பதிலளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெரோம் பெர்னாண்டோ, பௌத்த மதத்தை அவமதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே அவ்வாறு செய்தார் எனவும் அவர் தவறுதலாக அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் பௌத்த மதத்தை அவமதித்ததற்கு […]

ஐரோப்பா

பிரான்ஸில் 12 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • August 23, 2023
  • 0 Comments

பிரான்ஸில் சிறுவன் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் Garches (Hauts-de-Seine) நகரில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 12 வயதுடைய சிறுவனே இந்த தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொப்பி ஒன்றை விற்பனை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த சந்திப்பு, தாக்குதலில் முடிந்துள்ளது. மாலை 5 மணி அளவில் இந்த சந்திப்பு Golf de Saint-Cloud மைதானத்துக்கு அருகே இடம்பெற்றது. சிறுவனிடம் இருந்து பொருளை வாங்க வந்த நபர், சிறுவனை தாக்கி விட்டு அவனிடம் இருந்த […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கத்தியுடன் சுற்றி திரிந்த மர்ம நபருக்கு நேர்ந்த கதி

  • August 23, 2023
  • 0 Comments

ஜெர்மனி – நியுஸ்பேர்க்கில் நபர் ஒருவர் கத்தியோடு காணப்பட்டுள்ள நிலையில பொலிஸார் சரமாரியான துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர். 17ஆம் திகதி இல் நியுஸ்பேர்க் நகரத்தில் பொலிஸார் ஒருவர் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரியவந்துள்ளது. தற்போதே செய்தி வெளியாகியுள்ளது. அதாவது நியுஸ்பேர்க் நகரத்தில் ஒரு நபரானவர் கத்தி ஒன்றுடன் பொலிஸார் மீது வன்முறையை பிரயோகித்துள்ளனர். அதனால் பொலிஸார் குறித்த நபரிடம் கத்தியை கீழே போடுமாறு எச்சரித்துள்ளார். இருப்பினும் குறித்த நபர் வேண்டுதலுக்கு செவிசாய்க்க வில்லை என தெரியவந்து […]

செய்தி

இலங்கையில் கலை பிரிவு பட்டதாரிகள் வெளிநாடு செல்வதில் சிக்கல்!

  • August 23, 2023
  • 0 Comments

இலங்கையில் கலைப் பிரிவில் பட்டம் பெற்றவர்களில் 70 வீதமானவர்களுக்கு இலங்கையில் வேலை இல்லை என தெரியவந்துள்ளது. அதனால்தான் முழுப் பல்கலைக்கழக அமைப்பும் விமர்சனத்துக்குள்ளானது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பது தொடர்பான முன்மொழிவுகளைத் தயாரிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளிநாடு செல்லும் தரப்பினரிடம் இருந்து பட்டப்படிப்பிற்காக அரசாங்கம் […]

செய்தி

மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிந்த இளம் கர்ப்பிணி பெண்

  • August 22, 2023
  • 0 Comments

பிரேசிலில் உள்ள பாராயிபா மாகாணத்தில் உள்ள காம்பினா கிராண்டே நகரில் உள்ள மான்டே காஸ்டெலோவைச் சேர்ந்தவர் ஜெனிபர் கரோலின் (17). அவர் கர்ப்பமாக இருந்தார். கடந்த 17ம் திகதி, திடீரென ஏதோ ஒன்று விழுந்த சத்தம் கேட்டு, அவரது மனைவி பயங்கரமாக அலறுவதைப் பார்த்து, அந்தப் பெண்ணின் கணவர் ஓடி வந்தார். உடனே மனைவியை தூக்க முயன்ற அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரது மனைவி, ஜெனிபர், குளித்து முடித்துவிட்டு, ஈரமான போனை சார்ஜ் செய்ய முயற்சிக்கிறார். அவர் […]

இலங்கை செய்தி

குருந்தூர்மலை விவகாரம்!! நீதிபதி மீது சரத் வீரசேகர குற்றச்சாட்டு

  • August 22, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி, குருந்தூர் மலையில் பொங்கல் விழாவை நடத்த அனுமதித்ததன் மூலம் தொல்பொருள் திணைக்களத்தின் சட்டங்களை மீறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பௌத்தர்களின் மனங்களுக்கு எதிராக செயற்படுவதும் அவர்களைத் தூண்டிவிடுவதும் தண்டனைக்குரிய விடயம் என இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என குற்றச்சாட்டுக்கள் […]

ஆசியா செய்தி

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழர்

  • August 22, 2023
  • 0 Comments

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில், சீன வம்சாவளியைச் சேர்ந்த இருவரை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சரான, தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கியுள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் முதலாம் திகதி நடக்கிறது. 75 வயதான எங் கோக் சோங் ஏற்கனவே போட்டியிடுகிறார். சிங்கப்பூர் அரசு நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணிபுரிந்தார். மேலும், 75 வயதான […]

ஆசியா செய்தி

15 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்லாந்து திரும்பிய முன்னாள் தலைவர் சிறையில் அடைக்கப்பட்டார்

  • August 22, 2023
  • 0 Comments

தாய்லாந்து முன்னாள் தலைவர் தக்சின் ஷினவத்ரா, நாடு கடத்தப்பட்ட பின்னர் 15 ஆண்டுகளுக்கு பின் நேற்று நாடு திரும்பிய நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது கட்சியின் வேட்பாளர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். 74 வயதான பில்லியனர் பழைய ஊழல் குற்றச்சாட்டில் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் எவ்வளவு காலம் சிறையில் இருப்பார் என்பது தெரியவில்லை. 2001 இல் தாய்லாந்தின் பிரதமராகப் பதவியேற்று, […]

இலங்கை செய்தி

அனுமதி வழங்கிய போதிலும் வாகனங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்

  • August 22, 2023
  • 0 Comments

பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், தேவையான கடனுதவிகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, அந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலில், தற்போதும் அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த நாட்டில் வழங்கப்படும் சர்வதேச கடன் கடிதங்கள் சர்வதேச ரீதியில் […]