இலங்கை

வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றது! ஜூலி சங்

தற்போது வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று (23.08.2023) ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநரைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து தூதுவருக்கு விளக்கமளித்த ஆளுநர், மீள்குடியேற்றம், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட மக்களின் பொதுவான உட்கட்டமைப்புகள் தொடர்பில் அதிக கவனம் […]

இலங்கை

குடு கயானியின் வீட்டை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

  • August 23, 2023
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல் காரணமாக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள “குடு கயானி” என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் கயானி தில்ருக்ஷியின் விசாலமான வீட்டை பறிமுதல் செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவின் சைபர் மோசடி விசாரணை பிரிவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2019 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் அவர் இந்த வீட்டைக் கட்டியுள்ளார் என்றும், கட்டப்பட்டு வரும் வீட்டின் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என்றும் விசாரணை […]

வட அமெரிக்கா

மணிக்கு 132 கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்திய கனடிய துணை பிரதமர்

  • August 23, 2023
  • 0 Comments

கனடாவில் வேகமாக வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் அந்நாட்டு பிரதி பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கனடாவின் பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா பரிலாண்டுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தமக்கு சொந்தமாக ஒரு கார் இல்லை என ஃப்ரீ லேண்ட் தெரிவித்துள்ளார்.வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அல்பர்ட்டா மாகாண அதிகாரிகள் ப்ரீலாண்டுக்கு 273 டொலர்கள் அபராதம் விதித்துள்ளனர். மணிக்கு 132 கிலோ மீட்டர் வேகத்தில காரை செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அல்பர்ட்டா மாகாணத்தில் அதிவேகமாக வாகனங்கள் செலுத்தக்கூடிய வேகக் கட்டுப்பாடு மணிக்கு […]

பொழுதுபோக்கு

‘ரஜினி 170’ ?… அட்டகாசமான அப்டேட் வெளியானது….

  • August 23, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் பட்டையை கிளப்பி வரும் நிலையில் அடுத்த படத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த படம் எப்படி இருக்கப்போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதனால் அந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் உன்னிப்பாக பார்த்து வருகின்றனர். ரஜினியின் 170வது படமாக உருவாகும் அந்த படத்தை ‘ஜெய் பீம்’ இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கவுள்ளார். அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள அந்த படத்தை லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. அந்த […]

இலங்கை

வேறு நாட்டில் பிரஜாவுரிமைபெற்ற முஸ்லிம் நபர் இலங்கையில் திருமணம் செய்தல் தொடர்பான தடைநீக்கப்பட வேண்டும் – ரிஷாட் வலியுறுத்தல்

  • August 23, 2023
  • 0 Comments

வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் ஒருவர், இங்கு வந்து திருமணம் செய்ய முடியாது என்ற தடை நீக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில்(22) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான கொண்டுவந்த இந்தப்பிரேரணையானது காலத்திற்கு தேவையான ஒன்றாகும். பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் களின் வசதிகளைப் பார்க்கின்ற போது, மிகவும் மோசமான ஒரு நிலையே காணப்படுகிறது. […]

இலங்கை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் இன்றைய தினம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை யாழில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த துணைத்தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். […]

இலங்கை

இலங்கையில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • August 23, 2023
  • 0 Comments

இந்த வருட காலப்பகுதியில், கிட்டத்தட்ட 350 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று STD மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டம் அறிவித்துள்ளது. இன்று (23.08) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட STD மற்றும் AIDS திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 607 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும்,    15 தொடக்கம் 49 வயதுக்குட்பட்டவர்களிடமே STDகள் அதிகம் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் வரலக்ஷ்மி பூஜை

  • August 23, 2023
  • 0 Comments

ஸ்ரீ பத்திரகாளி அம்பாளுக்கும், ஸ்ரீ மகாலக்ஷ்மி அம்பாளுக்கும் நிகழும் சோபகிருது வருடம் ஆவனி மாதம் 8ம் நாள் எதிர்வரும் (25/08/2023) வெள்ளிக்கிழமை ஆலய வேதாகமமாமணி ஆதீன கர்த்தா பிரம்மஸ்ரீ.சோ.இரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் வரலக்ஷ்மி பூஜை விஞ்ஞாபனம் நடைபெற திருவருள் கூடியுள்ளது. ஸ்ரீ மகாலக்ஷ்மி அம்பாளுக்கு வரலக்ஷ்மி பூஜை வழிபாடும், தொடர்ந்து கன்னிப் பெண்கள், சுமங்கலிகள், தீப பூஜையும் நடாத்த திருவருள் கூடியுள்ளது. சோபகிருது வருடம் ஆவனி மாதம் 8ம் நாள் (25/08/2023) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு […]

இந்தியா

நிலவில் தடம் பதித்தது சந்திரயான்-3

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 40 நாள் பயணத்திற்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23 அன்று இந்திய நேரப்படி மாலை 6.04 மணிக்கு சந்திரனில் தரையிறங்கியது. இஸ்ரோ தானியங்கி தரையிறங்கும் வரிசையை மாலை 5.44 மணிக்கு தொடங்கியது. விக்ரம் லேண்டர் இப்போது அதன் ஆன்போர்டு கம்ப்யூட்டர்கள் மற்றும் லாஜிக்கைப் பயன்படுத்தி நிலவில் மென்மையாக தரையிறங்கியது. அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட […]

இலங்கை

குருந்தூர் மலை விவகாரம் : பிரிவினைவாத மோதல் ஏற்படும் என எச்சரிக்கை!

  • August 23, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு குறுந்தூர்  பௌத்த விகாரையை தமிழ் இந்து கோவிலாக மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்  ஜெயந்த சமரவீர குறிப்பிடுகின்றார். இந்த பிரச்சனையால் மதவாத, இனவாத, பிரிவினைவாத மோதல் உருவாகலாம் என இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். தொல்பொருள் திணைக்களம் தனது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றாமையே இதற்குக் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார். தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் இலங்கையின் தொல்பொருள் பாரம்பரியத்தின் பாதுகாவலராக இருக்கும் போதே இந்த வரலாற்றுச் […]