பொழுதுபோக்கு

அவரை நிம்மதியாக வாழ விடுங்கள்; அஜித்துக்கு ஏற்பட்ட நிலை

  • August 24, 2023
  • 0 Comments

அஜித் ஏர்போர்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்களின் செயலை நெட்டிசன்கள் பலரும் கண்டித்து, அறிவுரை கூறியுள்ளனர் அஜித் குமார் எப்போதும் போல பாதுகாப்பை தவிர்த்து விமான நிலையத்தை விட்டு தானாகவே வெளியேறினார். இருப்பினும், விமான நிலையத்தில் அஜித்தைக் கண்ட அவரது தீவிர ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவருடன் போட்டோ எடுக்கவும் கை கொடுக்கவும் முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், அஜித் அசௌகரியத்துடன் தனது […]

இலங்கை செய்தி

டுபாயில் 42 இலங்கை பெண்களுக்கு நேர்ந்த கதி!

துபாயில் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிந்த 42 பேரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுபாயில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. துபாயில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளானதன் காரணமாகவே அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முன்னதாக, 10 பேர் கொண்ட குழு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா

ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்ததில் 3 பேர் பலி- ஒருவர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள டூடு பகுதியில் டிப்பர் வாகனம் சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. புதன்கிழமை இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரு மூத்த போலீஸ் அதிகாரி இறந்ததை உறுதிப்படுத்தினார், காயமடைந்தவர்களை வாகனத்தில் இருந்து வெளியே எடுக்க மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது.

இலங்கை

இந்தியாவின் வரலாற்று சாதனையால் இலங்கை பெருமிதம் கொள்கிறது! ரணில் விக்கிரமசிங்க

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் வரலாற்று சாதனைக்காக இலங்கை பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் சந்திரயான்-3 நேற்று புதன்கிழமை நிலவின் தென் துருவத்திற்கு அருகில் மெதுவாக தரையிறங்கும் முதல் விண்வெளிப் பயணமாக மாறியது. சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய இந்திய பிரதமர் மோடி, இஸ்ரோ குழுவினர் மற்றும் இந்திய மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார், இது சந்திரனின் […]

பொழுதுபோக்கு

பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடிய பூமிகா…

  • August 24, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் ‛ரோஜாக்கூட்டம்’ படம் மூலம் பிரபலமானவர் நடிகை பூமிகா சாவ்லா. அதை தொடர்ந்து விஜய்யுடன் பத்ரி, சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு கொஞ்ச காலம் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த பூமிகா சமீப காலமாக செலெக்ட்டிவ்வான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதயநிதி நடிப்பில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது தனது 45வது […]

இலங்கை

மன்னாரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ; இருவர் பலி

  • August 24, 2023
  • 0 Comments

மன்னார் பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கொலையாளிகள், இறந்தவர்கள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்த சரியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வட அமெரிக்கா

புலம்பெயர்வாளர்களுடன் பயணித்த பேருந்து மீது மோதிய லொறி – 16பேர் பலி, 36 பேர் படுகாயம்

  • August 24, 2023
  • 0 Comments

மெக்சிகோவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் புலம்பெயர்ந்தோர் 16 பேர் கொல்லப்பட்டனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஒக்ஸாகா மாநிலத்தை நோக்கி தெற்கே செல்லும் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று பயணித்தது.அப்போது லொறி ஒன்று பேருந்து மீது பயங்கரமாக மோதியது பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 16 பேர் பலியாகினர். மேலும் 36 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் 15 பேர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் வெனிசுலாவைச் சேர்ந்தவர் என்றும் மெக்சிகோவின் தேசிய […]

இலங்கை

நீர்கொழும்பில் தீக்கரையான அதிசொகுசு பேரூந்து..!

  • August 24, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்தபஸ் வியாழக்கிழமை (24) அதிகாலை 4:30 மணியளவில் நீர்கொழும்பில் தீ விபத்துக்கு உள்ளாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த என்.டி. 0321 இலக்கம் கொண்ட சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. இதன் போது பஸ் முற்றாக எரிந்து உள்ளதுடன் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது  

ஆசியா

புகுஷிமா கதிரியக்க கழிவு நீரை கடலில் திறந்து விட்டது ஜப்பான்.!

  • August 24, 2023
  • 0 Comments

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போரிக் அமில ரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. அணுக்கசிவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட கடலில் நீர், கதிரியக்க கழிவு நீராக மாறியது. அந்த நீரை சுத்திகரித்து பசிபிக் கடலில் விட ஜப்பான் முயற்சி மேற்கொண்டது. இதற்காக அவற்றை சுத்திகரித்து பேரல்களில் சேமித்து வைக்கப்பட்டது. ஆனால், மீனவர்கள் மற்றும் சீனா தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், நீரை வெளியேற்றுவதற்கான […]

வட அமெரிக்கா

தைவானுக்கு 500 மில்லியன் டொலர் அளவிற்கு ஆயுதங்கள் விற்க பைடன் அரசு ஒப்புதல்

  • August 24, 2023
  • 0 Comments

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தைவான் தங்களின் ஒரு பகுதி எனக் கூறி வரும் சீனா, அடிக்கடி ராணுவம் மூலம் தைவானை அச்சுறுத்தி வருகிறது. அதேவேளையில் தைவான் அமெரிக்காவுடன் நட்புடன் பழகி வருகிறது. இந்நிலையில் தைவானுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆயுதங்கள் விற்க ஜோ பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. நவீன எப்-16 போர் விமானத்தின் உபகரணங்கள், உதிரிப்பாகங்கள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உள்ளிட்டவை அதில் அடங்கும். […]