பொழுதுபோக்கு

தேசிய விருதுக்கு தேர்வான படங்கள்… தமிழ் படங்களுக்கு பெரும் ஏமாற்றம்…

  • August 24, 2023
  • 0 Comments

69 ஆவது தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அதில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த படங்களும் தேர்வாகி இருக்கிறது. அந்த வகையில் சிறந்த தமிழ் படமாக விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று பான் இந்தியா படமாக உருவான மாதவனின் ராக்கெட்டரி படமும் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது. இந்த இரு படங்களை தவிர வேறு எந்த பிரிவிலும் தமிழ் படங்கள் தேர்வாகவில்லை. அந்த வரிசையில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்திற்கு […]

பொழுதுபோக்கு

69 ஆவது தேசிய திரைப்பட விருது! கருவறை குறும்படத்திற்கு கிடைத்த வெற்றி

EV கணேஷ்பாபுவின் கருவறை குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. EV கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் குறுத் திரைப்படம் கருவறை. மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் குறுத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இக் குறுத் திரைப்படத்தில் ரித்விகா,மிதுன், வடிவுக்கரசி,அஞ்சனா தமிழ்ச்செல்வி,ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர். NK.இராஜராஜன் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த்தேவா இசையில், சுராஜ்கவி படத்தொகுப்பில், UKlஐயப்பன் (சவுண்ட்) ஒலிப்பதிவில், மனோ கலை இயக்கத்தில் இள.வாசுதேவன் ராஜன்கோவிந்தராஜன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பில், PRO சதீஷ் […]

இலங்கை

திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை!

  • August 24, 2023
  • 0 Comments

திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் பாமர பிக்குகள் உட்பட கிட்டத்தட்ட இருநூறு நோயுற்ற துறவிகள் உள்ளனர். மின்சார கட்டணமாக  சுமார் 57 இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டும் என  திம்புலாகல புத்த ஸ்ராவக சங்க சபையின் பதிவாளர் திம்புலாகல ராகுலலங்கார நஹிமி தெரிவித்தார்.

இலங்கை

போலி விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்டவர் கைது!

  • August 24, 2023
  • 0 Comments

போலி விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற நபரை கட்டுநாயக்க குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஐக்கிய அரபு இராச்சியம் ஊடாக கனடா செல்ல முயற்சித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர் பல சந்தர்ப்பங்களில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு திரும்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது. நேற்று (23.08) பிற்பகல் குறித்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான அனுமதிப் பணிகளை மேற்கொள்வதற்காக வந்தடைந்ததுடன், […]

இந்தியா

சந்திரயான்-3 வெற்றி வாழ்த்திய சுந்தர் பிச்சை! ரிப்ளை செய்த எலான் மஸ்க்

நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை படைத்துள்ளது இதற்கு காரணமான இஸ்ரோவை கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை. ட்வீட் செய்து பாராட்டியுள்ளார் அதற்கு எலான் மஸ்க் ரிப்ளை கொடுத்துள்ளார். சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நேற்று நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் ரோவர் உலா வருகிறது. 14 நாட்களுக்கு இந்த ஆய்வு […]

இலங்கை

ஆண் நண்பருடன் ஹோட்டலுக்கு வந்த பெண் உயிரிழப்பு!

  • August 24, 2023
  • 0 Comments

பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர் 40 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண், ஆண் ஒருவருடன் இந்த ஹோட்டலில் தங்க வந்திருந்த நிலையில், குறித்த ஆணே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை

நெடுந்தீவு -மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ள குமுதினி படகு

  • August 24, 2023
  • 0 Comments

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு இன்று வியாழக்கிழமை (24) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகாட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது. நேற்று மாலை குமுதினிப் படகு குறிகாட்டுவானில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு நெடுந்தீவு சென்று தரித்ததுடன் இன்று காலை 7 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குமுதினிப் படகு குறிகாட்டுவான் நோக்கிப் புறப்பட்டு அங்கிருந்து மீண்டும் நெடுந்தீவுக்கு பயணித்தது. யாழ்.குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல்வழிப் […]

இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • August 24, 2023
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் நாளைய (25.08)  தினம் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், இந்தப் பகுதிகளில் சில இடங்களில் கவனம் செலுத்த வேண்டிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

விளையாட்டு

செஸ் இறுதிப் போட்டி; தமிழக வீரருக்கு 2ஆம் இடம்

  • August 24, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியுற்று இரண்டாம் இடம் பிடித்தார். உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா விளையாடினார். இரு கிளாசிக்கல் […]

இலங்கை

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை சம்பவம்! சிறைச்சாலையில் பிரதான சந்தேநபரிடம் இருந்து தொலைபேசி மீட்பு

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேநபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த நபர்கள் அவ் வீட்டில் இருந்த ஒருவர் மீது வாள் வீசி தாக்கியதுடன், வீட்டிற்கு பெற்றோல் ஊற்றி […]