அறிந்திருக்க வேண்டியவை

செவ்வாய் கிரகத்தின் சுழற்சியின் வேகத்தில் திடீர் மாற்றம் – நாசா வெளியிட்ட காரணம்

  • August 25, 2023
  • 0 Comments

இன்சைட் லெண்டரை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பியது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த லேண்டர் செவ்வாய் கிரகத்தை சென்று அடைந்து ஆய்வு தொடங்கியது. இந்த திட்டம் எரிசக்தி தீர்ந்ததால் முடிவுக்கு வந்தது. இன்சைட் லேண்டர் சேகரித்து அனுப்பி வைத்த தரவுகளை நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ஆய்வில் ஒவ்வொரு ஆண்டும் செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் அதிகரித்து வருவதாக தெரிய வந்ததுள்ளது. இந்த பகுப்பாய்வில் […]

ஐரோப்பா

”அவர் தவறு செய்தார், அதன் விளைவாக முடிவை எய்தினார்” – புட்டின்!

  • August 25, 2023
  • 0 Comments

வாக்னர் கூலிப் படையின் தலைவரான யெவ்கெனி பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய புட்டின், பிரிகோஜினின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிதித்தார். அத்துடன், அவர் ஒரு திறமையான தொழிலதிபர் என்று புட்டின் பாராட்டினார். விபத்து தொடர்பில் இறந்ததாக நம்பப்படுகின்ற 10 பேரின் எச்சங்களை புலனாய்வாளர்கள் இன்னும் உறுதியாக அடையாளம் காண வேண்டும் என்றும், ஆய்வுக்கு நேரம் எடுக்கும் என்றும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்தில் 10 வருடத்தில் ஏற்படவுள்ள மாற்றம் – வெளியான தகவல்

  • August 25, 2023
  • 0 Comments

தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்த பேச்சு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் 2033ல் மனிதர்களுடைய வாழ்க்கையில் AI எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு, AI சாபாட் கொடுத்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனது பயணத்தை வேகமாகத் தொடங்கிய AI, தொடக்கத்தில் ஆய்வாளர்களும் சில தொழில்நுட்ப வல்லுனர்களும் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது 21ம் நூற்றாண்டில் எல்லா தரப்பு மக்களும் இதைப் பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இதனுடைய […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அரிய வகை ஒட்டகச்சிவிங்கி – பார்வையிட குவியும் மக்கள்

  • August 25, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் அரிய ஒட்டகச்சிவிங்கி பிறந்துள்ளது. புள்ளிகளே இல்லாமல் பிறந்திருப்பதே இந்த ஒட்டகச்சிவிங்கியின் சிறப்பு அம்சமாகும். கடந்த மாதம் 31ஆம் தேதி Bright விலங்குத் தோட்டத்தில் பிறந்த அது தற்போது 6 அடி உயரம். அந்தப் பெண் ஒட்டகச்சிவிங்கியின் உடல் பழுப்பு நிறத்தில் உள்ளது. 1972ஆம் ஆண்டு ஜப்பானில் புள்ளிகளே இல்லாத ஒட்டகச்சிவிங்கி ஒன்று பிறந்தது. அதன் பின்னர் அத்தகைய ஒட்டகச்சிவிங்கி அமெரிக்காவில் பிறந்திருப்பதாக நம்பப்படுகிறது. அதன் பெயர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தாயின் பராமரிப்பிலும் விலங்குத் […]

இலங்கை

பச்சை குத்துபவர்கள் தொடர்பில் வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • August 25, 2023
  • 0 Comments

பச்சை குத்தியவர்களிடமிருந்து இரத்தம் எடுக்கப்பட மாட்டாது என தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் டொக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இணைய சேனல் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  பச்சை குத்துவதன் மூலம் சமூக நோய்கள் பரவும் போக்கு அதிகரித்து வருவதும், இந்த நாட்டில் உள்ள பல பச்சை குத்தும் மையங்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார பரிந்துரைகளை பின்பற்றாததுமே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். நிலைமையை மேலும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் 11 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த கதி – தீவிர விசாரணையில் பொலிஸார்

  • August 25, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். Nîmes மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Pissevin எனும் பகுதியில் வைத்து இரவு 11.30 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. வாகனத்திற்குள் இருந்து குறித்த 11 வயதுடைய சிறுவனின் சடலத்தையும், அவனது உறவினர் ஒருவர் படுகாயமடைந்த நிலையிலும் பொலிஸார் மீட்டுள்ளனர். ஆயுததாரி தப்பிச் சென்றுள்ளதாகவும், வாகனத்தை இயக்க முற்பட்டவேளையில் சிறுவன் மீது துப்பாக்கிக்குண்டு பாயந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பணிக்கு செல்லாத பெற்றோர்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்

  • August 25, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பணிக்கு செல்லாது இருக்கும் பெற்றோர்கள் தமது குழந்தை வளர்ப்புக்காக பெற்றுவருகின்ற நிதி தொடர்பாக பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. ஜெர்மனியில் குழந்தைகள் பிறந்து அவர்களை பராமரிப்பதற்காக பெற்றோர் பணிக்கு செல்லாது விடுமுறையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற பணத்தில் ஓர் மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட இருக்கின்றது. பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பாக சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருந்தது அதாவது இதுவரை காலங்களும் இவ்வாறு எல்டன் கில்ட் ஐ பெறுவதற்கு தாய் மற்றும் தந்தையர் வருமானமானது வருடம் […]

இலங்கை

ஆனமடுவ பகுதியில் இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து!

  • August 25, 2023
  • 0 Comments

ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதிகள் இருவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனமடுவ பரமகந்த சந்திக்கு அருகில் நேற்று (24.08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை முந்திச் செல்ல முற்பட்ட லொறி ஒன்று எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் பின்னர் பிரதேசவாசிகள் லொறிகளில் சிக்கி படுகாயமடைந்த சாரதிகளை மீட்டு புத்தளம் […]

இலங்கை

தெற்கு அதிவேக வீதியில் கைவிடப்பட்ட சொகுசு ஜீப்!

  • August 25, 2023
  • 0 Comments

தெற்கு அதிவேக வீதியில் கடத்தப்பட்டுக்கொண்டிருந்த சொகுசு ஜீப் வண்டியொன்றை கலானிகம போக்குவரத்து பொலிஸார் சமாளித்துள்ளனர். இதன்படி, காலி பத்தேகம பகுதியில் இருந்து கடத்தப்பட்ட சொகுசு ஜீப் வண்டியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எவ்வாறாயினும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 9.2 கிலோமீற்றர் பகுதியில் சொகுசு ஜீப்பை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்ததையடுத்து, சந்தேக நபர்கள் வாகனத்தை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். நான்கு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காலி பத்தேகம பிரதேசத்தில் வசிக்கும் காரை அதன் உரிமையாளர் விற்பனைக்கு […]

இலங்கை

இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட 09 நிறுவனங்கள்!

  • August 25, 2023
  • 0 Comments

பிரமிட் பண பரிவர்த்தனைகள் கொண்ட திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தற்போது இயங்கி வரும் மற்றும் தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்தி வரும் 9 நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடங்கும், வழங்குகிற, விளம்பரப்படுத்துகிற, விளம்பரப்படுத்துகிற, நடத்துகிற, நிர்வகிக்கிற அல்லது நடத்துகிற எந்தவொரு நபரும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்கிறார் என்று மத்திய வங்கி […]