இலங்கையில் மற்றுமொரு ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் எலிக்காய்ச்சல் நோய்க்கு வழிவகுக்கும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். குறைந்தளவு நீர் உள்ள இடங்களில் குளிப்பதன் மூலம் தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.