விளையாட்டு

ஸ்பெயின் மகளீர் கால்பந்து அணியின் முக்கிய அறிவிப்பு

  • August 26, 2023
  • 0 Comments

மகளிர் உலக கால்பந்து போட்டி சமீபத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடந்தது. இதில் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது. மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது. லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். அவர் கூறும்போது, நான் கண்டிப்பாக தவறு […]

இந்தியா

நிலாவில் விக்ரம் லேண்டர் தரையிரங்கிய இடத்திற்கு பெயர்: இஸ்ரோவில் பிரதமர் மோடி

சந்திரயான்-3 இன் லேண்டர் விக்ரம் தரையிறங்கிய நிலவில் உள்ள இடம் ‘சிவ்சக்தி பாயின்ட்’ ‘Shiv Shakti Point’,என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இன்று உரையாற்றினார். வரலாற்று சிறப்புமிக்க சந்திரயான்-3 திட்டத்திற்குப் பின்னால் உள்ள விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றிருந்தார். “நிலவில் தொடும் இடத்திற்கு பெயரிடுவது ஒரு மாநாடு. மேலும் இந்தியாவும் இப்போது விக்ரம் லேண்டரைத் தொட்ட இடத்திற்கு […]

பொழுதுபோக்கு

‘ஜப்பான்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கார்த்தியை சூழ்ந்த ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படங்கள்

‘பொன்னியின் செல்வன் 2’ வெற்றிக்குப் பிறகு நடிகர் கார்த்தி தனது புதிய படமான ‘ஜப்பான்’ மூலம் மீண்டும் வருகிறார், இது தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளிவரத் தயாராகி வருகிறது. இப்போது, ​​படத்தின் படப்பிடிப்பிற்கு மத்தியில் நடிகர் தனது ரசிகர்களை சந்தித்தார் மற்றும் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன. ஜப்பான் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தமிழகத்தில் தொடங்கியது. தற்போது ஒரு பாடல் தவிர படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில் […]

இலங்கை

ஒற்றுமையின் சக்தி வாய்ந்த சின்னம் மடுமாதா ஆலயம் – ஜுலி சங் நெகிழ்ச்சி!

  • August 26, 2023
  • 0 Comments

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ஆகியோரை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று (26.08) சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பில் ஜூலி சங் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் இட்டுள்ள பதிவில்,  இந்த கலந்துரையாடலில் சமய நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதில் மதத் தலைவர்களின் முக்கிய பங்கு குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க […]

இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம்!

  • August 26, 2023
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் இல்லத்திற்கு முன்பாக இன்று (26.08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இனவாதத்தை விதைப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தி பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிசார் தலையிட்டு எம்.பி.யின் வீட்டிற்கு சுமார் 20 […]

வட அமெரிக்கா

கனடாவில் இந்தியர் மீது 17 முறை கத்தி குத்து தாக்குதல்..!

  • August 26, 2023
  • 0 Comments

கனடாவில் தன் பேத்தியை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்ற இந்தியர் ஒருவர் 17 முறை கத்தியால் குத்தப்பட்ட விடயம், அங்கு வாழும் இந்தியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. கனடாவின் கிரேட்டர் ரொரன்றோ ஏரியாவில் வாழ்ந்துவந்த தனது மகன் குடும்பத்தைக் காண்பதற்காக இந்தியாவிலிருந்து வந்துள்ளார் திலீப் குமார் (66). அஹமதாபாதைச் சேர்ந்த திலீப் குமார், தன் மகனுடைய குழந்தையான தனது ஒன்றரை வயது பேத்தியுடன் வாக்கிங் செல்வது வழக்கம்.அப்படி கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலை தன் பேத்தியுடன் செல்லும்போது, […]

ஐரோப்பா

வாக்னர் படையினர் மற்றும் பிற ரஷ்ய தனியார் இராணுவத்தினருக்கு புடின் விடுத்துள்ள அழைப்பு!

ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாக்னர் மற்றும் பிற ரஷ்ய தனியார் இராணுவ ஒப்பந்தக்காரர்களின் அனைத்து ஊழியர்களுக்கும் ரஷ்ய அரசுக்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்க அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்பவர்கள், இராணுவத்திற்கு உதவுதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரிவுகளில் பணியாற்றும் எவருக்கும் இந்த ஆணை பொருந்தும். அவர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வெள்ளிக்கிழமை ஆணையில் கையெழுத்திட்டார். வாக்னர் தலைவர்கள் விமான விபத்தில் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இது வந்துள்ளது. ஜூன் மாதம் […]

மத்திய கிழக்கு

மடகாஸ்கர் மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!

  • August 26, 2023
  • 0 Comments

மடகாஸ்கரில் மைதானம் ஒன்றுக்குள் ரசிகர்கள் நுழைய முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு ஆபிரிக்க நாடான மடகாஸ்கரில் உள்ள அன்டனானரிவோவில் இந்திய பெருங்கடல் தீவு விளையாட்டுகளின் தொடக்க விழா நேற்று ஆரம்பமானது. மடகாஸ்கர் தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தின் நுழைவாயிலில் குவிந்திருந்தனர். திடீரென ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் நுழைய முயன்றதால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. மைதானத்தின் காவலாளிகளால் […]

பொழுதுபோக்கு

காதலுடன் ஊர் சுற்றும் தமன்னா.. ஏர்போர்ட்டில் வசமாக சிக்கிய ஜோடி

  • August 26, 2023
  • 0 Comments

தமன்னா இப்போது தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார். பாலிவுட் பக்கம் பறந்து அங்கு ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தமன்னா என்ட்ரி கொடுத்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற காவாலையா பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம் பட்டி தொட்டி எங்கும் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் 33 வயதாகும் தமன்னா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவர் பல காதல் சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் இப்போது ஏர்போட்டில் […]

இலங்கை

விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை பரிதாபமாக பலி!

விளையாடிக்கொண்டிருந்த  இரண்டு வயது பெண் குழந்தை நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் வவுனியா நெளுக்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு முற்றத்தில் குழந்தை நேற்று (25) மாலை  விளையாடிக்கொண்டிருந்த சமயம் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தையைக் காணாத நிலையில் பெற்றோர் தேடியபோது கிணற்றுக்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் விழுந்துள்ளமை கண்டறியப்பட்டது. இதேவேளை, குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தை […]