வெல்லம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!
வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு 15 ஐச் சேர்ந்த 47 வயதான ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.