பொழுதுபோக்கு

விஜய் தேவரகொண்டாவின் காதலி யார் தெரியுமா?

முன்னணி தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா தனது ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘அர்ஜுன் ரெட்டி’ படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மிகவும் பிரபலமானவர். சிவ நிர்வாணா இயக்கத்தில் சமந்தா ரூத் பிரபு நடித்துள்ள அவரது புதிய படம் ‘குஷி’ செப்டம்பர் 1 ஆம் திகதி வெளியாகிறது. இதற்கிடையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில், விஜய் ஒரு பெண்ணின் கையைப் பிடித்திருக்கும் ஒரு படத்தைப் பதிவிட்டுள்ளார் மற்றும் “நிறைய நடக்கிறது ஆனால் இது […]

செய்தி விளையாட்டு

ஆசிய தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

  • August 29, 2023
  • 0 Comments

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற நாளை முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. நாளை நடைபெற உள்ள முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இலங்கையின் சில முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை. ஹசரங்கா, சமீரா, குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை. […]

இலங்கை

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி -அதி. வண.பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெணாண்டோ ஆகியோருக்கிடையில் சந்திப்பு

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே அவர்களை மரியாதையின் நிமித்தம் சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவர் அதி வண பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெணாண்டோ இன்றைய தினம் (29) கொழும்பில் சந்தித்து உரையாடினார். இதன் போது பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன் போது இலங்கையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் சில முன்னேற்றங்களை காண்பதாகவும், நீங்களும் நானும் நாம் எல்லோரும் ஒரு கிறிஸ்தவ சமூகமாய் தொடர்ந்து இந்த நாட்டுக்காக […]

இலங்கை

யாழ்ப்பாணம் – வவுனியா பேருந்தில் பயணித்த நாகப்பாம்பு! அச்சத்தில் உறைந்த மக்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தில் எதிர்பாராதவிதமாக பெரிய நாகப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் மக்கள் பீதி அடைத்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தால் பேருந்தில் இருந்து அவசரமாக இறங்கியுள்ளனர். காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து புறப்பட்டு சுமார் ஒன்றரை மணிநேரம் ஆகியும் பயணிகள் யாரும் நாகப்பாம்பு இருப்பதை கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி நகரில் பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் வாகனத்தின் எல்லைக்குள் நாகப்பாம்பைக் கண்டுள்ளார். , நாகப்பாம்புடன் பேருந்தை தொடர்ந்து இயக்கிய […]

ஆஸ்திரேலியா

அவுஸ்ரேலியாவில் பெண்ணின் மூளைக்குள் உயிருடன் வாழ்ந்த புழு!

  • August 29, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது முதன்முறையாக ஒரு மனிதனின் மூளையில் உயிருள்ள புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாட்டில் பணிபுரியும் இலங்கை மருத்துவர் ஒருவரால் இந்த சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. 64 வயதுடைய பெண் ஒருவரே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கான்பெராவில் நடந்த அறுவை சிகிச்சையின் போது அவரது முன் மூளையில் சேதமடைந்த திசுக்களில் சிவப்பு ஒட்டுண்ணி கண்டுபிடிக்கப்பட்டது. 8 செ.மீ நீளமுள்ள ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்ற வட்டப்புழு அவளது மூளைக்குள் […]

இலங்கை

கதிர்காமத்தில் துப்பாக்கிச்சூடு!

  • August 29, 2023
  • 0 Comments

கதிர்காமத்தில் இன்று (29.08) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த ஐவர் குறித்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக கூறப்படுகிறது. உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

பொழுதுபோக்கு

திடீரென மேடையில் வைத்து நடிகைக்கு 3 முறை முத்தமிட்ட இயக்குனர்..!

  • August 29, 2023
  • 0 Comments

இயக்குனர் ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி இயக்கத்தில் ராஜ் தருண் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘திரகபாதர சாமி’. இந்த படத்தில் ராஜ் தருணுக்கு ஜோடியாக மன்னரா சோப்ரா நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு இந்த டீசரை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போது நடிகை மன்னரா சோப்ரா பக்கத்தில் இயக்குனர் ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி நின்று கொண்டிருந்தார். அப்போது அனைவரின் முன்பாக […]

இலங்கை

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும்! வானிலை ஆய்வு மையம்

தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் சமீபத்திய வானிலை அறிக்கையில், தீவின் தென்மேற்கு பகுதியில் மழை தொடரும் என்றும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். […]

ஐரோப்பா

பிரித்தானிய உள்துறைச் செயலர் சுவெல்லாவுக்கு பொலிஸார் எச்சரிக்கை கடிதம்..!

  • August 29, 2023
  • 0 Comments

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் நடைபெறும் ஒவ்வொரு திருட்டையும் பொலிஸார் விசாரணை செய்தாகவேண்டும் என பிரித்தானிய உள்துறைச் செயலர் அறிவித்திருந்தார். பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், கடைகளில் திருடுவது, சேதப்படுத்துவது, மொபைல் திருட்டு அல்லது கார் திருட்டு ஆகிய குற்றச்செயல்களை பொலிசார் முக்கியத்துவம் குறைந்தவையாக கருதுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியிருந்தார்.ஆகவே, குற்றச்செயல் எத்தகையதாயினும் அது குறித்து பொலிர் விசாரணை செய்தாகவேண்டும் என சுவெல்லா அறிவித்திருந்தார். சுவெல்லாவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது. […]

பொழுதுபோக்கு

ரஜினி கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்த சன் பிக்சர்ஸ்… கொளுத்திப் போட்ட பிரபலம்

  • August 29, 2023
  • 0 Comments

ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் இதுவரை தமிழ் சினிமாவில் கண்டிடாத வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த சூழலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தை தயாரித்த நிலையில் இந்த படத்தில் நடித்த பிரபலங்களுக்கு கிட்டத்தட்ட 130 கோடி சம்பளமாக கொடுத்திருக்கிறது. அதிலும் சிவராஜ் குமார், மோகன்லால் சில காட்சிகளில் மட்டுமே நடித்தாலும் கோடிகளில் சம்பளம் வாங்கி இருந்தனர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 110 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக ரஜினி 80 […]