ஆப்பிரிக்கா செய்தி

கானா தங்கச் சுரங்க நகரத்தில் போராட்டக்காரர்கள் ராணுவ வீரர்கள் இடையே மோதல்

  • May 31, 2023
  • 0 Comments

கானாவின் அஷாந்தி பகுதியில் உள்ள தங்கச் சுரங்க நகரமான ஒபுவாசியில், சுரங்கத் தொழிலாளர்கள் மீது அரசாங்கம் சட்டவிரோதமாகக் கருதும் இராணுவ அடக்குமுறைக்கு மத்தியில், ஆயுதம் ஏந்திய வீரர்கள் எதிர்ப்பாளர்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். உலகின் மிகப் பெரிய தங்கச் சுரங்க நிறுவனங்களில் ஒன்றான ஆங்கிலோ கோல்டுக்கு சொந்தமான தண்டுகளிலிருந்து வெளியேறியதற்காக ஏழு சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களை அதிகாரிகள் கைது செய்தனர். நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கியதாக செவ்வாயன்று செய்திகள் வந்தன. இன்னும் நிலத்தடியில் இருப்பவர்கள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம்

  • May 31, 2023
  • 0 Comments

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய திருத்தத்தின் பிரகாரம் 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் புதிய விலை 318 ரூபாவாகும். இதேவேளை, இலங்கை மண்ணெண்ணெய்யின் விலையும் 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 245 ரூபாவாகும். இதேவேளை, ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் […]

ஆசியா செய்தி

லெபனான் குண்டுவெடிப்பில் 5 பாலஸ்தீன போராளிகள் மரணம்

  • May 31, 2023
  • 0 Comments

சிரிய எல்லைக்கு அருகே கிழக்கு லெபனானில் நடந்த குண்டுவெடிப்பில் அதன் உறுப்பினர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியுள்ளது. அன்வர் ராஜா, PFLP-GC அதிகாரி, இஸ்ரேலிய வேலைநிறுத்தம் லெபனான் நகரமான குசாயாவில் நிலைகளைத் தாக்கியது என்றார். 10 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும், இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத இஸ்ரேலிய வட்டாரங்கள் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளன. இஸ்ரேல் அல்லது லெபனான் […]

பொழுதுபோக்கு

83 வயதில் 29 வயது காதலி! விரைவில் தந்தையாக உள்ளதை அறிவித்த பிரபலம்

  • May 31, 2023
  • 0 Comments

தி காட்பாதர்’ மற்றும் ‘ஸ்கார்ஃபேஸ்’ ஆகிய படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் மிகவும் பிரபலமான ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அல் பசினோ, விரைவில் தன்னுடைய 29 வயது காதலியின் குழந்தைக்கு தந்தையாக உள்ளார். இவர் தன்னுடைய காதலியும், பிரபல ஹாலிவுட் நடிகையுமான நூர் அல்பல்லா மூலம், விரைவில் தன்னுடைய நான்காவது குழந்தைக்கு தந்தையாக உள்ளார் என்கிற தகவல் வெளியாகி, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நூர் அல்பல்லா ‘பில்லி நைட்’, ‘லிட்டில் டெத்’ மற்றும் ‘ப்ரோசா நோஸ்ட்ரா’ போன்ற […]

ஐரோப்பா

குழந்தை பராமரிப்பு கொடுப்பனவுகள் குறித்து பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • May 31, 2023
  • 0 Comments

யூனிவர்சல் கிரெடிட்டில் உள்ள குடும்பங்கள் ஜூன் மாத இறுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பவுண்டுகளைப் அதிகமாக பெறலாம் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. யுனிவர்சல் கிரெடிட்டில் உள்ளவர்கள் ஜூன் 28 முதல் அதிகப்பட்ச குழந்தைப் பராமரிப்புக் கொடுப்பனவுகள் ஏறக்குறைய 50% அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுவதுடன், அரசாங்கம் அதிகமானவர்களை மீண்டும் வேலைக்குச் சேர்க்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் மாத இறுதியில் இருந்து குழந்தை பராமரிப்பு கொடுப்பனவுகளில் நூற்றுக்கணக்கான பவுண்டுகள் அதிகமாகக் கோர முடியும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இதன்படி  யுனிவர்சல் […]

ஆசியா

பாகிஸ்தானில் உணவு தட்டுப்பாடு குறித்து ஐ.நா எச்சரிக்கை!

  • May 31, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வருவதால் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு பொருட்கள்,  பெட்ரோல்,  டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மேலும் கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பும் நிலவி வருவது அந்நாட்டை மேலும் சிக்கலில் தள்ளி உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் […]

இலங்கை

நடாஷா விவகாரம்; புருனோ திவாகரா கைது

  • May 31, 2023
  • 0 Comments

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நதாஷா எதிரிசிங்கவிற்கு உதவிய குற்றச்சாட்டில் யூடியுபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் புரூனே திவாகர எனும் நபரையே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (31) பிற்பகல் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் யூடியூப் சேனலை நடத்தி மத சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை பரப்புவதற்கு ஆதரவளித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சுமார் 8 மணிநேர விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை

இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை – இலங்கை இராணுவம்!

  • May 31, 2023
  • 0 Comments

வடக்கில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என வட மாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வரும் நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் வினவப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இந்திய மீனவர்கள் அதிகளவில் வருவதனால் தம்மால் அவர்களை கட்டுப்படுத்த தேவையான வளங்கள் தம்மிடம் இல்லை என்றும் அதனை இராஜதந்திர முறையில் கட்டுப்படுத்த […]

ஐரோப்பா

பிரித்தானிய அரசு அலுவலர்கள்தான் எங்கள் இலக்கு – டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரிக்கை

  • May 31, 2023
  • 0 Comments

ரஷ்ய முன்னாள் அதிபரும், பாதுகாப்புக் கவுன்சிலின் துணைத் தலைவருமான Dmitry Medvedev, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு நெருக்கமானவர் ஆவார். பிரித்தானியா உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவருவதால் ரஷ்ய தரப்பு கொந்தளித்துப்போயுள்ள நிலையில், உக்ரைனுக்கு பிரித்தானியா அளித்துவரும் ஆதரவை, ரஷ்யாவுக்கெதிரான அறிவிக்கப்படாத போராக கருதுவதாக தெரிவித்துள்ளார் Dmitry Medvedev. Dmitry Medvedev ட்விட்டரில் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், இன்று பிரித்தானியா உக்ரைனின் கூட்டாளி போல செயல்படுகிறது, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிவருகிறது. அது ரஷ்யாவுக்கெதிரான அறிவிக்கப்படாத போருக்கு சமம் என […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

  • May 31, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை இரவு 8.00 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது  தற்போதைய பொருளாதார மீட்சி முயற்சிகளுக்கான ஆதரவைப் பெற்று கொள்ளும் விதமாக வெளிநாட்டு மற்றும் பொருளாதார கொள்கைகளை விளக்கியிருந்தார். ஜப்பான் பிரதமருடனான கலந்துரையாடலின் போதுஇ இடைநிறுத்தப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்துவது குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.

You cannot copy content of this page

Skip to content