இலங்கை

இன்றைய நாணய மாற்று விகிதம்!

  • September 4, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி இன்று (04.09) அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.28 ரூபாயாகவும் கொள்வனவு விலை 313.93 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 412.08 ரூபாயாகவும், கொள்வனவு விலை 394.78 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. மேலும் யூரோ ஒன்றின் விற்பனை விலை 353.25 ரூபாய் எனவும் கொள்வனவு விலை 337.04 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இளைஞர் கைது!

தமது பேஸ்புக் கணக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பதிவொன்றை பதிவிட்டிருந்த இளைஞர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் எப்பாவல, மெதியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் “இந்த நாட்டை சீரழித்த நபர் எமது பகுதிக்கு வருகின்றார். […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

அச்சு அசலாக தனுஷ் போல இருக்கும் மகன்… அடுத்த ஹீரோ தயார்… வைரலாகும் படங்கள்

  • September 4, 2023
  • 0 Comments

கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தனது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து இவர்கள் தங்களது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுக்காக ஒன்றாக சேர வேண்டும் என பலரும் விரும்பினர். யாத்ரா, லிங்கா இருவரும் ஐஸ்வர்யாவுடன் இருந்தாலும் தனுஷுடன் நிறைய சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர். இருவரும் தங்கள் குழந்தைகள் மீது அதீத அக்கறை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தனது […]

இலங்கை

யாழில் மருத்துவ தாதியின் தவறால் இடது கையை இழந்த சிறுமி!

  • September 4, 2023
  • 0 Comments

மருத்துவ தாதியின் செயற்பாடு காரணமாக 08 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த யாழ், இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் 03 கல்வி கற்கும் 08 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக கடந்த 25ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சையின் போது மறுநாள் 26ம் திகதி , சிறுமியின் […]

இலங்கை

தலங்கமவில் உள்ள விடுதி ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

தலங்கம நெரலு உயன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் வசமிருந்த தேசிய அடையாள அட்டையில் இருந்து அவர் 1973 ஆம் ஆண்டு பிறந்தவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த மரணம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும், தலங்கம பொலிஸார் விசாரணைகளை […]

இலங்கை

காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

  • September 4, 2023
  • 0 Comments

காலி – கொழும்பு பிரதான வீதியின் களுத்துறை வாடியமன்கட சந்தியில் முச்சக்கரவண்டியும் பேருந்தொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்  களுத்துறை வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய சுகத் தயானந்த சில்வா என்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி சாரதியான இவர், வாடகை வண்டியில் பயணித்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கி அதிவேகமாக பயணித்ததால் வேக கட்டுப்பாட்டை இழந்த இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. […]

உலகம்

மெக்சிகோவில் மாணவர்களின் கொலைக்கும், அரசுக்கும் தொடர்பா?

  • September 4, 2023
  • 0 Comments

மெக்சிகோவில் 43 மாணவர்களின் கொலையில் அரசுக்கும் தொடர்பிருப்பதாக சமீபத்திய ஆதாரங்கள் காட்டியுள்ளன. மெக்சிகன் நகரமான இகுவாலாவில் ஒரு பிரபலமற்ற போதைப்பொருள் கும்பல் செய்த குற்றத்தில் அரசு எப்படி உடந்தையாக இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன.  இது குறித்து நிவ்யோர்க் டைம்ஸால் சுமார் 23 ஆயிரம் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் இராணுவம் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைக் கண்டறிய இராணுவத்திற்கு எதிராகச் சென்ற ஒரு வழக்கறிஞர் Omar Gomez Trejo, ஆதாரம் “மிகவும் வலுவானது, மற்றும் சந்தேகத்திற்கு […]

இலங்கை

இலங்கை குறித்த சர்ச்சை காணொலியை வெளியிட தயாராகும் பிரித்தானிய ஊடகம்!

  • September 4, 2023
  • 0 Comments

இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளியை நாளை (09.04) ஒளிபரப்ப பிரித்தானியாவின் சனல் நான்கு ஊடகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2018ஆம் ஆண்டு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் ஈ ஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பேட்டி ஒன்றே இவ்வாறு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவின் “சேனல் ஃபோர்”  இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததாக பல சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி இலங்கையில் பிரபலமடைந்தது. இந்த ஊடகம் வெளியிட்ட சில காணொலிகளை அப்போது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • September 4, 2023
  • 0 Comments

பிரபலமான வேர்ட்பிரஸ் மென்பொருள் இனி புதுப்பிக்கப்படாது என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது. மைக்ரோசாப்ட் தனது எதிர்கால விண்டோஸ் புரோகிராம்களில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விண்டோஸ் 95 புரோகிராம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த மென்பொருள், சுமார் 30 ஆண்டுகளாக எளிய நோட்புக் ஆகப் பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

தெற்கு ஸ்பெய்னில் ரயில் சேவைகள் பாதிப்பு!

  • September 4, 2023
  • 0 Comments

தெற்கு ஸ்பெயினில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பெய்துவரும் கனமழை காரணமாக  மாட்ரிட்டின் தென்மேற்கில் உள்ள அல்டியா டெல் ஃப்ரெஸ்னோவின் கிராமப்புறப் பகுதியில் இருவர் காணாமல்போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது, இரவு முழுவதும் அவசர சேவைகள் தயார் நிலையில் இருந்ததாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாட்ரிட், காஸ்டில், கேடலோனியா மற்றும் வலென்சியா பகுதிகளில் திடீரென பெய்த மழையால் தெருக்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், ஆழங்கட்டி மழையும் பெய்துள்ளது. இந்நிலையில் ஸ்பெய்னின் வானிலை ஆய்வு மையம் செம்மஞ்சள் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.