உலகம்

காபோனில் ஆட்சி கவிழ்ப்பு! இடைக்கால அதிபராக ஜெனரல் பிரைஸ் நிகுமா பதவியேற்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காபோன் நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றார். இதன் மூலம் 3வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த தேர்தலில் அலி போங்கோ வெற்றி பெற்றது செல்லாது என்று போர்க்கொடி தூக்கிய ராணுவம் திடீரென கிளர்ச்சியில் ஈடுபட்டு கடந்த மாதம் 30ம் தேதி ஆட்சியை கவிழ்த்ததுடன், அதிகாரத்தை கைப்பற்றியது. அதிபர் அலி போங்கோ வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். இதன்மூலம் 55 ஆண்டுகால குடும்ப ஆட்சி […]

இலங்கை

நாட்டை விட்டு வெளியேறவுள்ள 5000 வைத்தியர்கள்!

  • September 4, 2023
  • 0 Comments

சுமார் 5,000 வைத்தியர்கள் தகுதிபெற்று வெளிநாடு செல்ல தயாராக உள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 1,500 மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில்  அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை இன்று (09.04) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வைத்தியர்கள் தொடர்ந்தும் வெளிநாடுகளுக்குச் சென்றால் இந்நாட்டின் பிரதான வைத்தியசாலைகளில் கூட பிரச்சினைகள் எழலாம் என வைத்தியர் அளுத்கே தெரிவித்தார்.

வட அமெரிக்கா

கனடா- ஒட்டாவாவில் திருமண நிகழ்வில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி

  • September 4, 2023
  • 0 Comments

கனடாவின் ஒட்டாவா நகரில் திருமண நிகழ்வு ஒன்றின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் இரண்டு டொரன்டோ பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் ஆறு பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒட்டாவாவின் கன்வென்ஷன் சென்டர் என்னும் பகுதிக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 26 வயதான முகமட் அலி மற்றும் 29 வயதான சாத்தூர் ஆதி தாஹிர் […]

இலங்கை

வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!

2022 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. www.doenets.lk, www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை சுட்டிலக்கத்திணை மாத்திரம் பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, இம்முறை தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் பயன்படுத்தி பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, தேர்வில் 278,196 பள்ளி விண்ணப்பதாரர்களும் 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் கலந்து கொண்டனர். மொத்தம் […]

இலங்கை

எதிர்கட்சி தலைவர் சஜித்தின் உயிருக்கு ஆபத்து!

  • September 4, 2023
  • 0 Comments

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடக்கூடாது என்பதற்காக, சிலக் குழுக்கள் தன்னுடையஉயிருக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கலாம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கிரிந்தி ஓயாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பிடிவாதம் பிடிப்பவர்கள் தம்மை கொலை செய்யும் முயற்சியின் பின்னணியில் இருக்கலாம். “தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் போட்டி வேட்பாளராக நான் […]

பொழுதுபோக்கு

தனுஷின் புதிய ஜோடி யார் தெரியுமா? சுடச் சுட வெளியான தகவல்

  • September 4, 2023
  • 0 Comments

தனுஷ் தனது 50வது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் லேட்டஸ்டாக தனுஷிற்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ படம் வெளியாகவுள்ளது. அடுத்து அவரது நடிப்பில் இந்தி படம் ஒன்றும் வெளியாகவுள்ளது. தற்போது தனுஷ் தனது 50வது படத்தில் பிசியாக உள்ளார். வடசென்னையை வைத்து கேங்ஸ்டர் கதைகளத்தில் படம் தயாராகிறது. சன் பிக்சர்ஸ் […]

ஆசியா

ஈரான்- டாம்கான் நகரில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து; 6 தொழிலாளர்கள் பலி!

  • September 4, 2023
  • 0 Comments

ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள டாம்கான் நகரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. 400 மீட்டர் ஆழத்தில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இந்த விபத்தில், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அப்பகுதியில் 6 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. இன்று காலையில் 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து […]

இலங்கை

யாழில் திரையிடப்பட்ட ஈழத்தின் முதல் விண்வெளித்திரைப்படமான ‘புஷ்பக 27’

  • September 4, 2023
  • 0 Comments

ஈழத்திலிருந்து , தயாரிக்கப்பட்ட தமிழரின் தொன்மையை தேடி செல்லும் முதல் விண்வெளித்திரைப்படமான “புஷ்பக 27” யாழ்ப்பாணத்தில் திரையங்கு நிறைந்த காட்சிகளாக மூன்று காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில், நேற்று முன்தினம் சனிக்கிழமை மற்றும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மூன்று காட்சிகள் சிறப்பு காட்சியாக இத்திரைப்படம் திரையிடப்பட்டது. எதிர்வரும் காலங்களில் இலங்கையின் ஏனைய இடங்களில் உள்ள திரையரங்குகளிலும் , வெளிநாடுகளிலும் திரையிட நடவடிக்கை எடுத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சத்தியா மென்டிசின் திரைக்கதையில் , […]

இலங்கை

12 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது!

  • September 4, 2023
  • 0 Comments

காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலையின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிபர் தனது வீட்டில் மேலதிக வகுப்புகளை நடத்தியதாகவும், அந்த வகுப்பிற்கு சமூகமளித்த மாணவி ஒருவரே மேற்படி துஷ்பிரயோக சம்பவத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வகுப்பு முடிந்து ஏனைய மாணவர்கள் வெளியேறிச் சென்ற நிலையில், குறித்த மாணவி தனது சகோதரிக்காக காந்திருந்த சமையத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதியம் 12.30 மணியளவில் வகுப்பு […]

இந்தியா

பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

புவனேஸ்வரில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ விமானம் திங்கள்கிழமை காலை பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, அதன் இயந்திரம் ஒன்றில் பறவை மோதியதைத் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. BPIA இயக்குனர் பிரசன்னா பிரதான் கூறுகையில், புவனேஸ்வரில் இருந்து புது டெல்லிக்கு இண்டிகோ விமானம் 6E-2065 காலை 7:50 மணியளவில் புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இருப்பினும், 10-15 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பற்றி விமானி […]