அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு..! வீடியோ வெளியிட்ட சகோதரன்
தமிழக மாவட்டம், திருவண்ணாமலையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ராந்தம் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் அஞ்சலை (15) மங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று இந்த பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொள்வதாக […]