ஐரோப்பா

வேலைநிறுத்தத்தை அறிவித்த ஹீத்ரோ விமான நிலைய ஊழியர்கள் : சிக்கலில் பயணிகள்‘!

  • June 7, 2023
  • 0 Comments

ஹீத்ரோ விமான நிலையத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட ஒவ்வொரு வார இறுதியிலும் ஜூன் நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்ட் மாத இறுதி வரை வெளிநடப்புக்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுனைட்டின் உறுப்பினர்கள் ஊதியம் தொடர்பான நீண்டகால சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இது பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்ட போராட்ட உத்தியை கையில் எடுத்துள்ளனர். ஜூன் 24 முதல், 2,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஊழியர்கள் இணைந்து  31 நாட்கள் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். தொழிலாளர்கள் அறிவித்துள்ளதன்படி, […]

இலங்கை

நெடுந்தீவில் விபத்துக்குள்ளான படகு! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் கடலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவு, குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 38 பேருடன் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற குறித்த இழுவை படகு நெடுந்தீவின் இறங்குதுறைக்கு அருகில் கடலில் ஏற்பட்ட அலையின் காரணமாக படகின் அடிப்பகுதி தரைப்பகுதியில் மோதியுள்ளது. இதனால் படகின் அடிப்பகுதியில் துளை உண்டாக, உள்ளே தண்ணீர் கசிவு ஏற்பட்டு அது ஆபத்தில் உள்ளதாக வடக்கு கடற்படை […]

ஆசியா வட அமெரிக்கா

ரூஸ்வெல்ட் ஹோட்டலை 220 மில்லியன் டொலருக்கு குத்தகைக்கு விட்டுள்ள பாக்கிஸ்தான்

  • June 7, 2023
  • 0 Comments

அமெரி்க்காவில் உள்ள தங்கள் நாட்டுக்கு சொந்தமான ரூஸ்வெல்ட் ஹோட்டலை நியூயார்க் நகர நிர்வாகத்திற்கு பாக்கிஸ்தான் அரசு 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது . நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 100 ஆண்டுகள் பழமையான, 1250 ஆறைகளைக் கொண்ட ஹோட்டல், 220 மில்லியன் டொலருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக பாக்கிஸ்தான் ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கவாஜா சாத் ரபீக் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பாக்கிஸ்தான் அரசுக்கு ஆயிரத்து 817 கோடி வருவாய் கிடைக்கும் என்றும், 3 ஆண்டுகள் […]

இலங்கை

சென்னை – யாழ்ப்பாணம் இடையே இன்று நூறாவது விமான பயணம்!

இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நூறாவது தடவையாக சேவையில் ஈடுபட்டது. இதன் மூலம் 10,500க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையேயான அலையன்ஸ் எயர் மூலம் இயக்கப்படும் 100 வது விமானச் சேவை இன்று (07) முன்னெடுக்கப்பட்டது. கொரோனா தொற்றுநோய் இடர்காலத்தில் இடைநிறுத்தத்திற்குப் பிறகு விமான சேவை 12 டிசம்பர் 2022 அன்று மீண்டும் தொடங்கியது. இந்த வழித்தடத்திற்கு […]

ஐரோப்பா

நேட்டோ வரலாற்றில் மிகப் பெரிய விமான பயிற்சிக்கு தயாராகும் ஜெர்மனி!

  • June 7, 2023
  • 0 Comments

நேட்டோவின் வரலாற்றில் மிகப்பெரிய விமான பயிற்சியை நடத்த ஜெர்மனி திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் தொடங்கும் ஏர் டிஃபென்டர் 23 பயிற்சியில் 10,000 பங்கேற்பாளர்கள் மற்றும் 25 நாடுகளைச் சேர்ந்த 250 விமானங்கள்  பங்கேற்கவுள்ளன. நேட்டோ உறுப்பு நாடு மீதான உருவகப்படுத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பயிற்சி முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 12-23 வரை நடைபெறும் பயிற்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க மட்டும் சுமார் 2000 விமான காவலர்களையும், 100 விமானங்களையும் அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது. “இது ஒரு பயிற்சியாகும், […]

இலங்கை

கொழும்பில் பதற்றம்: பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (07.06.2023) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அருகில் வைத்து, இந்த பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள பௌத்த – பாலி பல்கலைக்கழகம் உடனடியாக திறக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும், 1995/37 சட்டத்தை மாற்றி பௌத்த – பாலி பல்கலைக்கழகத்தை பட்டத்தினை விற்கும் வியாபார நிலையமாக மாற்றும் அரசாங்கத்தின் சதியை முறியடிப்போம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் […]

உலகம்

நிலையான பணவீக்கம், அதிக வட்டி விகிதங்கள்  போன்றன உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என முன்னறிவிப்பு!

  • June 7, 2023
  • 0 Comments

நிலையான பணவீக்கம், அதிக வட்டி விகிதங்கள்  போன்றன உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று OECD கணித்துள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான பாரிஸை தளமாகக் கொண்ட அமைப்பின் சமீபத்திய பொருளாதாரக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 38 உறுப்பு நாடுகளைக் கொண்ட குறித்தக் குழு, இந்த ஆண்டு அதன் வளர்ச்சி முன்னறிவிப்பை நவம்பரில் 2.2% இல் இருந்து 2.7% ஆக உயர்த்தியது. அதேநேரம்  அடுத்த ஆண்டு 2.9% ஆக ஒரு சிறிய முடுக்கத்தை மட்டுமே முன்னறிவித்தது. […]

செய்தி

கனடா செல்ல காத்திருப்போருக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு

கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு குடியேறிகளுக்கு சந்தர்பம் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது. ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சுகாதார துறை விஞ்ஞான, தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியதுறைகள் தச்சு வேலை, குழாய் பொருத்துதல் மற்றும் […]

உலகம்

முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெளியிட்ட ஈரான்!

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஈரான் புதிய ஏவுகணை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏவுகணையின் அறிமுகம் ஆனது அமெரிக்கா உள்ளிட்ட பலதரப்பு வல்லரசு நாடுகளில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஒலியின் வேகத்தைப் போல் 5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் செல்லக் கூடிய (ஹொப்பா்சோனிக்) தங்களது ஏவுகணையை ஈரான் நேற்று அறிமுகப்படுத்தியது. ‘எதிரிகளின் நிலங்களை வெல்பவா்’ என்ற பொருள்படும் வகையில் ‘ஃபட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, ஒலியைப் போல் 15 மடங்கு வேகத்தில் பாய்ந்து செல்லும் […]

ஆசியா

கொரோனாவால் சிரிக்க மறந்த ஜப்பானியர்கள் : ஒரு மணி நேரத்திற்கு 4550 ரூபாயை கொடுத்து சிரிக்க பயிற்சி எடுக்கும் மக்கள்!

  • June 7, 2023
  • 0 Comments

கொரோனா பெரும் தொற்று உலகளவில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்தது. பெருமளவிலான மக்கள் மாஸ்க் அணிந்து கொண்டே வாழ்வதற்கும் கற்றுக் கொண்டார்கள். அத்துடன் வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. இந்நிலையில், ஜப்பானியர்கள் கொரோனா தொற்றுக்கு அஞ்சி மாஸ்க் அணிந்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 8 வீதமானோரே மாஸ்க் அணிவதை நிறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக மாஸ்க் அணிந்த ஜப்பானிய மக்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்களாம். இதனையடுத்து […]

You cannot copy content of this page

Skip to content