இலங்கை

வெகுவிரைவில் வரிசை யுகம் தோற்றம் பெறும் : பாட்டலி சம்பிக்க ரணவக்க

  • June 7, 2023
  • 0 Comments

பொருளாதார பாதிப்புக்கு தற்காலிக இடைவேளை மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் வரிசை யுகம் மீண்டும் தோற்றம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று  (7) இடம்பெற்ற சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர்,  நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.நாட்டின் தற்போதைய இயல்பு நிலை தற்காலிகமானதே. வெளிநாட்டு கடன்களை செலுத்த […]

உலகம்

பிரித்தானியாவில் மீண்டும் தீவிரமடையும் வெப்ப அலையின் தாக்கம்!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவின் சில பகுதிகளில்  தீவிர வெப்ப அலையின் தாக்கம் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் வெப்பநிலை 30C (86F) ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், பிரித்தானியாவில் சில பகுதிகளில் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லண்டன், மிட்லாண்ட்ஸ், கிழக்கு மற்றும் தெற்கு இங்கிலாந்தில் ஜூன் 9 வெள்ளிக்கிழமை 09:00 BST முதல் ஜூன் 12 திங்கள் அன்று 09:00 BST வரை இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு […]

பொழுதுபோக்கு

ரிலேசன்ஷிப்பில் இருக்கும்போதே கர்ப்பம் : ரசிகரின் கேள்விக்கு காட்டமாக பதிலளித்த நடிகரின் காதலி

  • June 7, 2023
  • 0 Comments

ஹிந்தியில் டான்,  ஓம் சாந்தி ஓம்,  ஹவுஸ்புல்,  ரா ஒன் போன்ற படங்களில் நடித்துள்ளவர் அர்ஜுன் ராம்பால். இவர் தற்போது  கேப்ரியலா என்பவருடன் ரிலேசன்ஷிப்பில் இருந்துவருகிறார். திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வரும் இவர்களுக்கு கடந்த 2019 ஆண்டு ஆரிக் என்ற மகன் பிறந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் கர்பம் தரித்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கேப்ரிலாவிற்கு அவரது காதலர் ஹார்ட்டின் மூலம் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த நிலையில் மீண்டும் கேப்ரியலா கர்ப்பமாக இருக்கும் போட்டோவை பதிவிட […]

உலகம்

சொகுசுக்கப்பலில் பயணித்த 300 பேருக்கு ஏற்பட்ட மர்ம நோய்

அமெரிக்க சொகுசு கப்பலில் பயணம் செய்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெப்ரவரி 26 முதல் மார்ச் 5 வரை டெக்சாஸில் இருந்து மெக்சிகோவிற்கு ரூபி பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பலில் 2,991 பயணிகளும் 1,159 பணியாளர்களும் பயணித்துள்ளனர். அதில் பயணித்த 284 பயணிகளும், 34 பணியாளர்களும் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மைய அதிகாரிகள் கப்பலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எனினும், […]

இந்தியா

அரபிக் கடல் பகுதியில் வலுப்பெற்ற புயல் : மீனவர்களுக்கு எச்சரிக்கை!

  • June 7, 2023
  • 0 Comments

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்,   ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ‘பைபர்ஜாய்’ புயலாக மேலும் வலுவடைந்தது. இதன்காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை […]

இலங்கை

எங்கு நடந்தாலும் குற்றம் குற்றமே : கஜேந்திரகுமார் விவகாரத்தில் காட்டமாக கருத்து தெரிவித்த மஹிந்த அமரவீர!

  • June 7, 2023
  • 0 Comments

தெற்கில் இடம்பெற்றாலும் வடக்கில் இடம்பெற்றாலும் குற்றம் குற்றமாகத் தான் கருதப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உரைக்குப் பதிலளித்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்  நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சம்பவத்தினால் நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்று கூறியிருந்தார். ஆனால்  நாடாளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரை அச்சுறுத்தியது மட்டும் சரியா? கடமையை செய்யும் ஒரு பொலிஸாருக்கு இடையூறு விளைவிப்பது சரியா? இதே […]

உலகம்

சீனாவின் இரகசிய பொலிஸ் நிலையங்கள் – பிரித்தானிய அரசின் அதிரடி உத்தரவு!

பிரித்தானிய மண்ணில் சீனா தனது இரகசிய பொலிஸ் நிலையங்களை மூடுமாறு பிரித்தானிய அரசாங்கம் கடுமையாக வலியுறுத்தியுள்ளது. இதனை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் டாம் டுகென்ட் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் சீனா பொலிஸ் நிலையங்களை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சீன தூதரகத்தின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் சீனா தனது காவல் நிலையத்தை எந்த வடிவத்திலும் இயக்கக் கூடாது என்று கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள அனைத்து நிலையங்களும் மூடப்பட்டுவிட்டதாகவும், பிரித்தானிய சட்டத்தின் கீழ் செயல்படுவோம் என்றும் சீன […]

ஐரோப்பா

இத்தாலியின் கலாப்ரியா பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் இருந்து 1400இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்பு!

  • June 7, 2023
  • 0 Comments

இத்தாலிக்கு அப்பால் உள்ள மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து 1400இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இத்தாலிய தீபகற்பத்தின்  கலாப்ரியா பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் பாய்மரக்கப்பலில் பயணித்த புலம்பெயர்ந்தோரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். குறித்த பாய்மரக் கப்பலில் இரண்டு குழந்தைகள் உள்பட 47 பேர் இருந்ததாகவும் கடலோர காவல் படையினர் இன்று (07) தெரிவித்துள்ளனர். அத்துடன் மீன்பிடி படகில் இருந்து சுமார் 590 புலம்பெயர்கள் இருந்ததாகவும், மற்றுமோர் மீன்பிடி படகில் 650 பேர் […]

பொழுதுபோக்கு

லியோ பட விஷயத்தில் வெறுத்துப் போன லோகேஷ்!! அடம்பிடிக்கும் விஜய்

  • June 7, 2023
  • 0 Comments

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்ட தருவாயில் இருக்கிறது. இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை அதிக எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகிறது. எப்பொழுது திரையரங்குகளில் வெளிவரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படம் ரிலீசுக்கு முன்பே நல்ல பிசினஸ் ஆகியுள்ளது. போதாக்குறைக்கு இன்னும் இப்படத்தின் மூலம் பெத்த லாபத்தை பார்க்கலாம் என்று படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து விஜய் இடம் பல கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். […]

ஆசியா ஐரோப்பா

சீனாவின் ரகசிய காவல் நிலையங்கள் தொடர்பில் பிரிட்டன் வெளியிட்டுள்ள கண்டனம்

  • June 7, 2023
  • 0 Comments

பிரிட்டனில் உள்ள சீன ரகசிய காவல் நிலையங்களை மூடுமாறு சீனாவுக்கு பிரிட்டன் அரசு கடுமையாக வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் டாம் துகேன்தட் எழுத்துப்பூர்வமாக விளக்கம்அளித்துள்ளார். சீனத் தூதரகம் மூலமாக இங்கிலாந்தில் சீனா காவல்நிலையங்களை நடத்துவதை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த வடிவிலும் சீனா தனது காவல் நிலையத்தை இயக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த அத்தனை நிலையங்களும்மூடப்பட்டு விட்டதாகவும் இங்கிலாந்து சட்டத்திற்குட்பட்டு செயல்படுவோம் என்றும் சீனத்தூதரகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

You cannot copy content of this page

Skip to content