மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. ! துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி! 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் , 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரிகளும் காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இன்று ஏற்பட்ட புதிய வன்முறையில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தெங்னௌபால் மாவட்டத்தின் பல்லேல் நகரில் ஆயுதம் ஏந்திய உள்ளூர் மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை காலை முதல் தொடர்ந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. […]