பொழுதுபோக்கு

“அவன்மீது இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு இதயம் உடைகிறேன்” வைரமுத்து

  • September 8, 2023
  • 0 Comments

நடிகர் மாரிமுத்துவின் மரணம் திரைத்துறையில் ஈடுசெய்யமுடியாத இழப்பாக உள்ளது. பலரும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் மாரிமுத்து, கவிப்பேரரசு வைரமுத்துவின் உதவியாளராக திரைத்துறையில் நுழைந்தார். நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள இரங்கல்: “தம்பி மாரிமுத்துவின் மரணச் செய்தி கேட்டு என் உடம்பு ஒருகணம் ஆடி அடங்கியது சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது என் கவிதைகளின் உயிருள்ள ஒலிப்பேழை அவன் என் உதவியாளராய் இருந்து நான் சொல்லச் […]

இலங்கை

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகள் கையளிப்பு!

இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரை நிகழ்வு இன்று (08) இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஆலோசகர் பொ.சச்சிதானந்தம் அவர்களின் தலைமையில் திருகோணமலை செஞ்சிலுவைச் சங்கக் கிளை மண்டபத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இளைஞர் குழுவும் மாவட்ட அரச சார்பற்ற அமைப்புகளும் இணைந்து மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் பாவனை மற்றும் விற்பனையை கண்டறியும் நோக்கில் பின்வரும் […]

அறிந்திருக்க வேண்டியவை

திரவ ஹைட்ரஜனில் இயங்கும் முதல் மின்சார விமானம் அறிமுகம்..!

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் திரவ ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் மின்சார விமானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜாவி விமான நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு எச்ஒய்4 விமான நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக ஹைட்ரஜனில் இயங்கும் விமான தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில், ஸ்லோவேனியாவில் ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் மின்சார விமானத்தை எச்ஒய்4 விமான நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஹைட்ரஜன் வாய் மூலமாக 750 […]

ஐரோப்பா

ரஷ்ய ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் போலியான தேர்தல்! உக்ரைன் கடும் கண்டனம்

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் உள்ளாட்சி தேர்தல்கள் என அதிகாரிகள் விவரிக்கும் தேர்தலில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உக்ரைனின் வெளியுறவு மந்திரி இந்த வாக்கெடுப்பை “போலி” என்று குறிப்பிட்டுள்ளார். வாக்குகளுக்கு எந்த சட்டபூர்வமான நிலையும் இருக்காது என்றும் கூறியுள்ளர். வேட்பாளர்கள் அனைவரும் ரஷ்ய அல்லது ரஷ்ய சார்பு, மேலும் மாஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவர்னர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்பகட்ட வாக்குப்பதிவில் பங்கேற்கும் பலர் ஆயுதமேந்திய ரஷ்ய வீரர்கள் முன்னிலையில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் பங்கேற்க […]

பொழுதுபோக்கு

மற்றுமொரு ஹீரோவுக்கு வில்லனாக மாறும் விஜய் சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியான ‘ஜவான்’ படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். அவர் இரக்கமற்ற ஆயுத வியாபாரி காளி கெய்க்வாட் என்ற பாத்திரத்தில் இளம் மற்றும் வயதான கெட்அப்களில் நடித்தார், இது விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘RC 16’ படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க VJS மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை அணுகியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. தற்போது […]

ஐரோப்பா

ஹாங்காங் மற்றும் தெற்கு சீனா இடையே வரலாறு காணாத மழையால் வெள்ளம்!

ஹாங்காங் மற்றும் தெற்கு சீன நகரங்களில் பரவலான வெள்ளத்தால் மக்கள் போராடி வருகின்றனர். வெள்ளிக்கிழமை, ஹாங்காங்கில் பள்ளிகள் மற்றும் பணியிடங்களை அதிகாரிகள் மூடியதால் தெருக்களும் சுரங்கப்பாதை நிலையங்களும் தண்ணீரில் மூழ்கின. வியாழன் அன்று தொடங்கிய மழை, சுமார் 140 ஆண்டுகளில் நகரத்தைத் தாக்கிய மிகப்பெரிய மழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், பல மீட்புப் பணிகள் நடைபெற்றதாகவும் அவசர சேவைகள் தெரிவித்தன.  

பொழுதுபோக்கு

சந்திரமுகி 2 ரிலீஸ் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு

  • September 8, 2023
  • 0 Comments

கடந்த 2005-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். 18 வருடங்கள் கழித்து உருவாகியுள்ள சந்திரமுகி 2 லைகா புரடக்ஷன் தயாரிப்பில், ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை – தோட்டா தரணி. மேலும், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் சந்திரமுகி 2 செப்டம்பர் 15 வெளியாவதாக இருந்தது. ரசிகர்களும் […]

ஐரோப்பா

பாட்டியை கவனித்துக்கொள்வது கஷ்டமாக இருந்ததால் பேரன் செய்த செயல் !

  • September 8, 2023
  • 0 Comments

ஜேர்மனியில், 100 வயதான தனது பாட்டியை கோடரியால் வெட்டிக் கொலை செய்த ஜேர்மானியர் மீதான வழக்கு விசாரணை துவங்கியுள்ளது. Hamburg நகரில் வாழ்ந்து வந்த தனது 100 வயது பாட்டியை கவனித்துவந்துள்ளார் அந்த 37 வயது நபர். ஆனால், அவருக்கு பாட்டியை கவனித்துக்கொள்வது மிகவும் கஷ்டமாக இருந்துள்ளது.தன்னால் சமாளிக்க முடியாத நிலை ஏற்படவே, அவர் தனது பாட்டியை கோடரியால் தாக்கிக் கொலை செய்துள்ளார். மார்ச் மாதம் 6ஆம் திகதி, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மறதி பிரச்சினையால் அவதியுற்ற […]

இலங்கை

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நடத்தப்பட்டது. பிரேரணைக்கு எதிராக 113 எம்பிக்களும் ஆதரவாக 73 எம்பிக்களும் வாக்களித்தனர். மேலும், வாக்கெடுப்பின் போது 38 எம்.பி.க்கள் ஆஜராகவில்லை.

இந்தியா

தெலுங்கானாவில் சக மாணவன் தாக்கியதால் கோமா நிலைக்குச் சென்ற மாணவன்! (வீடியோ)

  • September 8, 2023
  • 0 Comments

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தபோது, மாதிரி தேர்வுத்தாள்களை கேட்டும் கொடுக்காத ஆத்திரத்தில் சக மாணவன் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஹைதராபாத் சதர்காட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தொழிற்கல்வி படித்து வருபவர் சையத் ஆரிப். இவருடைய சக வகுப்பு மாணவனான கைஃப் தேர்வுக்கு படிக்க சில கேள்வி தாள்களைத் தரும்படி கேட்டுள்ளார். அப்போது தனக்கும் தான் தேர்வு இருக்கிறது. அதனால் தர முடியாது என மறுத்துள்ளார். […]