மொரோக்கோவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 296 பேர் உயிரிழப்பு
மொராக்கோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், 296 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நில நடுக்கம் ஏற்பட்ட இடத்தில் மீட்புப்பணி விரைவாக நடந்து வருகிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் அடைந்ததுடன், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கமானது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான வரலாற்றுச் சிறப்புமிக்க மராகேச்சிலிருந்து தென்மேற்கே 44 மைல் (72 கிலோமீட்டர்) தூரத்தில் மையமாக […]