இலங்கை

எந்தவொரு தேர்தலும் ஒத்திவைக்கப்படாது – பந்துல குணவர்த்தன!

  • September 9, 2023
  • 0 Comments

எந்தவொரு தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்காது என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது வேறு எந்தத் தேர்தலையோ அரசாங்கம் ஒத்திவைக்காது என்றும், ஒவ்வொரு தேர்தலும் திட்டமிட்ட திகதியில் சட்டப்பூர்வமாக நடைபெறும் என்றும் கூறினார். இதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  

இலங்கை

கிரிமிட்டிய பகுதியில் நீரோடையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

  • September 9, 2023
  • 0 Comments

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்று (08) இரவு காணாமல்போன ஆண் ஒருவர் இன்று (09) சனிக்கிழமை காலை கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நானுஓயா கிலாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சித்திரபாலன் மகேஸ்வரன்( 49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நீரோடையில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த இடத்திற்கு விரைந்த நானுஓயா பொலிஸார் சடலத்தை மீட்டனர். நானுஓயா கிரிமிட்டி […]

பொழுதுபோக்கு

சொந்த ஊரில் மாரிமுத்துவின் உடல் தகனம்: கதறிய மனைவி

தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து, நேற்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள பசுமலை தேரி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (57). அவரது உடலுக்கு பல்வேறு திரையுலகினர் அஞ்சலி செலுத்திய நிலையில் மாலையில் அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது. இன்று அதிகாலை 3மணி அளவில் தேனி மாவட்ட எல்லையை அவரது உடல் அடைந்ததும் அங்கு காத்திருந்த ஏராளமானோர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது கிராமமான […]

பொழுதுபோக்கு

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் பாடல் வெளியீடு!

  • September 9, 2023
  • 0 Comments

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம்தான் மார்க் ஆண்டனி. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது பாடல் ஒன்றும்  வெளியாகியுள்ளது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த பாடல், தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

பொழுதுபோக்கு

‘லியோ’ படத்திற்கு முன் திரைக்கு வரும் திரிஷாவின் த்ரில்லர் படம் ! வெளியீட்டு திகதி அறிவிப்பு

த்ரிஷா இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் மூலம் திரையுலகில் கலக்கியவர், மேலும் அவரது வரவிருக்கும் பிக்கி ‘லியோ’வில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையில், அவரது மற்றொரு படமான ‘தி ரோட்’ லியோவுக்கு முன் பிரமாண்டமான வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. தி ரோட்டின் வெளியீட்டு திகதி அறிவிப்பு வீடியோவை தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டனர். 30 வினாடிகள் கொண்ட கிளிப் திரிஷாவை ஒரு த்ரில்லர் படத்தில் காட்டுகிறது. தி ரோடு அக்டோபர் 6ஆம் திகதி பெரிய […]

இலங்கை

பிரித்தானியாவில் இருந்து வந்த பெண் வெள்ளவத்தையில் உயிரிழப்பு!

  • September 9, 2023
  • 0 Comments

மவுண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் உயரமான மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று (09.09) காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மவுண்ட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரித்தானிய பெண் வெள்ளவத்தை பகுதியில் வசிக்கும் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் அவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் […]

பொழுதுபோக்கு

நடிகர் மாரிமுத்துவின் இறுதி நிமிடங்கள்… வீடியோ வெளியானது…

  • September 9, 2023
  • 0 Comments

நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து நெஞ்சை பிடித்தபடி வெளியில் வரும் காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவர் இறுதியாக டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து நெஞ்சை பிடித்தபடி வெளியில் வரும் காட்சிகளும், நெஞ்சு வலியுடன் அவர் தாமாக காரை ஓட்டிச் செல்லும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி

இலங்கையில் மழையுடனான வானிலை : ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

  • September 9, 2023
  • 0 Comments

நாடு முழுவதும் 14 மாவட்டங்களில் 6,300 க்கும் மேற்பட்ட மக்கள் தென்மேற்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக   பேரிடர் மேலாண்மை மையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது. அறிக்கைகளின்படி, மோசமான வானிலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட 4,300 க்கும் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் படி, மேல் […]

ஐரோப்பா

அக்ஷர்தாம் கோயிலுக்குச் செல்கிறார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!

ஜி20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஞாயிற்றுக்கிழமை டெல்லி அக்ஷர்தாம் கோயிலுக்குச் செல்ல உள்ளார். இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9, மற்றும் 10 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சனிக்கிழமையே தலைநகர் டெல்லிக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் பிரகதி அரங்கத்தில் கூட்டம் தொடங்கியது. பாரத மண்டபம் பகுதியில் அனைத்து நாட்டின் தலைவர்களையும் […]

இந்தியா

ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது

ஊழல் வழக்கில் தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் புலனாய்வு காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்தியாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்கே ஹாலில் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணியளவில் […]