பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகும் லோகேஷ்

  • September 10, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், புதிய படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். குறைவான பட்ஜெட்டில் வெளியான தமிழ் படங்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த படங்களுள் ஒன்று, மேயாத மான். இந்த படத்தை இயக்கியவர், ரத்ன குமார். கோலிவுட்டின் தற்போதைய ட்ரெண்டிங் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதை ஆசிரியர்கள் குழுவில் இவரும் ஒருவர். லோகியின் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, அமலா பாலை வைத்து ஆடை […]

இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மூலம் முஸ்லிம் சமூகத்தின் உயிரோட்டத்தைப் பறித்துவிட்டார்கள் – முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர்

  • September 10, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உயிரோட்டத்தைப் பறித்தார்கள். இயலாத நிலையில் இறைவனிடமே கையேந்தினோம் இப்பொழுது நீதிக்கான வழிகள் திறக்கின்றன என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார். அஸிஷா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் ஏறாவூர் முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாசலில் இன்று (10) இடம்பெற்ற நிகழ்வில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்பதையொட்டி சுமார் 220 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் […]

பொழுதுபோக்கு

‘மார்க் ஆண்டனி’ படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்தவர் யார் தெரியுமா? வைரல் வீடியோ

  • September 10, 2023
  • 0 Comments

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் புதிய படமான ‘மார்க் ஆண்டனி’க்காக நடிகர்களான விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 80கள் மற்றும் 90களில் இருந்த மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் நுழைவு டிரெய்லரின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும். பீரியட் படம் என்பதால் இவரை ஒரு கேரக்டராக பயன்படுத்தியிருக்கிறார்கள் மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்த நடிகையும் மாடலுமான விஷ்ணுப்ரியா காந்தியை விஷால் அறிமுகப்படுத்தினார். […]

இலங்கை

இலங்கையில் வீடுகளுக்கே சென்று பால் விநியோகிக்கும் வேலைதிட்டம்!

  • September 10, 2023
  • 0 Comments

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த வேலைத்திட்டமானது நாளை (11.09) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் வளாகத்தில் நாளை இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை

அமைச்சுப் பதவி வேண்டாம் – தயாசிறி திட்டவட்டம்!

  • September 10, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சு பதவியை வழங்க அழைப்பு விடுத்தாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள தான் தயாராக இல்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பண்டுவஸ்நுவர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தான் அடுத்தவாரம் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக சிலர் கூறினாலும், தான் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை எனத் […]

உலகம்

பின்லாந்து முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து விலகல்!

  • September 10, 2023
  • 0 Comments

பாராளுமன்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு, லண்டனில் உள்ள டோனி பிளேர் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் சேஞ்ச் நிறுவனத்தில் மூலோபாய ஆலோசகராக சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்லாந்து பிரதமராக பதவியேற்கும் மூன்றாவது பெண் சன்னா ஆவார். சன்னா 2019 இல் தனது 34 வயதில் பதவியேற்றபோது உலகின் இளைய பிரதமர் ஆவார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, பின்லாந்து இராணுவ நடுநிலைமையைக் கைவிட்டு நேட்டோவில் சேர ஒரு வரலாற்று முடிவை எடுத்தது. அவர் இந்த […]

இலங்கை

சுகாதார அமைச்சர் போலியான மருந்துகள் இறக்குமதி செய்து தனது பொக்கட்டுக்களை நிறப்பி உள்ளார்-செல்வம் அடைக்கலநாதன் MP

  • September 10, 2023
  • 0 Comments

மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் தற்போதைய சுகாதார அமைச்சர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு,இளமையான புதிய ஒருவர் சுகாதார அமைச்சராக நியமிக்கும் பட்சத்திலேயே இந்த பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது நாட்டை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.இதனால் எமது மக்கள் பல்வேறு […]

இந்தியா

பிரேசிலிடம் கையளிக்கப்பட்ட தலைமை பொறுப்பு..

  • September 10, 2023
  • 0 Comments

டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது. இந்தியாவிடமிருந்து ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பெற்றுக்கொண்ட பின் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா கூறுகையில், பிரேசிலின் தலைமையிலான ஜி20 கூட்டமைப்பு 3 முக்கியத்துவங்களை கொண்டுள்ளது. 1. சமூக ஒன்றிணைப்பு மற்றும் பட்டினிக்கு […]

இந்தியா

சந்திரபாபு நாயுடு கைது: நெல்லூர் மாவட்டம் ராஜமுந்திரி பகுதியில் 144 தடை உத்தரவு!

  • September 10, 2023
  • 0 Comments

திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி மோசடி செய்தது தொடர்பான வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு (73) நேற்று அதிகாலை மாநில சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் இன்று (செப்டம்பர் 10) விஜயவாடா ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சந்திரபாபு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டதாவது: ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது இந்த மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. நிதி முறைகேடு […]

இலங்கை

இலங்கை தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • September 10, 2023
  • 0 Comments

தபால் திணைக்களம் அதன் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஊடாக எந்தவொரு ஒன்லைன் பரிவர்த்தணைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்தின் இணைய முகவரியை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மோசடி நபர்களிடம் இருந்து வங்கிக் கணக்குகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு தபால் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.