ஏ.ஆர்.ரஹ்மான் மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்
சென்னையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியைப் பலரும் குறைகூறியுள்ளனர். நேற்று இந்த நிகழ்ச்சியில் சென்னையில் இடம்பெற்றுள்ளது. இன்று காலையிலிருந்தே டுவிட்டர் தளத்தில் இசை நிகழ்ச்சியைப் பற்றி கருத்துகள் பரவலாகி வருகின்றன. இசை மழையில் நனையச் சென்ற ரசிகர்களுக்குக் காத்திருந்ததோ மறக்கவே முடியாத அனுபவம். மோசமான நிர்வாகத்தை அவர்கள் சுட்டினர். மேடையிலிருந்து தூரத்தில் அமர்ந்திருப்போருக்கு இசை கேட்கவில்லை. மிதமிஞ்சிய கூட்டம்.. அதனால் தங்களுக்கு ஏற்பட்ட பதற்றத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அவருடைய தீவிர ரசிகர்களாக இருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மானின் […]