இலங்கை

வெளிநாட்டிலுள்ள இலங்கை பணியாளர்களால் அனுப்பப்பட்ட பணம் ! அமைச்சர் வெளியிட்ட தகவல்

மே மாதம் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை ஊழியர்கள் அனுப்பிய பணத்தின் பெறுமதி 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில், மொத்த வெளிநாட்டு பணவனுப்பல் 1.335 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு மே மாதம் வரை வெளிநாட்டு ஊழியர்களால் 2.347 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை அடைய […]

உலகம்

இளவரசர் வில்லியம்ஸ் எதிரில் அணி வகுப்பின் போது மயங்கி விழுந்த வீரர்கள்

பிரித்தானியா இளவரசர் வில்லியம்ஸ் முன் அணி வகுப்பில் ஈடுபட்ட குதிரைப்படை வீரர்கள் வெப்பம் தாங்க முடியாது சுருண்டு விழுந்துள்ளனர். வருடாந்த Trooping the Colour என்ற நிகழ்ச்சியை முன்னிட்டு இளவரசர் வில்லியம்ஸ் முன் ஒத்திகை அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஒரே நேரத்தில் 3 வீரர்கள் சுருண்டு விழுந்தனர். அப்போது லண்டனில் வெப்பநிலை 30 டிகிரியை தாண்டியதால், வீரர்கள் வெப்பம் தாங்க முடியாமல் கீழே விழுந்தனர். Trooping the Colour மன்னரின் உத்தியோகபூர்வ பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் […]

பொழுதுபோக்கு

வயது 50க்கு மேல்… 6 மாதத்திற்கு ஒரு Boy… பகீரை கிளப்பும் ட்வீட்

  • June 11, 2023
  • 0 Comments

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து பான் இந்திய நடிகையாக வலம் வரும் நடிகை தபுவுக்கு 51 வயதாகிறது. ஆனால், இதுவரை அவர் திருமணமே செய்துக் கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், நடிகை தபு இந்த வயதிலும் 6 மாதத்துக்கு ஒருமுறை பாய் ஃபிரெண்டை மாற்றி வருகிறார் என உமைர் சந்து போட்டுள்ள ட்வீட் பகீரை கிளப்பி உள்ளது. பாலிவுட் படங்கள் தொடர்ந்து சொதப்பி வந்தாலும், தபு நடிக்கும் படங்கள் என்றாலே அந்த […]

இந்தியா

இந்தியா – பாகிஸ்தான் முறுகலுக்கு தீர்வு எட்டப்பட்டது!

2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்த கலப்பு முறையில் நடத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தானில் போட்டிகளை நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் ஜெய் ஷா ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் நாளை மறுதினம் தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பை தொடர் எப்படி நடத்தப்படும் என்பதில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முட்டுக்கட்டை நிலவியது. இருப்பினும், இப்போது இந்திய […]

manasa புகைப்பட தொகுப்பு

ஹேர் சலூனை திறந்து வைத்த சன் டிவி தொடர் இனியா நடிகை மானசாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்

  • June 11, 2023
  • 0 Comments

Credit:Insta/alya_manasa ஹேர் சலூனை திறந்து வைத்த சன் டிவி தொடர் இனியா நடிகர் மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில அந்த விடியோவை பதிவு செய்து இருக்கிறாங்க. View this post on Instagram A post shared by alya_manasa (@alya_manasa) alya_manasa suntv iniya actress alya_manasa alya_manasa alya_manasa

ஆசியா இந்தியா

பாக்கிஸ்தனின் வான் பரப்புக்குள் நுழைந்த இந்திய விமானம்

  • June 11, 2023
  • 0 Comments

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான விமான போக்குவரத்து பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இரு நாடுகளும் தங்கள் வான்பரப்பை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளன. இந்நிலையில், இந்தியாவின் இண்டிகோ விமானம் நேற்று இரவு பாகிஸ்தான் வான் எல்லைகுள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நோக்கி நேற்று இரவு இண்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென பாகிஸ்தான் வான்பரப்பிற்குள் நுழைந்தது. இரவு 7.30 மணி முதல் […]

இந்தியா

இந்திய கடற்படையின் பிரம்மாண்ட போர் பயிற்சி: 2 போர்க் கப்பல்கள், 35 போர் விமானங்கள் பங்கேற்பு

இந்திய கடற்படை சார்பில் அரபிக்கடலில் பிரம்மாண்ட போர் பயிற்சி நடத்தப்பட்டது. 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள், 35-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இந்த போர் பயிற்சியில் பங்கேற்றன. அண்மை காலமாக இந்திய பெருங்கடலில் கால்பதிக்க சீனா தீவிர முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான், மியான்மர், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் துறைமுக மேம்பாட்டு திட்டங்கள் என்ற பெயரில் மறைமுகமாக சீனாவின் கடற்படைத் தளங்களை அமைக்க அந்த நாடு தீவிரம் காட்டி வருகிறது. சீனாவின் சதித் திட்டங்களை ராஜ்ஜிய […]

இந்தியா

இந்தியாவில் கோடிகணக்கில் மக்கள் நீரிழிவு நோயால் பாதிப்பு! மருத்துவ ஆய்வில் தகவல்

நீரிழிவு நோயாளிகள் குறித்த ஆய்வு ஒன்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் இணைந்து நடத்தின. நாடு முழுவதும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 43 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் உலகப் புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் 10 கோடியே 10 லட்சம் பேர் உள்ளனர். 13 கோடியே 60 லட்சம் பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளனர். இது நாட்டின் மக்கள்தொகையில் […]

வட அமெரிக்கா

ரஷ்யாவின் சரக்கு விமானத்தை சுவீகரித்துள்ள கனடா

  • June 11, 2023
  • 0 Comments

கனடிய அரசாங்கம், ரஸ்யாவின் சரக்கு விமானமொன்றை சுவீகரித்துள்ளது. கனடாவின் றொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் தரித்து நின்ற சரக்கு விமானமே இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவில் பதிவு செய்யப்பட்ட குறித்த சரக்கு கப்பல் கடந்த ஓராண்டு காலமாக கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் தரித்து நிற்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அன்டனோவ் 124 ரக விமானமொன்றே இவ்வாறு கனடிய அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.இந்த சரக்கு விமானத்தின் உரிமையைக் கொண்டிருக்கும் இரண்டு நிறுவனங்களும் கனடாவில் தடை செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீதான படையெடுப்பு […]

செய்தி

இலங்கை செல்வதற்கு அனுமதிகோரி மோடிக்கு சாந்தன் கடிதம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன், தமக்கு இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். திருச்சியில் உள்ள இலங்கை ஏதிலிகள் முகாமில் தங்கியுள்ள சாந்தன், தான் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் முகாமில் வைக்கப்பட்டிருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக […]

You cannot copy content of this page

Skip to content