தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும்! சி.சிறிதரன்
தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும், அதுதான் மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்.தைட்டியில் இன்று இடம்பெற்ற காணி அளவீட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”தையாட்டி விகாரை காணியை அளவீடு செய்து விகாரைக்கு வழங்குவதற்கான முயற்சிகள் இன்று மேற்கொள்ளப்படுகின்ற போது அதனை தடுத்து நிறுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல பேர் […]