தொலைபேசியில் பேச இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் அனுமதி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது மகன்களுடன் செப்டம்பர் 15ஆம் தேதி வரை தொலைபேசியில் பேச அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) தலைவர், தனது வழக்கறிஞர்கள் மற்றும் அவரது மகன்களுடன் பேச வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வருகிறார். இம்ரான் கானின் வழக்கறிஞர்களில் ஒருவரான ஷீரஸ் அகமது ரஞ்சா, பிடிஐ தலைவருக்கும் அவரது மகன்களுக்கும் இடையே தொலைபேசியில் பேச அனுமதிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், […]